இடுகைகள்

திசைகளின் வாசல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

விலகிச் செல்லும் அந்தரங்கம்

படம்
திருமணம் நடக்கும் அந்த மண்டபம் எனக்குப் புதிய ஒன்று அல்ல. திருமணத்தில் கலந்து கொள்ள வருவது இதுதான் முதல் முறை. இப்போது மண்டபம் இருக்கும் இடத்தில் திரை அரங்கம் இருந்தது. அப்போது இந்த இடத்திற்குப் பல முறை வந்திருக்கிறேன். நூறு நாட்களுக்கும் மேலும் ஓடி வெள்ளி விழாக் கொண்டாடிய படங்கள் சிலவற்றை அந்த திரை அரங்கில் தான் பார்த்தேன். எல்லா வசதிகளும் கொண்ட திருமண மண்டபமும் வணிக வளாகமும் என அந்த இடம் மாறி விட்டது.

மெல்லினமும் வல்லினமும்

“இந்தியப்பொருளாதாரம் நிதானமாக இல்லை; வீழ்ச்சியை நோக்கிப் போகிறது” என்கிறார்கள் இப்போது. அப்படிச் சொல்பவர்கள் சிலவகைப் புள்ளிவிவரங்களை முன்வைக்கிறார்கள். பத்தாண்டுகளுக்கு முன்பு ‘இந்தியப் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது’ என்பதை நம்பச் செய்யும்படியான புள்ளி விவரங்கள் காட்டப்பட்டன. இந்தப் புள்ளி விவரங்களைப் பார்க்கும்போதும் கேட்கும்போதும் எனக்குத் தொலைக் காட்சியில் அடிக்கடி பார்க்கும் அந்த விளம்பரம் தான் நினைவுக்கு வரும். ‘’ நான் வளர்கிறேனே மம்மி’’ என்று சொல்லி விட்டு ஒரு சிறுவன் நிமிர்ந்து நிற்பான். அந்த வளர்ச்சியை மனதுக்குள் ரசிக்கும் அவனது தாய் வளர்ச்சிக்குக் காரணமான மென்பானத்தைக் கையில் வைத்தபடி சிரித்துக் கொண்டிருப்பாள். தொடர்ந்து சில ஆண்டுகள் அந்தப் பானத்தைக் கொடுத்து வரும் அன்னைக்குத் தன் மகனின் வேகமான வளர்ச்சிக்குக் காரணம் அந்த பானம்தான் என்ற நம்பிக்கை உண்டாவது இயல்பான ஒன்றுதான். உடல் வளர்ச்சிக்குத் தேவையான ஊட்டச் சத்துக்கள் அந்தப் பானத்தில் இருப்பது உண்மையாகக் கூட இருக்கலாம். அதனால் மற்றவர்களின் வளர்ச்சியை விட அவனது வளர்ச்சி விகிதம் கூடுதலாக இருப்பதும் சாத்தியம்

ஓரத்து இருக்கைப் பயணங்கள்

மதுரையிலிருந்து திருநெல்வேலிக்கு சென்று கொண்டிருந்த பேருந்தில் நடுப்பகுதியில் இடதுபக்க ஓரத்தில் நான் அமர்ந்திருந்தேன். மதுரையில் ஏறிய பயணிகளில் பாதிப்பேர் ராம்கோ சிமெண்ட் தொழிற்சாலை இருக்கும் நிறுத்தத்தில் இறங்கிக் கொண்டனர். அதனால் சாத்தூரில் ஏறுபவர்களுக்குத் தேர்வு செய்து இருக்கைகளைப் பிடிக்க வாய்ப்பு இருந்தது. சாத்தூரில் ஏறிய பயணிகளில் அந்தக் குடும்பமும் ஒன்றாக இருந்தது. அரை டிக்கெட் வாங்க வேண்டிய சிறுமி, சிறுவன் உள்பட நான்கு பேர் கொண்ட குடும்பம் அது. வேகமாக ஏறிய சிறுமி ஓடி வந்து எனது இருக்கைக்கு முன்னால் இருந்த வலது பக்க ஓரத்தைப் பிடித்துக் கொண்டாள்.

சீர்மலி நகரங்களில் படகுப் பயணங்கள்

படம்
சீர்மலி நகரங்கள் (Smart cities) ஆக்குவதற்கான பட்டியலை இந்திய அரசாங்கம் ஓராண்டுக்கு முன்பே அறிவிக்கத்தொடங்கியது. தமிழ்நாட்டில் முதலில் நான்கு என்றார்கள். நான்கு ஆறு என்றானது. இப்போது சென்னை, மதுரை, சேலம், கோயம்புத்தூர், திருச்சி, திருநெல்வேலி, தூத்துக்குடி, திருப்பூர், வேலூர், திண்டுக்கல், ஈரோடு, கடலூர் எனப் பன்னிரண்டு நகரங்கள் பட்டியலில் இருக்கின்றன. இவற்றில் பெரும்பாலான நகரங்கள் மாநகராட்சி என்ற தகுதியைப்பெற்றவை. திண்டுக்கல், கடலூர், போல ஒன்றிரண்டுதான் மாநகராட்சித் தகுதியை அடையாத நகராட்சிகள்.

என்னவாக ஆகப்போகிறாய் பெண்ணே

‘நீ என்னவாக ஆகப் போகிறாய்.? ’  இந்தக் கேள்வி மனிதர்கள் ஒவ்வொருவரும் சந்திக்க நேர்ந்த கேள்விதான். பள்ளிப் பருவம் தொடங்கி, பல தடவை இந்தக் கேள்வியைச் சந்திக்கும் வாய்ப்புக்கள் மாணாக்கர்களுக்குக் கிடைக்கின்றன. வகுப்புக்கு வரும் ஆசிரியர்கள் மட்டும் அல்லாது, அவர்களது பள்ளிக்கும், கல்லூரிக்கும் வரும் விருந்தினர்கள், பேச்சாளர்கள், தலைவர்கள் என ஒவ்வொருவரும் இத்தகைய கேள்விகளை ஒவ்வொரு மாணாக்க ரிடத்திலும் எழுப்பத்தான் செய்கிறார்கள். அவர்களின் வருகையும் பேச்சும் நேரடியாக இந்த வினாவை எழுப்பாமல் போயிருக்கலாம். அவர்களின் வருகையின் சாரம் உணர்த்தும் உண்மை அது தான்.

மயிலாடிய கானகங்கள்

கடந்த ஆண்டு அக்டோபர் தொடக்கத்தில் இப்படி வெயில் அடிக்கவில்லை. ஆகஸ்டு கடைசி வாரத்திலேயே வெயில் குறைந்து ஆடிக் காற்று பரபரவென வீசியது. இந்த ஆண்டு ஆடிக் காற்றின் வேகம் ஒரு சில நாட்கள் தான் இருந்தது. திரும்பவும் வெயில் பங்குனி உத்திரத்தின் போது அடிப்பது போல அடித்தது.

மரணமும் மதுவும்

மதுப்பழக்கம் தமிழ் வாழ்வின் பகுதியாக மாறிப் பல ஆண்டுகள் ஓடிவிட்டன.   பல குடும்பங்களின் அன்றாட வாழ்க்கையைக் குலைத்துப் போட்டிருக்கிறது.  உறவினர்கள் மரணங்களின் பகுதியாகவே குடிப்பழக்கமும் குடியடிமைத்தனமும் இருந்துள்ளன. ஆனாலும்   மரணத்தை முன்வைத்துக் குடியெதிர்ப்புப் பரப்புரை செய்வதை நான் விரும்புவவில்லை.

நள்ளிரவு ரயில் பயணங்கள்

படம்
கோவையிலிருந்து திருப்பத்தூருக்கு நேரடியாகப் போய்ச் சேர வேண்டும் என நினைத்து கோவை போத்தனூர் ரயில் நிலையத்தில் காத்திருந்தேன். ரயில் இரவு 09.50 -க்குத் தான். போத்தனூர் ரயில் நிலையக் கொசுக்களோடு நடத்திய யுத்தத்தில் சிந்திய ரத்தத்தை விடச் சோகமானதாக ஆகி விட்டது அந்தப் பயணம்.

தூரம் அதிகம்; நேரம் குறைவு

தஞ்சையின் புதிய பேருந்து நிலையத்தில் இறங்கிய போது நேரம் காலை 6.35. நெல்லையில் நேற்றிரவு கிளம்பிய நேரம் 11.35. ஏழுமணி நேரப் பயணத்தில் வந்து சேர்ந்தாகி விட்டது. இத்தனைக்கும் ஒரே பேருந்தில் பயணம் செய்யவில்லை. இடையில் மதுரையில் இறங்கி முக்கால் மணி நேரம் காத்திருந்து அங்கிருந்து கிளம்பும் இன்னொரு அரசுப்பேருந்ததைப் பிடித்துத்தான் வந்தேன்.

மரணத்தை எதிர்கொள்ளும் சாகசப் பயணம்

மனிதர்களின் பயணங்களுக்குப் பின்னால் வெறும் கொண்டாட்ட மனநிலை மட்டுமே இருப்பதில்லை. திகைத்து நிற்கும் சாகசங்களும் தேவைப்படுகின்றன. தூக்கம் வராமல் போனதற்கு அந்த சாகசப் பயணமே காரணம் என்று தோன்றியது. நடை பயணங்களாலும்சரி, வாகனப் பயணங்களானாலும்சரி அதன் முடிவில் உடல் ஓய்வை எதிர்பார்க்கவே செய்கிறது.

அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம்….

இப்போது நான் நிற்பது பயணச்சீட்டு வாங்குவதற்காக அல்ல; வாங்கிய பயணச்சீட்டை ரத்து செய்வதற்காக. ஆறு நாட்களுக்கு முன்பு நான் பதிவு செய்த போது காத்திருப்போர் பட்டியலில் இருந்த எனது பெயர் நேற்றுத் தான் உறுதியானது. ஆனால் இன்றோ ரத்து செய்யும்படி ஆகி விட்டது. அப்படி ஆனதற்குக் காரணம் நான் அல்ல; இந்திய தேர்தல் ஆணையம் செய்த அறிவிப்பு தான் காரணம். இந்தத் தேர்தல் இன்னும் என்னென்ன திருப்பங்களைக் கொண்ட வரப்போகிறதோ தெரியவில்லை.

இறந்த காலமல்ல; கடந்த காலம்

கர்நாடகத்தில் உற்பத்தியாகும் காவிரி ஆறு, தமிழ்நாட்டின் வழியாகப் பாய்ந்து கடலில் கலக்கிறது. கடலில் கலக்கும் நீரைப் பயன்படுத்தித் தமிழ்நாட்டு விவசாயிகள் தமிழ்நாட்டுக்குத் தேவையான நெல்லை விளைவிக்கிறார்கள். குறைந்தது இரண்டு போகம் விளையும் விதமாகக் காவிரியில் நீர் வருவதுண்டு. அதனைத் தேக்கி வைத்துப் பாசனத்திற்குப் பயன்படுத்துவதற்காகவே காவிரியின் குறுக்கே  மேட்டூர் அருகே அணை கட்டப்பட்டுள்ளது. 

விழுப்புண்களும் விழுத்தண்டுகளும்

   “ இன்று எனது வாழ்க்கையில் முக்கியமான நாள் ” என ஏதாவது ஒரு நாளைப் பலரும் கூறக் கேட்டிருக்கலாம். அப்படிக் கூறுபவர்களிடம் கொஞ்சம் கூடுதலாக விசாரித்துப் பாருங்கள். அந்த நாள் அவரது வாழ்க்கையில் நல்லது அல்லது கெட்டது என இரண்டில் ஒன்று நடந்த ஒரு நாளாக இருக்கும்.

சமூக இடைவெளிகள்

       இரண்டு நிகழ்ச்சிகளுக்கும் பல ஒற்றுமைகள் உண்டு. ஒரேயொரு வேற்றுமை நிகழ்வெளி மட்டும் தான். முதல் நிகழ்ச்சி நடந்தது சென்னையின் நகரப் பேருந்து நிலையம் ஒன்றில். இன்னொன்று திருநெல்வேலி பேருந்து நிலையத்தில். நிகழ்ந்த வெளிகள் பேருந்து நிலையங்கள் என்பதால், பேருந்து நிலையத்தைக் களனாக –நிகழ்வெளியாகக் கொண்ட ஓரங்க நாடகத்தின் இரு வேறு நிகழ்வுகள் என்று சொல்லலாம்.

பயணங்கள் அற்ற கோடை விடுமுறை..

இந்தக் கோடை விடுமுறையில் விருப்பமான பயணம் என ஒன்றையும் மேற்கொள்ளவில்லை. சொந்தக் காரணங்களால் இப்படி நேர்ந்து விட்டது. கோடை விடுமுறை முடியப்போகும் இந்த நேரத்தில் நினைத்துப் பார்த்தால் எனது நீண்ட பயணங்கள் எல்லாம் கோடை விடுமுறையில் நிகழ்ந்தனவாகவே இருக்கின்றன என்பது புரிகிறது

மரணம் அல்ல; தற்கொலை

பதினைந்தாவது நாடாளுமன்றத்திற்கான தேர்தல் முடிந்து, அமைச்சரவை பொறுப்பேற்பும் முடிந்து விட்டது. அமைச்சரவை அமைப்பதற்கு முன் நடக்கப் போவதாகப் பேசப்பட்ட அணிமாற்றங்கள், பேரங்கள், கொடுக்கல் வாங்கல்கள் என எதுவும் இல்லாமல் ஆக்கி விட்டன தேர்தல் முடிவுகள். இந்திய வாக்காளர்கள் அளித்துள்ள இந்த முடிவுகள் பலருக்கு நிம்மதிப் பெருமூச்சு. குறிப்பாகக் காங்கிரஸ் கட்சிக்கும் அதன் தலைமைக் குடும்பமான நேரு குடும்பத் திற்கும் இதுவரை இல்லாத பெருமகிழ்ச்சி. தோல்வியைத் தழுவிக் கொண்ட பாரதீய ஜனதாக் கட்சிக்கும் அதன் தலைவர்களுக்கும் கூட நிம்மதிதான். இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு நல்ல ஓய்வு எடுத்துக் கொள்ளலாம்..

வேறுவேறு உலகங்கள்

தினசரிப் பேச்சில் பழமொழிகளின் பயன்பாடு அர்த்ததோடு இருப்பதும் உண்டு. அர்த்தமில்லாமல் இருப்பதும் உண்டு. ‘ கெட்டும் பட்டணம் சேர்’ என்ற பழமொழி மிகக் கூடுதலான அர்த்தத்தோடு பயன்பாட்டில் இருந்து கொண்டிருக்கும் பழமொழி என்றே இதுவரை நாம் கருதிக் கொண்டிருக்கிறோம். சென்னை, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு போன்ற பெருநகரங்களில் வாழ்பவர்கள் அடிக்கடி சொல்லிக் கொள்ளும் பழமொழியாக இது இருக்கிறது.

கரையைக் கடக்கும் புயல்கள்.

காலத்தை வெல்லுதல் மனிதர்களுக்குச் சாத்தியமல்ல என்பதை ஒவ்வொருவரும் புரிந்துதான் வைத்திருக்கிறார்கள். பிறக்கின்ற ஒவ்வொரு உயிரும் இறக்க வேண்டும் என்பது அறிந்து கொள்ள முடியாத திசையிலிருந்து வருகின்ற உத்தரவு. அந்த உத்தரவின் ரூபம் என்ன?

உழவுக்கும் தொழிலுக்கும் ...

மேற்கு வங்கமாநிலம் சிங்கூரிலிருந்து டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வருத்தத்துடன் வெளியேறி விட்டது. வருத்தத்துடன் வெளியேறியது என்று சொல்வதை விட இறுக்கத்துடன் வெளியேறியது என்று சொல்வதே சரியாக இருக்கும். டாடா நிறுவனத்தின் தலைவர் ரத்தன் டாடா தனது முகத்தில் வெளிப்பட்ட இறுக்கமும் வருத்தமும் விலக நீண்ட நாட்கள் காத்திருக்கவில்லை.

விலகிப் பாயும் அம்புகள்

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் சாதகமான அம்சங்களில் மிக முக்கியமான ஒன்று பாதிக்கப் பட்டோருக்கு ஆதரவு என்பது தான். இந்தியாவின் குடிமைச் சட்டம் ஆயினும் சரி, குற்றவியல் சட்டமாயினும் சரி, நீதியியல் முறைகளானாலும் சரி அரசும், அரசு நிறுவனங்களும் எப்போதும் அதிகம் பாதிக்கப் படுவோரின் பக்கம் நிற்க வேண்டும் என்றே வலியுறுத்துகின்றன.