இடுகைகள்

கவிதைகள் பற்றி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கவிதை வாசிப்புக்கணங்கள்

எழுதவிரும்பும் ஒருவர் முதலில் தொடங்குவது கவிதையாக இருக்கிறது. ஒன்றைப் பார்த்தவுடன் - ஒன்றில் பங்கேற்றவுடன் -ஒன்றால் பாதிக்கப்பட்டவுடன் அதைக் குறித்துச் சொல்வதற்கேற்ற இலக்கியவடிவம் கவிதை. அக்கவிதை வடிவத்திலேயே தொடர்ந்து செயல்படுகிறவர்கள் உணர்வை எழுதுவதிலிருந்து மெல்லமெல்ல நகர்ந்து அறிவையும் கருத்தியலையும் சிந்திப்பு முறைமைகளையும் கவிதையாக்கும் முயற்சிக்கு நகர்கிறார்கள். அப்படி நகரும்போது அந்தக் கவிஞர்கள் அந்த மொழியில் இயங்கும் காலத்தின் கவியாக அடையாளப் படுகிறார்கள். நவீனத்துவத்தை உள்வாங்கிய பாரதியின் தொடக்கக் காலக் கவிதைக்கும் பிந்தியக் காலக் கவிதைகளுக்குமான வேறுபாட்டைக் கவனிப்பவர்களுக்கு இது புரியும். 

திலகா அழகு: ஆற்றியிருத்தலும் ஆற்றாதிருத்தலுமான பெண்ணுடல்கள்

படம்
நான் எழுதும்  ஒரு நூலுக்கான முன்னுரையில் அவர்  புதியவராக இருக்கும் நிலையில்  அவர்கள் இயங்க நினைக்கும் இலக்கியப்பரப்புக்குள் அறிமுகப்படுத்த நினைக்கின்றேன். ஏற்கெனவே இயங்குபவர்களாயின் அவர்களின் தனித்துவம் எதுவென அறிந்து வாசகர்களிடத்தில் விவாதிக்கத் தூண்டுகின்றேன். மௌனம் தின்னும் என்னும் தொகுப்போடு வந்திருக்கும் திலகா அழகு புதியவர். அவரது வருகையைக் கவிதைப்பரப்பிற்குள் அறிமுகம் செய்வதே இங்கு நோக்கம்

இடம்பெயர்த்து அழைத்துச் செல்லும் கவிதைச் சொற்கள்

தொடர்ச்சியாக வேலைகள் இருக்கும்போது வாசிக்கவே முடியாமல் போய்விடும். கடந்த 10 நாட்களாகத் தினசரித்தாள்களைக் கூடப் புரட்டிவிட்டு வைத்துவிடும் அளவுக்குப் பல்கலைக்கழக வேலைகள்.தொடர்ச்சியாக நிகழ்வுகள் ஏற்பாடுசெய்து முடிக்கும்போது ஏற்படும் அலுப்பு தீரவேண்டுமென்றால் நான் காணாமல் போகவேண்டும். இருக்கும் இடத்திலேயே நான் தொலைந்து போக வேண்டுமென்றால் இன்னொரு வெளியை உருவாக்கி அதற்குள் நுழைந்துகொள்ளவேண்டும். அதைச் செய்வதில் கவிதைகள் எப்போதும் உதவியாக வந்து நிற்கின்றன- வேலைகளிலிருந்து விடுபட முடியாமல் தவிக்கும்போது வாசிப்பதற்குக் கவிதையே ஏற்ற ஒன்று. அப்படியான கவிதைகளைத் தமிழில் எல்லாரும் எழுதிவிடுவதில்லை.  குறிப்பான மனிதர்களை -அவர்களின் சிடுக்குகளையும் அழுத்தப்படும் நிலைகளையும் சொல்லும் கவிதைகள் வாசிப்பவர்களை இன்னொரு மனிதர்களாக மாற்றி அவர்களின் வலியையும் நம்மீது சுமத்தித் தத்தளிக்கச் செய்துவிடும்.அதற்கு மாறான கவிதைகளும் அவற்றை எழுதும் கவிகளும் தமிழில் இருக்கிறார்கள். தொடர்ச்சியாக எனது வாசிப்பிலிருக்கும் அனார் அப்படியொரு கவி. 

இருத்தலையும் இருத்தல் நிமித்தங்களின் வண்ணங்களையும் வரைதல்..தேன்மொழி தாஸின் கவிதைகள்-

படம்
பத்து ஆண்டுகளுக்கு முன்பே அந்தப் பெயர்- தேன்மொழிதாஸ்- என்ற பெயர் ஒரு கவியின் பெயராகப் பதிந்திருந்தது என்றாலும், பலராலும் சொல்லப்பட்டு உருவான தமிழ்க்கவிதைப்போக்கு ஒன்றிற்குள் இருக்கும் அடையாள வெளிப்பாடாகவோ, நானே வாசித்து உருவாக்கிக்கொண்ட தனித்துவமான கவியின் அடையாளமாகவோ அந்தப் பெயர் பதிந்திருக்கவில்லை. என்றாலும் பதிந்திருந்தது.  வாசகப்பரப்பில் ஒரு கவியின்/எழுத்தாளரின் பெயர் பதிந்துவிடப் பல காரணங்கள் இருக்கின்றன. போகிற போக்கில் விமரிசகன் குறிப்பிடும் ஒரு பெயரின் பின்னால் இருக்கும் எழுத்துகள், வாசிப்பவர்களிடம் தன்னை வாசிக்கும்படி முறையிடுகின்றன. ஆனால் அந்தப்பெயரும் அவரது எழுத்துகளும் தொடர்ச்சியாக நினைவுக்குள் ஆழமாய் நின்றுவிட, விமரிசகனின் அந்தக் குறிப்புமட்டும் போதாது. தீவிரமான வாசகராகத் தன்னைக் கருதிக்கொள்பவர் அந்தப் பெயரோடு வரும் எழுத்துகளைப் படிக்கும்போது விமரிசகன் சொன்ன காரணங்களோடு உரசிப்பார்க்கவே செய்வார்கள். முழுமையும் பொருந்துவதோடு, புதிய திறப்புகளையும், பரப்புகளையும் காட்டும் நிலையில் இருப்பதாக நினைத்தால், அந்தக் கவியை அல்லது எழுத்தாளரைத் தேடி வாசிக்கும் பட்டியலில் சேர்த்துக்க

முகம் மாறிய அரசியல் கவிதைகள் :ஜெயதேவனின் முச்சூலம்

பொதுநல அமைப்பாகப் பாவனை செய்த அரசு அமைப்பைக் கைவிட்ட இந்தியாவைக் கவிதைகள்- தமிழ்க் கவிதைகள் முன்வைக்கத்தவறியுள்ளன. தாராளமயம், உலகமயம், தனியார் மயம் உருவாக்கிவைத்திருக்கும் நுண் அமைப்புகளிலிருந்து பேரமைப்புகள் வரை ஒற்றைத் தன்மையுடன் இயங்குவன அல்ல. முதலாளித்துவத்தைத் தாண்டிய பொருளியல் கட்டமைப்பைக் கொண்டிருந்தாலும், பண்பாட்டு நடவடிக்கைகளுக்காக நுண் அலகுகளையும் குடும்பம், சாதி, கோயில், சடங்குகள் போன்றவற்றை அப்படியே நிலவுடைமைக்காலச் சட்டகங்களுடன் பேண நினைக்கிறது.

நேரடியாகப் பேச நினைக்கும் பெண்குரல்

படம்
கவிதையின் மொழிதல் ஒருவழிப்பாதையாக இருக்கும்போது உணர்ச்சி வெளிப்பாடாக மாறி விடும். கவிதைக்குள் உருவாக்கப்படும் சொல்லி ( Narrator) தன்னை - தனது தன்னிலையை- உருவாக்குவதற்காகக் குறைவான சொற்களைப் பயன்படுத்திவிட்டுக் கேட்கும் இடத்தில் இருப்பவர்களை (Receivers) -முறையீட்டைக் கவனிக்கவேண்டியவர்களைக் குறித்துப் பலவிதமான சொற்களை உண்டாக்குவது வெவ்வேறு உணர்ச்சிகளின் வெளிப்பாடுகள். உண்டாக்கப்பட்ட சொற்களின் வழியாக அவர்களுக்கும் சொல்லிக்குமிடையே இருக்கும் உறவுநிலைகளை - உடன்பாட்டு நிலையாகவும் எதிர்மறை நிலையாகவும் பேசுவதின் வழியாகக் கவிதையின் இயக்கத்தை அல்லது செயல்பாட்டை உருவாக்குவது என்பது கவிதையியலின் தொடக்கநிலைக் கூறு.

அகத்திலிருந்து புறம்நோக்கிய நகர்வு

படம்
ஔவையும் கபிலனும் செவ்வியல் கவிதைகள் எழுதியவர்களுள் முக்கியமானவர்கள். அவர்கள் தொடங்கிவைத்த தமிழ்க்கவிதை மரபை இன்றும் தொடர்வது யாரெனத்தேடியது மனம். செவ்வியல் மரபாக நாம் நினைத்துக்கொள்ளும் - கட்டமைத்துக்கொள்ளும் - தொடக்கத்தின் முதன்மை ஆளுமைகளாக யாரையெல்லாம் சொல்லலாம் என்ற தேடலைச் செய்தது மனம். முதல் பெயராக வந்தவள் கவி ஔவை.

தொல்காப்பியத் திணைக்கோட்பாடும் அகநெடும்பாடல்களும்

முன்னுரை:தொல்காப்பியப் பொருளதிகாரத்தை மையப்படுத்திச் சிந்திக்கும்போது அதன் முதன்மை நோக்கம்   பாவியல் அல்லது கவிதையியல் என்பதற்கான வரையறைகளை உருவாக்குவது எனக் கருதத்தோன்றுகிறது . அக்கருத்தின் அடிப்படையில் இக்கட்டுரை அமைகின்றது . கருத்தரங்கின் பொதுப்பொருள் தொல்காப்பிய மரபும் செவ்வியல் ( சங்க இலக்கியங்களும் ) என்பதனை மனங்கொண்டு , தொல்காப்பியர் கூறும் திணைப்பொருள் மரபை நவீன இலக்கியக் கோட்பாடான நிலவியல் பண்பாட்டியலோடு தொடர்புபடுத்தி அமைகிறது இக்கட்டுரை . தொல்காப்பியம் மூன்று பொருட்களைக் கவிதையின் உள்ளடக்கமாகக் கூறியுள்ளது இக்கட்டுரை கருப்பொருளின் இடம் பற்றிய நிலையை விவாதிக்கிறது . கட்டுரை உருவாக்கிக் கொண்ட கருத்தியல் நிலைபாட்டைப் பொருத்திப் பார்க்கும் தரவுகளாகத் தமிழ்ச் செவ்வியல் கவிதைகளில் அகநெடும்பாடல்கள் இக்கட்டுரைக்கான முதன்மைத் தரவுகளாக அமைகின்றன .

நிவேதா உதயன்: நினைவுகளில் அலைதல்

படம்
  புதியவர்களாக இருக்கும் நிலையில்  ஒரு நூலுக்கான   முன்னுரை   அவர்கள் இயங்க நினைக்கும் இலக்கியப்பரப்புக்குள் அறிமுகப்படுத்த நினைக்கவேண்டும் . ஏற்கெனவே இயங்குபவர்களாயின் அவர்களின் தனித்துவம் எதுவென அறிந்து வாசகர்களிடத்தில் விவாதிக்கத் தூண்டலாம் . நிவேதா உதயன் புதியவர் கவிதைக்கு. இது அவரது முதல் தொகுதி

புதிய மாதவி: மாற்றுத் தொன்மங்களை அர்த்தமாக்குபவர்

படம்
இந்தக் கவிதையை மாணாக்கர்களிடம் வாசிக்க்க் கொடுத்தபோது அவர்கள் புரியவில்லை என்று சொன்னார்கள். புரியவில்லை என்றால் எது புரியவில்லை என்று கேள்வியை எழுப்பினேன். அதற்கு அவர்களிடம் பதில் இல்லை. “ கவிதை, நவீனக் கவிதை புரியவில்லை” எனச் சொல்லும் பலரிடமும் ‘எது புரியவில்லை ‘ என்ற கேள்விக்குப் பதில் இருப்பதில்லை.   மரபான   முறையில்   செய்யுளை   அர்த்தப்படுத்துவதற்காகத்   தேடிக்   கண்ட்டையும்   அருஞ்சொல்   எதுவும்  இக்கவிதையில்    இல்லை .  அப்படி   இருந்தால்   அதன்   பொருளைச்   சொல்வதன்   மூலம்   கவிதையை   அர்த்தப்படுத்தலாம் . அப்படிப் பொருள் சொல்வது அல்லது அர்த்தப்படுத்துவதுதான் கவிதையின் புரிதலா? என்ற அடுத்த கேள்வி எழும்

தமிழினியின் கவிதைகள்:பொதுவிலிருந்து சிறப்புக்குள் நகர்த்துதல்

படம்
தமிழினி ஜெயக்குமரனின் போர்க்காலம் தொகுப்பில் இருக்கும் கவிதைகள் எண்ணிக்கை 14 மட்டுமே. இதற்குமேல் கவிதைகள் எழுத அவள் இல்லை. மொத்தமுள்ள 48 பக்கங்களில் இந்த 14 கவிதைகளும் அச்சாகியுள்ள பக்கங்கள் 26. மீதமுள்ள பக்கங்களில் சில உரைகள் உள்ளன.4 வது கவிதை இது : கைவீசி நடக்கிறது காலம். அதன் கால்களில் ஒட்டிய துகள்களாய் மனித வாழ்க்கை- ஒட்டுவதும் உதிர்வதுமாய். காலத்தை முந்திப் பாய்கின்றன கனவுக்குதிரைகள். காலடி பிசகாமல் நீள்கிறது காலப்பயணம். வேறெதையும் கண்ணுற்று நிற்பதுமில்லை கணக்கெடுத்துச் சுமப்பதுமில்லை. காலம் நடக்கிறது.

கவிதை முழுமையடையும் தருணம் விலகலாகும் வேளையும்

படம்
அனாரின் ஆழ்தொலைவின் பேய்மை ======================================== இப்போது வரும் கவிதைத்தொகுதிகளில் ஒன்றைக் கையில்கொடுத்து விமரிசனம் செய்யவேண்டும் அல்லது விளக்கிப்பேசவேண்டுமென்றால் திணறல் ஏற்படுவது தவிர்க்கமுடியாதது. அந்தத் திணறல் காரணமாகவே தமிழின் முக்கியக் கவிகள் பலரைப்பற்றியும் எனது வாசிப்பனுபவத்தைப் பகிரிந்துகொள்ளாமல் தவிர்த்துக்/ தவித்துக்கொண்டிருக்கிறேன். அனாரின் கவிதைகளின் தொகுதியும்சரி, தனித்தனிக் கவிதைகளும்சரி அந்தத் திணறலை ஏற்படுத்துவதில்லை.

நம் அக்கறைகள் வேறு மாதிரியானவை-கவிதைப்பட்டறை

நேற்று நடந்த கவிதைப்பட்டறையைப் பற்றிய போகன் சங்கர் குறிப்பு மீது அபிலாஷ் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். கவிதை எழுதுவது குறித்த சிந்தனைகளைத் தூண்டியதில் இந்தப் பயிலரங்கம் சில அடிகளை முன்வைத்துள்ளது என்ற வகையில் மகிழ்ச்சி.. அவருடைய கட்டுரையைப் படிக்கும் முன்பு இந்தக் குறிப்பையும் வாசித்துக்கொள்ளுங்கள்.

சூழலில் அர்த்தமாகும் கவிதை:

படம்
இது கவி சமயவேலின் அடையாளம் அல்ல. அவருடைய பெரும்பாலான கவிதைகள் வெளிப்படையான அரசியல் கவிதைகள் அல்ல. சமூகப் போக்கைச் சந்திக்கும் கணத்தில் அதை விளங்கிக் கொள்ள முடியாமலும், விளங்கிக்கொள்ள முடிந்தாலும் அதைச் சந்திப்பது எப்படியெனப் புரியாமலும், கடந்து செல்லும் வழியறியாமலும் தவிக்கும் தனிமனிதர்களின் தன்னிலைகளை அவரது பலகவிதைகளில் வாசிக்க முடியும். அந்தத் தன்னிலைகளை முழுமையாகக் கவி சமயவேலின் தன்னிலை என்றும் புரிந்துகொள்ளலாம். அல்லது அவர் முன்வைக்கும் மனிதர்களின் தன்னிலையாகவும் விளங்கிக் கொள்ளலாம்.

எளிய கவிதைகளின் இயக்கம்

ஆனந்தவிகடன் கவிதைகளை வெளியிடும் பக்கங்களுக்குச் சொல்வனம் எனப் பெயரிட்டுக் கொண்டிருக்கிறது. 16/3/16 தேதியிட்ட ஆ.வி.யில் சௌவி, ஆர்.ஜவஹர் பிரேம்குமார், ம.மகுடீசுவரன் ஆகிய 3 பேரின் கவிதைகள் அச்சாகியுள்ளன. இந்த மூன்று பேரின் 3 எழுத்து வரிகளும் கவிதையாக நினைக்கப்படும் காரணஙகள் என்னவாக இருக்கும்?

எளிமையின் அழகியல் : கண்டராதித்தனின் திருச்சாழல்

எனது கவிதை வாசிப்பு எளிமையானது. தேடிக்கண்டடைவது. தேடும்போது சலிப்பில் விலகிப்போவதுண்டு. நினைவுகளால் நிறுத்தித் தொடர்வதுண்டு. நிறுத்தப்பட்டது நினைவுக்கு வராமலே போவதுமுண்டு. கவிதை வாசிப்பில் பெரும்பாலானவர்களின் வாசிப்பு இப்படித்தான் என நினைக்கிறேன். ஒன்று நினைவிலாடும்போது திரும்பவும் தேடிப்போகத்தூண்டும். சிரிப்பும் நகைப்பும் சிந்தனைத் தெரிப்பும் கைகூடிவந்தால் நீண்ட பயணம் நிச்சயம்.

மழைக்காலப் பாடல்கள்

இந்தவருடத்து மழை என்னைக் கவிதைகள் எழுதவைத்துவிட்டது நன்றி மழைக்கு---

காதல்: காமம் - பெண் கவிதைகள்

இந்த மூன்று பெண்களின் - சாய் இந்து, பாலைவன லாந்தர், கவிதா ரவீந்திரன் -கவிதைகளை முகநூலில் மட்டுமே வாசித்துக் கொண்டிருக்கிறேன். ஓராண்டுகளாக இவர்களின் கவிதைகள் வாரத்திற்கு ஒன்றிரண்டாவது வாசிக்கக் கிடைத்துவிடும். அளவையும் கூற்றுகளையும் வைத்துக் குறுந்தொகை போலவும் நற்றிணை போலவும் அகநானூறு போலவும் என நினைத்துக்கொள்ளும்போது மென்மையான சிரிப்பொன்று ஓடி மறைந்துவிடும்.

வரலாற்றைக் கவிதையாக்கி வாசித்தல்

பசித்த பூனைகளின் மென்மையையும், வன்மத்தின் பசித்த ஓநாய்களையும் பற்றிப் பேச நினைத்த அந்தக் கவிதை ஓரிடத்தில், வரலாறு எப்போதும் மாமிசங்களால் மட்டுமே எழுதப்படுகிறது என்ற வரிகளை எழுதிவைத்திருக்கிறது.

வாழ்தலின் ரகசியத்தைத் தேடுவது?

நகுலன் பற்றியும் நகுலன் கவிதைகள் பற்றியும் நடக்கும் பல விவாதங்களைப் பலநேரங்கள் வாசித்திருக்கிறேன். ஒவ்வொரு வாசிப்பின்போதும் அவை ‘நான்’ அல்லது ‘தன்’ னின் இருப்பு பற்றிய கேள்வியாகவும், விடை தெரியாத நிலையில் ஏற்படும் குழப்பமாகவும் புரியும். அப்புரிதல் பெரும்பாலும் பிழையானதல்ல என்ற நம்பிக்கையும் எனக்குண்டு.