இடுகைகள்

#bnwtamil சாகித்ய விருது சர்ச்சை? வேங்கடாசலபதிக்கு தகுதி இல்லையா? பேராசி...

படம்
இலக்கியத்திற்கான இந்திய அரசின் உயர் அமைப்பு சாகித்ய அகாடெமி. ஆண்டுதோறும் அவ்வமைப்பு வழங்கும் விருதுகள் மீது பல்வேறு எதிர்வினைகள் எழுவது வாடிக்கை. இந்த ஆண்டும் அத்தகைய விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அத்தகைய விவாதமாகக் கறுப்பு -வெள்ளை ( BLACK & WHITE ) அலைவரிசைக்கு பெருமாள் மணி என்னோடு ஓர் உரையாடல் நடத்தினார். அதன் முதல் பகுதி இப்போது வந்துள்ளது. இரண்டாவது பகுதி பின்னர் வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது . இலக்கியத்துறைப் பேராசிரியராகவும் திறனாய்வாளராகவும் எனது கருத்துகளைச் சொல்லியிருக்கிறேன். கேட்டுப்பாருங்கள்.

பெரியார்- எப்போதும் பேசுபொருள்

படம்
வரலாறு என்னை விடுதலை செய்யும் என்றார் தோழர் காஸ்ட்ரோ. திரள் மக்களின் விடுதலைக்கும் வரலாற்றுக்கும் உள்ள உறவை யாராவது ஒருவர் எளிமையாக விளக்கிவிட முடியும் என்று முன்வந்தால் அவரை ஆச்சரியத்தோடு தான் பார்க்கத் தோன்றுகிறது. அதற்கு மாறாக விடுதலைக்கும் வரலாற்றுக்கும் ஒட்டும் இல்லை; உறவும் இல்லை எனக் கூறி வரலாற்றை விலக்கிவைக்க முன் வந்தால் அவரையும் ஆச்சரியத்தோடு தான் பார்க்கத் தோன்றுகிறது. வரலாறு விளக்கவும் முடியாத - விலக்கவும் முடியாத -ஒன்றாக இருப்பது பேசுவதற்கான ஒன்றுதான்.

சிலப்பதிகாரம் என்னும் நாடகப்பனுவல்

படம்
தமிழில் எழுதப்பட்டுள்ள பனுவல்களில் உலகப்பரப்பிற்கு எடுத்துச் செல்ல வேண்டிய பனுவல் சிலப்பதிகாரம். சிலப்பதிகாரத்தை அப்படியே மொழிபெயர்த்துத் தருவதோடு அதன் மீதான விமரிசனங்களும் உலகத்திற்குச் சொல்லப்படவேண்டும். இங்கே சிலப்பதிகாரத்தை நாடகப்பனுவலாக எப்படி வாசிக்கவேண்டும் என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தொல்காப்பியக் கவிதைக்கோட்பாடு- ஏற்பு நிலையும் விலகல் நிலையும் புறநானூற்றை முன் வைத்து

முன்னுரை இலக்கியம் என்று இன்று அழைக்கப்படும் சொல் எல்லாவிதமான இலக்கிய வகைகளையும் உள்ளடக்கிய எழுத்துப் பனுவல்களையும் குறிக்கும் ஒரு சொல். ஆனால் தொல்காப்பியர் காலத்தில் இலக்கியம் என்பது செய்யுள் சொல்லால் குறிப்பிடப்பட்டதாகத் தோன்றுகின்றது.   அவரது பொருளதிகாரத்தில் நாடகம், உரை, போன்ற இலக்கிய வெளிப்பாட்டு வடிவங்கள் பற்றிய சொற்கள் இருக்கின்றன, ஆனால் அவை பற்றிய விளக்கங்கள் எதுவும்   இல்லை.   உரைக்கும் நாடகத்திற்கும் வேறு யாராவது விளக்கங்களை உருவாக்கியிருக்கத் தான் செய்யுள் என்ற   வடிவம் பற்றிய வரையறைகளையும் விளக்கங்களையும் உருவாக்க நினைத்து அதைச் செய்தவராகத் தொல்காப்பியரைப் புரிந்து   கொள்ளலாம்.

புள்ளிவிவர ஆய்வுகளின் தேவை.

படம்
தொடர்ந்து வாசிக்கும் உயிர்மை, காலச்சுவடு இதழ்களில் இடம்பெற்ற சிறுகதைகள் சார்ந்து புள்ளிவிவரப் பட்டியல்களை இணைத்துள்ளேன்.. இந்தப் பட்டியல்கள் மூலம் சில புள்ளி விவரங்கள் கிடைக்கின்றன.