இடுகைகள்

ஆன்மீக அரசியல்: ரஜினியின் இடத்தில் ராஜா

  அரசியல் என்பது மக்களைத் திரளாகப் பார்த்து அவர்களின் வாழ்வியல் சிக்கலில் மாற்றங்களை ஏற்படுத்தி, ஈடேற்றுவதற்காகச் செய்யும் திட்டங்களும் செயல்பாடுகளும். ஆனால் ஆன்மீகம் தனிமனிதர்களை - அவர்களது மனச்சிக்கலிலிருந்து விடுவித்து ஈடேற்றம் செய்வதற்கான வினைகள் சார்ந்தது. அது நம்பிக்கைகள், சடங்குகள், வழிபாடுகள், மனமாற்றங்கள் சார்ந்தது. ஆன்மீகத்தையும் அரசியலையும் இணைத்துச் செய்யப்படும் அரசியல் தவறானது என்பது மக்களாட்சி அரசியல். ஆன்மீகத்தையும் அரசியலையும் கலக்கும் அரசியலைத் தவறானது எனச் சுட்டிக்காட்டுவதே நவீன அரசியல்.

டாணாக்காரன் – வணிகச் சட்டகத்திற்குள் பொறுப்பான சினிமா

படம்
பொதுவாக நான் எழுதும் சினிமா விமரிசனத்தில் இந்தப் படத்தைப் பார்க்கத் தவறாதீர்கள் எனப் பரிந்துரை செய்வதில்லை. ஆனால் அதை இப்போது மாற்றிக்கொண்டு டாணாக்காரன் சினிமாவை அனைத்துத் தரப்பினரும் பார்க்க வேண்டும் எனப் பரிந்துரை செய்கிறேன். குறிப்பாகக் காவல் துறையில் பணியில் இருப்பவர்களும், காவல் துறைப் பணிகளில் சேர விரும்புகிறவர்களும் கட்டாயம் பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இந்தப் படம் வெளிப்படுத்தும் விவாத முறை, சமூகப் பார்வை, கலையியலை விட்டு விலகாத நேர்மை ஆகியன உணரப்பட்ட நிலையில் பின்னோக்கிய நிகழ்வொன்றைச் சொல்லி எனது பரிந்துரையைத் திரும்பவும் சொல்லத் தோன்றுகிறது. அந்நிகழ்வைப் பின்னர் குறிப்பிடலாம். இப்போது படத்தைப்பற்றிப் பேசலாம். திட்டமிட்ட இயக்கம் காவல் துறை என்று குறிப்பிட்ட துறைசார்ந்த சினிமா என்ற எல்லையை உருவாக்கிக் கொண்டுள்ள இயக்குநர், திரைக்கதையாக்கம், காட்சிக் கோர்வைகள் உருவாக்கம், அவற்றுக்குள் அசையாப் பொருட்களையும், அசையும் பொருட்களையும் நடிகர்களையும் பொருத்தமுறக்காட்டுதல், நடிகர்களைப் பாத்திரங்களாக மாற்றும் உடல் மொழியின் அளவு, உரையாடல்களில் கவனம் என ஒவ்வொன்றையும் கச்சிதமாக...

தமயந்தியின் காயல் - பிரிவுத்துயரின் வலைப்பின்னல்

படம்
தமயந்தியின் முதல் படம் தடயம். வணிக சினிமாவின் சூத்திரங்களைப் புறமொதுக்கி விட்டு, ஆண் – பெண் உறவின் எதிர்பார்ப்புகளையும் நுட்பமான தவிப்புகளையும் முன் வைத்த படம். தனது சினிமாவின் விவாதப்பொருளில் மாற்றுத் தளத்தைத் தேர்ந்தெடுத்தது போலவே தயாரிப்பு, இயக்கம் ஆகியவற்றிலும் அந்தப் படத்தில் தனக்கென ஒரு மாற்றுத் தடத்தில் பயணம் செய்திருந்தார்.

ஒரு வினாவும் விடையும்

படம்
இந்துத்துவம் சமயநடவடிக்கைகளை ஆன்மீகமாக முன்வைத்து ஆன்மீக அரசியல் செய்வதுபோல, அதனை மறுப்பவர்கள் வள்ளலார், வைகுண்டசாமி, நாராயணகுரு போன்றவர்களின் ஆன்மீகத்தைக் கைக்கொண்டு அரசியலுடன் இணைத்து மாற்று ஆன்மீக அரசியல் செய்யலாமே? ஏன் நாத்திகத்தை முன்மொழிந்து அரசியல் செய்யவேண்டும்?

கடைசி விவசாயி - கலையியல் முழுமையும் கருத்தியல் குழப்பங்களும்

படம்
  சினிமா, காட்சி வழியாகப் பார்வையாளர்களோடு தொடர்புகொள்ளும் கலைவடிவம் என்பதை முழுமையாக நம்பி எடுக்கப்பட்ட தமிழ் சினிமாக்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. எனது சினிமா ‘பார்க்கும்’ பழக்கம் தொடங்கிய காலத்திற்குப் பின் எடுக்கப்பட்ட சினிமாக்களிலிருந்து ஒரு பட்டியலைத் தரலாம்:

ஏற்பின் விளைவுகள்

 எ னது திறனாய்வுப்பார்வை எழுத்தின் அடிப்படைக்கட்டுமானங்கள் - காலமும் இடமும் கருப்பொருளும் உரிப்பொருளுமான - மூன்றின் இயைபுப் பொருத்தம் குறித்து முதலில் கவனம் செலுத்த வேண்டும் என்பது தொல்காப்பிய இலக்கியவியல் கற்றுத்தந்துள்ள பாடம். இந்த இயைபுப் பொருத்தத்தையே காலம், இடம், பாத்திரங்களின் வினை ஆகியவற்றின் ஓர்மை (Unity of Time, Space and Action)யென அரிஸ்டாடிலும் சொல்கிறது என்பதும் நான் கற்றுத்தேர்ந்த திறனாய்வு அறிவே.

சுரேஷ்குமார் இந்திரஜித்தின் நுண்கதைகள்

படம்
சிறுகதை வடிவத்திலிருந்து நுண்கதை வடிவத்தின் முதன்மையான வேறுபாடு, வெளியையை எழுதுவதில் இருப்பதாகத் தோன்றுகிறது. கதாபாத்திரங்கள் உலவும் புனைவு வெளியை விரிவாக எழுதுவதற்கு நுண்கதை வடிவத்தில் வாய்ப்பில்லை. ஒன்று அல்லது இரண்டு பாத்திரங்களைக் கதைக்குள் உலவிவிட்டு, அவர்களிடையே ஏற்படும் முரணுக்குப்பின்னால் எழும் மனப்போராட்டங்களையும் உளவியல் சிக்கலையும் எழுதுவதற்கு ஏற்ற வடிவமாக நுண்கதைகள் இருப்பதைத் தொடர்ந்த வாசிப்பில் உணரமுடிகிறது.