இடுகைகள்

உயர் கல்வி நிறுவனங்கள்

படம்
தரம் உயர்த்திக்கொள்ளல் ----------------------------------------- நான் பணியாற்றும் திருநெல்வேலி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் தேசிய தர உறுதி மற்றும் மதிப்பீட்டுக் குழுவின் (NAAC) மதிப்பீட்டின்படி நான்கிற்கு 3.13 புள்ளிகள் பெற்று A - தரநிலையை அடைந்துள்ளது. இதற்கு முன்பு அதன் தரம் 'B'. இந்தத் தர உயர்வு ஒற்றைப்புள்ளி உயர்வு அல்ல. ஒரு தாவல். B என்ற தரநிலைக்கு அடுத்து B+, B++ என்று இரண்டு நிலைகள் உண்டு. இந்த இரண்டையும் தாண்டி A -என்ற தரநிலைக்குத் தாவியுள்ளது.

ஒரு அரங்கப்பட்டறை நினைவுகள் - பிரபாகர் வேதமாணிக்கம்

படம்
  1993ஆம் ஆண்டு அமெரிக்கன் கல்லூரியில் முதன் முறையாக ஒரு நாடகப் பயிலரங்கைத் திட்டமிட்டோம். நண்பர்கள் அ.ராமசாமியும் சுந்தர்காளியும் அந்த பயிலரங்கை வடிவமைத்தார்கள். நான் உடனிருந்தேன். நான் அப்போதுதான் ஒரு பயிலரங்கை அருகிருந்து பார்க்கிறேன்.

திலகா அழகு: ஆற்றியிருத்தலும் ஆற்றாதிருத்தலுமான பெண்ணுடல்கள்

படம்
நான் எழுதும்  ஒரு நூலுக்கான முன்னுரையில் அவர்  புதியவராக இருக்கும் நிலையில்  அவர்கள் இயங்க நினைக்கும் இலக்கியப்பரப்புக்குள் அறிமுகப்படுத்த நினைக்கின்றேன். ஏற்கெனவே இயங்குபவர்களாயின் அவர்களின் தனித்துவம் எதுவென அறிந்து வாசகர்களிடத்தில் விவாதிக்கத் தூண்டுகின்றேன். மௌனம் தின்னும் என்னும் தொகுப்போடு வந்திருக்கும் திலகா அழகு புதியவர். அவரது வருகையைக் கவிதைப்பரப்பிற்குள் அறிமுகம் செய்வதே இங்கு நோக்கம்

அழிபடும் அடையாளங்கள்

படம்
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகத் தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் ஒருவித வெறியுடன் கேட்கிறது அந்தச் சத்தம். தொலைக்காட்சியின் எந்தத் தமிழ்சேனலைத் திருப்பினாலும் அரைமணி நேரத்திற்குள் அந்தச் சத்தம் செவிப்பறையைத் தாக்குகிறது. கட்சிக் கூட்டங்கள், கல்யாண மண்டபங்கள் என எங்கும் இந்தச் சத்தம்தான். சட்டசபையின் இரைச்சல்களுக்கு ஊடே இந்த சத்தமும் கேட்டது. ஏன் போடுகிறோம் என்று தெரியாமலேயே தமிழா்கள் “ஒ” போடுகிறார்கள்.

பெண்மொழியின் மீறல்கள்: தமிழ்க்கவியின் பாடுபட்ட சிலுவையள்

படம்
  உலகில் மொழியின் தோற்றம் பற்றிய ஆய்வு, நீண்டகாலமாக நடக்கும் ஒன்று. மனிதத் தோற்றம் பற்றிய தேடலோடு மொழியின் தோற்றம் பற்றிய தேடலும் இரட்டை மாட்டு வண்டியின் சக்கரப்பதிவுகள். உலகப்பரப்பில் மனிதர்களின் தோற்றம் எங்கு நிகழ்ந்ததோ அங்குதான் மொழியின் தோற்றமும் நிகழ்ந்திருக்கும் என்பது மொழியியலாளரின் கருத்து. 

கடந்த காலத்தின் பெண்கள்:எம்.ஏ.சுசிலாவின் ஊர்மிளை

படம்
மனித வாழ்க்கை என்பது ஒற்றை நிலை கொண்டதல்ல. அதற்குள் முதன்மையாக இரட்டைநிலை உருவாக்கப்படுகிறது. இரட்டைநிலை உருவாக்கம் என்பது மனித உயிரியின் பெருக்கமும் விரிவாக்கமும் மட்டுமல்ல. அனைத்துவகை உயிரினங்களும் பெண் -ஆண் என்னும் பாலியல் இரட்டை வழியாகவே நிகழ்கின்றன. உயிரியல் அறிவாக நாம் விளங்கியிருக்கும் இவ்விரட்டையின் ஒவ்வொரு பக்கமும் இன்னும் இன்னுமாய் இரட்டைகளை உருவாக்கிப் பலநிலைகளை உருவாக்குவதன் மூலம் எண்ணிக்கையில் விரிகிறது.  

தொடர்ச்சியான பேச்சுகள்....

படம்
காலம் இதழின் வாசகர்களுக்கு உங்களை அறிமுகம் செய்யவேண்டியதில்லை இருந்தபோதிலும் காலம் படிக்கப்படும் -விவாதிக்கப்படும் தமிழ்ச்சிந்தனை வெளிக்கு உங்களை எப்படிக் காட்டிக்கொள்ள விரும்புகிறீர்கள். முன்பெல்லாம் என்னையொரு எழுத்தாளன் என்று சொல்லிக்கொள்வதில் ஆர்வத்தோடு இருந்தேன். அதற்காக வாதாடியிருக்கிறேன். இப்போது அப்படி நினைக்கவில்லை.