இடுகைகள்

பராசக்தி: நல்லதொரு அரசியல் சினிமா

படம்
வணிகப்படத்தின் கட்டமைப்புக்குள் நின்று ஏற்கத்தக்க அரசியல் சினிமாவைத் தந்துள்ள இயக்குநர் சுதா கொங்கரா பாராட்டுக்குரியவர். இந்திய அளவில் நடந்த சுதந்திரப்போராட்டத்தை விடவும் தமிழ்நாட்டில் அதிகம் தாக்கம் செலுத்திய போராட்டம் இந்தி எதிர்ப்புப் போராட்டம். அதனைக் குறித்த நல்ல நாவல்களோ, நாடகங்களோ, கவிதைகளோ எழுதப்படவில்லை; நல்லதொரு சினிமா கூட வரவில்லை என்ற கருத்தும் வருத்தங்களும் இருந்தன. அதனை முழுமையாகத் தீர்க்கும் விதமாக வந்துள்ளது பராசக்தி படம்.

சந்திரா ரவீந்திரனின் செம்பொன்: சாட்சியம் சொல்லும் எழுத்து

படம்
  கடந்த காலத்தை எழுதிக்காட்டுதல் என்பதைக் கடந்த காலத்திற்குள் மறுபயணம் செய்வது என அர்த்தப்படுத்திக் கொள்ளவேண்டும். நிகழ்த்தும் காலத்தில் வாழும் பார்வையாளர்களை மனதில் கொண்டு அவர்களை நோக்கிப் பேசும் / நிகழ்த்திக் காட்டும் நாடகக்கலை மேடையில் தோன்றும் வரலாற்றுப்பாத்திரங்களைக் கூட நிகழ்காலத்திற்குரியவர்களாக மறுவிளக்கம் செய்தே மேடையேற்ற முயல்கிறது என்பார்கள் அரங்கவியலாளர்கள்.

வாசிப்பின் அடுக்குகளுக்குள் பயணித்தல்

படம்
எழுதப்படும் ஒரு பனுவலின் போக்கில் “மேற்கோள்” குறிக்குள் இடப்படும் ஒரு சொல் வழக்கமான பொருளிலிருந்து குறிப்பான பொருளொன்றுக்கு நகர்கிறது. அந்த நகர்வின் மூலம் எழுதுபவர் வாசிப்பவர்களின் கூடுதல் கவனத்தையும் நிதானமான வாசிப்பையும் கோருகிறார் எனக்கொள்ள வேண்டும்.

ஜெயமோகனின் கட்டுரைக்கு எதிர்வினையும் அவரது மாடன் மோட்சமும்

படம்
ஜெயமோகனின் தன்முனைப்பு தான் பங்கேற்கும் செயல்பாடுகளைச் சரியென வாதாடுதல், தனது கலை, இலக்கியப்பார்வையும் திறனாய்வு முறையும் மட்டுமே அப்பழுக்கற்றது எனத் தன்னை முன்னிறுத்துதல் எப்போதும் அவரிடம் உண்டு. தான் எழுதத் தொடங்கியவுடன் வெகுஜன இதழியலின் தேவையை நியாயப்படுத்தியது தொடங்கி, தான் வசனம் எழுதியவுடன் தமிழ்ச் சினிமாவின் நேர்மறைத் தன்மையைப் பாராட்டியது வரை நடந்தவை தான். இப்போது அவரது 'மாடன் மோட்சம்' கதை மலையாளத்தில் நாடகமாக்கப்பட்டு நிகழ்த்தப்பட்டுள்ளது.

ஆண்டின் கடைசி நாளிலிருந்து இன்னொரு ஆண்டின் முதல் நாளுக்கு

2026 ஆம் ஆண்டை இதற்கு முந்திய ஆண்டு போல நகர்த்தக் கூடாது என்று நினைக்கிறேன். அதனை உறுதி ஏற்பு என்று சொல்லத்தோன்றவில்லை. 1980 ஆம் ஆண்டிலிருந்து எழுதி வரும் எனக்கு தொடர்ச்சியாக ஒன்றில் ஆழமாக எழுதிப் புதையும் மனநிலை இல்லை என்று 45 ஆண்டுகளுக்குப் பின்னர் உறைக்கின்றது. அந்த மனநிலை இருந்திருந்தால் தொடங்கிய நாவல்களை முடித்திருக்கலாம். எழுத நினைத்த இன்னும் சில நாடகங்களை எழுதி நூலாக்கியிருக்கலாம். என்னிடம் இருப்பது தாவித்தாவிச் செல்லும் மனநிலை என்று புரிந்திருக்கிறது. இதைக் கைவிட வேண்டும் என நினைக்கிறேன். அரசியல், சினிமா, நாடகம், இலக்கியம், ஊடகக் கவனம் என அவ்வப்போது எழுதித் தாண்டியிருக்கிறேன் கடந்த காலத்தை.