இடுகைகள்

தேர்வுகள்- தேர்வுகள்- எழுதும் தேர்வுகள்

நாம் நமது மாணவர்களின் அறிவை மதிப்பெண்களின் வழியாக அளவிடுகிறோம். மதிப்பெண்களை வழங்குவதற்கு நாம் பின்பற்றும் முதன்மையான முறை தேர்வுகள். அறிவின் அளவைத் தீர்மானிப்பதில் தேர்வுகளின் இடம் தவிர்க்கமுடியாதவைதான். ஆனால் தேர்வுகள் - எழுத்துத்தேர்வுகளும் மதிப்பெண்களும் மட்டுமே அறிவை அளக்கும் கருவிகள் அல்ல. நமது நாட்டில் பின்பற்றும் தேர்வுகளும் மதிப்பெண்களும் இளம்வயதினரை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்வதற்குப் பதிலாகப் தடுத்து நிறுத்த - பின்னால் தள்ளிவிட நினைக்கும் ஒருமுறையாக இருக்கிறது.  மதிப்பெண்களின் எதிர்மறைத் தன்மை கருதியே உலகநாடுகள் பலவும் மதிப்பெண்களுக்குப் பதிலாக, மதிப்பலகுகளால்  -Credits- மாணாக்கர்களின் நிலையைக் குறிக்கின்றன. நேற்று இந்திய ஒன்றிய அரசு ஏற்றுக்கொண்டுள்ளதேசியக் கல்விக்கொள்கை -2020 அடுத்தடுத்துத் தேர்வுகளைப் பரிந்துரைத்துள்ளது.

தன்மைக்கூற்றின் பலவீனம்: நோயல் நடேசனின் கதையொன்றை முன்வைத்து ஒரு விசாரணை

படம்
 ” இராமேஸ்வரத்திலிருந்து உங்களுரில்   அநேக ஆவிகள் சுற்றித் திரிவதை   என்னால் பார்க்க முடிகிறது . அவற்றில் நல்ல ஆவிகள் மற்றும் தீய ஆவிகள் என இரண்டு பிரிவுகள் உண்டு. அவை அனைத்துமே மரணம் அடைந்தவர்களின் ஆவிகள். ஒருவர் மரணம் அடைந்துவிட்ட பின்பு ,  அவர்கள் உடலில் இருந்து வெளியேறும் ஜீவன் ,  உடனேயே இன்னொரு பிறவி எடுக்க முடியாது. மறுபிறப்படைய வழக்கமாக ஒரு வருடகாலமாகும் . இந்த   மறுபிறப்பிற்காகவே திதி செய்கிறோம் . ஆனால் ,  நீங்கள் பலருக்குச் செய்யவில்லை. அதனால் அவை ஆத்மாக்களாகவே   சுற்றித்திரியும் . எண்ணிக்கைகள் கட்டுப்படுத்த முடியாத அளவு உங்கள் ஊரில் உள்ளன. இதில்   கெட்ட ஆத்மாக்கள்   நாட்டுக்கும் சமூகத்திற்கும் மறைமுகமாகக் கெடுதலை செய்யும். தற்போது உங்களூரில் போரில்லை என்பது உண்மை ,  ஆனால் ,  அமைதியில்லை. கெட்ட ஆத்மாக்களின் தீவினை இன்னமும் பலமாக உள்ளது. அவைகளே ஆபத்தானவை”

தன்னை முன்வைத்தலின் ஒரு வகைமாதிரி

படம்
  “ பெண் முதலில் தன்னைக் கவனிக்கிறாள்; பிறகு மற்றவரைக் கவனிக்கிறாள்” . இதன் நீட்சியாகப் பெண்ணெழுத்து என்னும் அடையாளத்தோடு வரும் கவிதைகளில் முதலில் பெண் தன்னிலையை எழுதிக்காட்ட நினைக்கிறார்கள்; அதன் தொடர்ச்சியாகவே மற்றவர்களை முன்வைக்கிறார்கள். இந்தக் கருத்து பெண்ணெழுத்துகளைத் தொடர்ச்சியாக வாசிக்கும் ஒருவருக்கு     உருவாக வாய்ப்பிருக்கிறது.

நினைவில் இருக்கும் ஞானி

படம்
விசுவபாரதி நடுவண் பல்கலைக் கழகத்   தமிழ்த்துறையும், பனாரஸ் இந்துப் பல்கலைக் கழகத்தின் இந்திய மொழிகள் துறையும் சேர்ந்து நடத்திக் கொண்டிருக்கும்   இணைய உரையரங்கத் தொடரின் 10 -வது உரையை இன்று( 22-07-2020) முற்பகல் 11.00 மணி தொடங்கி முகநூல் நேரலையில் கேட்டுக் கொண்டிருந்தேன். தமிழ் இலக்கியத் திறனாய்வு-இயக்கங்களும் கோட்பாடுகளும் என்ற தலைப்பிலான     உரையைப் பஃறுளி பிரவீன் நிகழ்த்திக்கொண்டிருந்தார்.     அவரது பெயரைக் குறிப்பிட்டுத் தமிழ்த்திறனாய்வில் அவரது பார்வை மற்றும் பங்களிப்புகள் பற்றிப் பகல் 12 மணியளவில் பிரவீன் பேசிக்கொண்டிருந்த நேரத்தில் ஞானியின் மரணம் நிகழ்ந்திருக்கும் என்றே நினைக்கிறேன். எப்போதாவது இப்படிச் சில மரணங்களுக்குத் தற்செயலான இணைநிலைகள் ஏற்பட்டுவிடுவதுண்டு. அப்படியான அனுபவங்கள் பலருக்கும் ஏற்பட்டிருக்கலாம். எனக்கு இன்று மட்டுமல்ல; இதற்கு முன்னும் சில மரணங்களின் போது அவர்களின் பெயரைக் காதில் கேட்டுக் கொண்டிருந்திருக்கிறேன்.

அக உலகத்துப் பெண் பிரதிமைகள் : பிரமிளா பிரதீபனின் இரண்டு கதைகளை முன்வைத்து

படம்
இலங்கையின் மலையகப் பின்னணியில் தனது முதல் நாவல் – கட்டுபொல்– மூலம் பரவலான அறிமுகம் பெற்ற பிரமிளா பிரதீபன் கவனமான இடைவெளியுடன் சிறுகதைகளை எழுதிவருகிறார். அவர் எழுதிய கதைகளைப் பெரும்பாலும் வாசித்திருக்கிறேன். ஒரு கதைக்கும் இன்னொரு கதைக்கும் இடையே கால இடைவெளியை உண்டாக்கிக் கொள்வதோடு பேசுபொருள், பேசும் முறை, எழுப்பும் உணர்வுகள் என எல்லா நிலையிலும் புதியனவற்றுக்குள் நுழைகிறார். தனது வாசகர்களுக்கான வாசிப்புத் திளைப்பை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறார். இப்படியான கதைகளை மட்டுமே எழுதுபவர் என்ற அடையாளத்தை உருவாக்காமல் வேறுபட்ட கதைகளைத் தரக்கூடியவர் என்பதைக் காட்டுகின்றன அவரது சிறுகதைகள்.

தேர்தல் கால அலைகள்: உருவாதலும் உருவாக்கப்படுதலும்

திசை திருப்பல்கள் கொரோனாவும் அது உண்டாக்கியுள்ள நகர்வற்ற வாழ்க்கையும் நம் கண்முன் உள்ள சிக்கல்கள். இந்த நேரத்தில் மத்திய அரசும் மாநில அரசும் செய்யவேண்டிய பணிகளும் உதவுகளும் இவைதான் என்று சொல்லமுடியாத அளவுக்குப் பெருகிக்கொண்டே இருக்கின்றன. அதற்கு மாநில அரசு ஓரளவு முகம் கொடுக்கிறது. ஆனால் மத்திய அரசோ வழிகாட்டுதல்கள் வழங்குவதாகச் சொல்லிப் போதனைகளை வழங்கிக் கொண்டிருக்கிறது.

அரங்கியல் அறிவோம் 5 நடிப்புப்பயிற்சிகள்

நடிப்பவர்களுக்கான குறிப்புகள் -ஸ்டானிஸ்லாவ்ஸ்கி நடிகர் உண்மையான கலைஞனாக உண்மையான ஒரு கலைஞர், ஆச்சரியமான வாழ்வின் பல்வேறு நிலைகளிலும் ஆர்வம் கொண்டவராக விளங்கவேண்டும். அவர் தனது வாழிடத்தில் என்ன நடக்கிறது என்று தெரிந்துகொண்டால் மட்டும் போதாது. அவர் வாழிடம் பெருநகரமாக இருக்கும் நிலையில் சிறுநகரங்கள், கிராமங்கள், தொழிற்சாலைகள், வயல்கள், பண்பாட்டு மையங்கள் என அவனது எல்லைக்குள் வரும் இடங்களில் நடப்பனவற்றையும் அறிந்து கொள்ளவேண்டும். தன்னைச் சுற்றி வாழும் மனிதர்களின் உளவியல் பிரச்சினைகளை – தன் வீட்டிலும் நாட்டிலும் பிறநாடுகளிலும் எனப் படிக்கவேண்டும். நமது காலத்தின் பல்வேறு மனிதர்களையும் நடிப்பதற்கு, பரந்த நிலையிலான நோக்குநிலையும் பார்வைப் பரப்பும் அவசியம். சமகால மனிதர்களின் உளவியலையும், பொருளியல் வாழ்வையும், ஆத்மநிலைகளையும் அறிந்தவனாக இருப்பது அவசியம். தனது கலையில் நிபுணனாக.. ஒரு நடிகர் உலகு தழுவிய நம்பிக்கைகளையும் மனிதம்சார்ந்த வெளிப்பாடுகளையும் உள்வாங்கி வெளிப்படுத்துபவராக இருக்கவேண்டும். இதுவே ஒரு நடிகரின் /நடிகையின் சிறந்த சக்தியும் உத்தியும் ஆகும். அற்புதமான உணர்வுகளைத் தீவிரமான உணர்ச்சிக...