இடுகைகள்

இணைநேர்கோட்டுப் பயணிகள்

படம்
கடந்த ஐம்பதாண்டுத் தமிழ் அரங்கியலுக்குள் இருப்பதாக நினைப்பவர்கள் திருப்பத்திரும்ப உச்சரிக்கும் பெயர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். எண்ணத்தொடங்கும்போதே முதல் கைவிரல்கள் மடங்குவதற்கு முன்பே வந்து விடக்கூடிய பெயர்களில் இவ்விரண்டு பெயர்களும் – சி.மௌனகுரு, இந்திரா பார்த்தசாரதி – கட்டாயம் இருக்கும். தமிழ் அரங்கியலுக்குள் இருப்பவர்கள் என்று சொன்னதை வைத்து, நடிகர்களாக, பின்னணிக் கலைஞர்களாக, இயக்குநர்களாக இருப்பவர்கள் என நினைத்துக்கொள்ள வேண்டியதில்லை. தமிழ் மொழியைப் பாவித்து அரங்கியல் நிகழ்வுகள் நடக்கும்போது தவறாமல் பார்த்துவிடவேண்டும் என நினைக்கும் பார்வையாளர்களாக இருந்தால்கூடப் போதும் அவர்கள் இந்த இரண்டு பெயர்களையும் உச்சரித்து வியந்த பின் தான் நகரமுடியும்

பொன்னிநதி -சொல்லிலிருந்து காட்சிக்கு....

படம்
பொன்னியின் செல்வனில் இடம் பெறப்போகும் "பொன்னி நதி பார்க்கணும்” என்ற பாடலை நேற்று இரவு இரண்டு தடவை பார்த்தேன்; பின்னர் ஒரு தடவை கேட்டேன். இன்று காலையில் நடக்கும்போதும் இரண்டு தடவை ஒலிக்கோர்வையாகக் கேட்டேன். பிறகு காட்சி விரிவோடு ஒரு முறை பார்த்தேன். ”காவிரியாள் நீர்மடிக்கு .... ”என்ற சொல்லோடு அந்தக் காட்சி விரிகிறது என்றாலும் ‘பொன்னிநதி’ என்ற சொல்லோடுதான் பாடல் அழைக்கப்படப்போகிறது.

வகைப்படுத்துதல் வெளிப்பாடுகள்

தனது கவிதைகளை வாசிக்க நினைக்கும் வாசகருக்கு ஏதாவது ஒருவிதத்தில் உதவவேண்டும் என்று பெரும்பாலான கவிகள் நினைப்பதில்லை. கால வரிசையில் அடுக்கப்படும் கவிதைகள் கூடக் கவிதையை எழுதிய கவியின் மனப்பாங்கு மாற்றத்தைப் புரிந்துகொள்ள உதவும். அதைத் தாண்டி வகைப்பாடு செய்வதற்குச் சில அடிப்படைகள் இருக்கின்றன. அவற்றில் ஏதாவதொன்றைப் பின்பற்றலாம். அதனைக் குறிப்பிட்டுச் சொல்லிவிட்டால் வாசிப்பவர்கள் அதனைப் பின்பற்றிச் செல்வார்கள்.

பேச்சுமரபும் எழுத்துமரபும்

படம்
பேச்சும் எழுத்தும் உலகப்புகழ்பெற்ற பேச்சுகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். கன்னிப் பேச்சு, கடைசிப்பேச்சு, காவியப்பேச்சு, உரைவீச்சு, தீப்பொறி, வெடிப்பேச்சு, நரிப்பேச்சு எனப் பேச்சுபற்றிய பெயர்ச்சொற்களை நினைக்கும்போது பலர் நினைவுக்கு வரலாம். பேச்சால் வாழ்ந்தவர்களும் உண்டு; வீழ்ந்தவர்களும். ஆண்டவர்களும் உண்டு ; மாண்டவர்களும் உண்டு. இருபெரும் உரையாளர்கள். கோவை புத்தகக் கண்காட்சிக்கு இரண்டு நாட்கள் (2022,ஜூலை, 23,25) போயிருந்தேன். இரண்டு நாட்களும் இருபெரும் உரைகள். எழுதிக்குவிப்பதில் சலிப்பில்லாத இரு எழுத்தாளர்களும் -ஜெயமோகனும் எஸ்.ராமகிருஷ்ணனும் பேசுவதிலும் சலிப்பில்லாமல் இருக்கிறார்கள். தமிழ்ப்பேராசிரியராக இருந்தபோதிலும் இப்படியெல்லாம் ஓர் உரையை நடத்திக்காட்ட எப்போதும் முயன்றதில்லை. உரையாடல் வடிவமே எனது வெளிப்பாட்டு வடிவம்.  எல்லாத் தொடர்பாடல்களும் வெளிப்பாடுகளும் மொழியின் வழியாகவே நடக்கின்றன என்ற போதிலும் உரைத்தலை மட்டுமே கொண்ட மொழிதல் எளிய கருவியாகக் கருதப்படுகின்றது. உரைப்பவரிடம் இருப்பவை சொற்களும் சொற்களால் ஆன தொடர்களும் மட்டுமே. அசைவற்ற உடலோடு குரல் உருவாக்கத்தின் வழியாக நடக...

வெங்கடேஷ் சக்கரவர்த்தி

படம்
அவரைச் சினிமா விமர்சகர் என்று சொல்வதைவிடச் சினிமாவைக் கற்பித்துக் கொண்டே இருந்த ஆசிரியர் என்றுதான் சொல்ல வேண்டும். அவர் வகுப்பெடுத்த திரைப்பட ரசனை வகுப்புகள் பலவற்றில் இருந்திருக்கிறேன். முதன் முதலில் சந்தித்தது மதுரை மருத்துவக்கல்லூரிக்கருகில் இருந்த “ இந்திய மருத்துவக் கழகத்தின் அரங்கில்” . அங்கு யதார்த்தா நடத்திய சினிமா ரசனை வகுப்பில் ராஜனின் அழைப்பின் பேரில் வந்திருந்தார். அதற்கு முன்பே ப்ரீத்தம் சக்கரவர்த்தியைத் தெரியும். பரிக்‌ஷாவின் நாடகங்களில் பார்த்திருக்கிறேன்.