இடுகைகள்

சாபம்:புகழ்பெற்ற கவிதையிலிருந்து உருவாக்கப்பெற்ற நாடகம்.

படம்
               மேடைத் தளம் இரண்டு மரப்படிகள் நடுவில் ஒரு செவ்வக மேடை.. அதற்குள் உயரமான கூம்பு ஒன்று நிறுத்தப்பட்டு கப்பலின் குறியீட்டுத் தோற்றம் உண்டாக்கப்பட வேண்டும். இந்த நாடகத்தை மேடையில் நிகழ்த்த மொத்தம் ஒன்பது நடிகர்கள் தேவை . அவர்களில் ஒருவர் பெண்ணாக இருந்தால் நல்லது .அந்தப் பெண்ணுக்கு ஆல்பட் ரோஸ் என்ற பறவையின் பாத்திரத்தை வழங்கலாம் (1.).கடல்பயணத்தின் விருப்பமுள்ள அவள் வயதான கிழவன் (2) ஒரு இளைஞனும் இருக்கிறான் (3.) இவர்களோடு சக பயணிகளாக நான்கு பேர் (4-7) (8) சாவும் (9) ச்மாதான சக வாழ்வும் கூடப் பாத்திரங்களாக உருவகப்படுத்தப்பட்டுள்ளனர். நாடகம் தொடங்கும்போது கப்பல் புயலில் சிக்கியதான நிலை. மணல் தூவி, அதனை உரசுதல், தண்ணீரை அலம்புதல், தரையைப் பெருக்குதல், சொம்பினைத் தட்டி ஒலி எழுப்புதல் போன்றவற்றால் கடலின் நிலையை உருவாக்கலாம். இரண்டு நபர்கள் பனையோலைகளின் உதவியால் கடலில் புயல் வீசும் நிலையை உருவாக்கலாம். பனையோலைகளை வீசுதல், தரையில் அடித்தல், உரசுதல் ஆகியன அவர்களின் செயல்கள். அந்த சப்தங்கள் குறையும்போது ஆல்பட்ரோஸ் கடலின் பரப்பில் வருகி...

சில்லறை வர்த்தகத்தில் பன்னாட்டுக் குழுமங்கள்: ஒரு நேரடி அனுபவம்

படம்
சில்லறை வர்த்தகத்தில் பன்னாட்டுக் குழுமங்களுக்கு அனுமதி என்ற கொள்கை முடிவை மத்திய அரசு எடுத்து விட்டது. ஊடகங்களிலும் மேடைப் பேச்சிலும் எதிராக இருப்பது போலப் பாவனை பண்ணும் ஆளுங் கட்சியின் கூட்டணிக் கட்சிகளும், ஆளுங்கூட்டணியை எதிர்ப்பதாகப் பாவனை செய்யும் எதிர்க்கட்சியும், அதன் கூட்டணிகளும் வெளியில் மட்டுமல்ல; பாராளுமன்றத்திலும் எதிர்த்துப் பேசத்தான் போகிறார்கள்.

இந்த ஒரேயொரு கவிதைக்காக....

படம்
உலக மொழிகள் பலவற்றில் இருந்தும் மொழிபெயர்க்கப்பெற்று உலகக் கவிதைகள் என்றொரு தொகுப்பு வெளியிடப்படுகிறது என்றால் தமிழிலிருந்து யார்யாரையெல்லாம் பரிந்துரை செய்வீர்கள்? என்றொரு கேள்வியை ஒரு இந்தியவியல் அறிஞர் என்னிடம் கேட்டார். நான் பணியாற்றிக் கொண்டிருக்கும் வார்சா பல்கலைக்கழகத்தில் நடந்த போரும் அமைதியும் இந்திய இலக்கியங்களும் என்ற கருத்தரங்கின் போது சந்தித்த அவருக்கு இந்திய மொழி இலக்கியங்கள் மட்டுமல்லாமல் உலக இலக்கியப் பரப்பின் அகலமும் ஆழமும் தெரிந்திருந்தது என்பதை அவரது கருத்தரங்க உரையும், பிந்திய விவாதங்களும் எடுத்துக் காட்டின. காபி குடிப்பதற்கான இடைவேளையின் போது அந்தக் கேள்வியை ஏன் என்னிடம் கேட்டார் என்பதற்கான காரணத்தைச் சொல்லவில்லை. நானும் கேட்கவில்லை. “தமிழிலிருந்து நூறு பெயர்களையும் அவர்களது கவிதைத் தலைப்புகளையும் நாளையே எழுதித் தருகிறேன்” என்றேன். “நூறு அல்ல; பத்துப் பேரின் பத்துக் கவிதைகளுக்குத் தான் இடம்” என்றால் யார் யாரைச் சொல்வீர்கள் என்றார்? உலகக் கவிதை இலக்கியத்திற்கு ஆயிரக் கணக்கான கவிதைகளைத் தரக் கூடிய தமிழிலிருந்து வெறும் பத்துக் கவிதைகளுக்குத் தான் இடம் என்று சொன்னவுடன...

இடிந்தகரை X கூடங்குளம் : நிரந்தரத்தைத் தற்காலிகமாக்கும் எத்தணிப்புகள்

படம்
”ஆத்துக்குப் போனயா? அழகரைச் சேவிச்சயா?” – இந்தச் சொற்றொடரை மதுரை மாவட்டத்துக்காரர்கள் தன் வாழ்நாளில் பல தடவை உச்சரிக்க நான் கேட்டிருக்கிறேன். வாயால் சொல்லியிருக்கா விட்டாலும் யார் வாயாவது சொல்லத் தங்கள் செவி வழியாகவாவது பலரும் கேட்டிருப்பார்கள். செவிக்கும் வாய்க்கும் பழக்கப்பட்ட இந்தச் சொற்றொடர் தரும் அனுபவத்தை நேரில் பெற விருப்பம் காட்டுவது வட்டாரம் சார்ந்த வாழ்தலின் அடையாளம். அந்த வாக்கியம் இன்று சின்னஞ் சிறியதாகப் போய்விட்ட மதுரை மாவட்டத்துக்கு உரியது மட்டுமல்ல. மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகித் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் எனப் பல மாவட்டங்களின் வழியாக ஓடி வங்கக் கடலில் கலக்கும் வைகை ஆற்று நீரோடு கொள்வினையும் கொடுப்பினையும் கொண்டுள்ள மாவட்டங்கள் அனைத்திற்கும் பொதுவான மரபுத் தொடரும் கூட.

இந்தியச் செவ்வியல் மொழிகள் இரண்டு: தமிழும் சமஸ்கிருதமும்

படம்
                                                                  முன்குறிப்பு: இந்தியவியல் அறிஞர் ஜார்ஜ் எல் ஹார்ட் இந்தியச் செவ்வியல் மொழிகள் பற்றிச் சொன்ன ஒரு குறிப்பை அண்மையில் ரவிக்குமார் தனது நிறப்பிரிகை என்னும் வலைப்பூவில் ஆங்கிலத்தில் பதிவு செய்துள்ளார். அதன் தமிழ் வடிவம் பலருக்கும் படிக்கக் கிடைத்தால் நல்லது என்பதால் தமிழாக்கிப் பதிவு செய்துள்ளேன்.