இடுகைகள்

கல்விப்புல ஆய்வு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆய்வுத்தலைப்பைத் தேடியொரு பயணம்- சில குறிப்புகள்.

முன்னுரை: பல்கலைக்கழகப்பட்டங்களுக்கான கற்கையாக ஆவதற்கு முன்பே இயல், இசை, நாடகம் என மூன்றாக அறியப்பட்டது. ஐரோப்பியக் கற்கைமுறை அறிமுகமாகிப் பல்கலைக்கழகக் கற்கைமுறைகள் வளர்ந்த நிலையில் முத்தமிழ் என்ற தமிழ்ப்பரப்பு கலைப்புலத்தையும் அறிவியல் புலத்தையும் தனதாக்கத் தொடங்கி ஐந்தமிழ் என அறியப்பட்டது. அதன் தொடர்ச்சியாகவே தமிழ் ஆய்வு, தமிழியல் ஆய்வாக மாறியது. பல்கலைக்கழகக் கற்கைகளில் பட்டப்படிப்பு, மேல்பட்டப்படிப்பு தாண்டி ஆய்வுப்பட்டங்களுக்கும் தமிழ் உரியதானது. வகுப்பறைப்படிப்பாக இல்லாமல் முனைவர் பட்டத்திற்கும் ஆய்வியல் நிறைஞர் பட்டத்திற்கும் ஆய்வுப் பொருண்மைகளும் ஆய்வுத் தலைப்புகளும் தேவைப்பட்டன. இத்தேவைகளின் பெருக்கம் தமிழாய்வு என்னும் மரத்தின் இருபெரும் கிளைகளாக இருந்த மொழி, இலக்கியம் என்ற இரண்டையும் எப்படி விரிவாக்குவது என்ற கேள்விக்குள் நகர்த்தின. இந்நகர்தலின் பின்னணியிலும் மேற்கத்தியக் கற்கைமுறைகளும் சிந்தனைப்பள்ளிகளுமே செயல்பட்டன. மொழியைப் பற்றியும் இலக்கியம் பற்றியும் அவை தந்த புதிய கருத்தியல்கள், சார்புபாடங்களையும், துணைப்பாடங்களையும் உருவாக்கித் தந்தன. புதிதுபுதிதாகக் கண்டறியப்ப

பொதுப்போக்கிலிருந்து விலகுதல்

படம்
முனைவர் பட்டத்தை ஒருவர் எப்படி நினைக்கிறார் என்பதிலிருந்தே அவர் செய்யப்போகும் ஆய்வும் அமையும் . ஆய்வுப்பட்டத்தை இன்று பலரும் வேலைவாய்ப்புக்கான அடிப்படைத்தகுதியாகக் கருதுகின்றனர் . அந்த அங்கீகாரம் கையிலிருந்தால் , அதை வைத்து எப்படியாவது ஒரு கல்லூரியிலோ , பல்கலைக்கழகத்திலோ வேலை வாங்கிவிடலாம் என்பது அவர்களது கணிப்பு . அந்தக் கணிப்பு பிழையானதன்று . அப்படிச் செய்பவர்கள் பெரும்பாலும் போலச்செய்தல் முறையில் ஆய்வேடுகளைத் தருகிறார்கள் . மதிப்பீட்டாளர்கள் குறைந்த அளவுத் தேர்ச்சி மதிப்பெண்ணை வழங்கும் மனநிலையில் ஆய்வேட்டை மதிப்பிட்டு முனைவர் பட்டம் வழங்கப் பரிந்துரை செய்கின்றனர் .

பண்பாட்டு நிலவியலும் திணைக்கோட்பாடும்

படம்
முன்னுரை: தமிழ்ச் செவ்வியல் இலக்கியங்களைப் பண்பாட்டு நிலவியல் என்னும் புதுவகைக் கோட்பாட்டோடு தொடர்புபடுத்திப் பேசும் இக்கட்டுரையின் முதல்பகுதி பண்பாட்டு நிலவியல் என்னும் மேற்கத்தியப் புதுவகைக் கோட்பாட்டை விளக்குகிறது. தொடர்ந்து தமிழ்ச் செவ்வியல் இலக்கியங்களைப் புரிந்துகொள்வதற்குப் பயன்படும் அகப்பொருள், புறப்பொருள் இலக்கணங்களை இணைத்து உருவாக்கும் பாவியல் அல்லது கவிதைக் கோட்பாடு விளக்கப்படுகிறது. அதன் வழியாக தமிழின் கவிதையியல் கோட்பாடான திணைக்கோட்பாடும் பண்பாட்டு நிலவியல் என்னும் சிந்தனைமுறையும் எந்தெந்த விதங்களில் ஒத்துப்போகின்றன என்பதை இணைத்துக்காட்டுகிறது; விலகல்களையும் சுட்டிக்காட்டுகிறது. தொடர்ந்து இக்கோட்பாட்டைப் பயன்படுத்தித் தமிழியல் ஆய்வு எந்தெந்தப் பரப்பிற்குள் நுழையமுடியும் என்பதைக் கோடிட்டுக் காட்டுகிறது.

பொறுப்பேற்புகள் கூட வேண்டும்

படம்
தனித்திருத்தல், துறவு பற்றிய சிந்தனைகள் எல்லாக்காலகட்டங்களிலும் இருந்திருக்கின்றன. ஆனால், அவை எப்போதும் ஒட்டுமொத்த வாழ்க்கையின் பகுதியாக இருந்ததில்லை. அதற்கு மாறாகச் சேர்த்திருத்தல், பற்று என்பனவே பெருந்தொகை மனிதர்களின் வாழ்வியலாக இருக்கின்றது. நிகழ்கால நெருக்கடிகள் ஒவ்வொரு மனிதரையும், பலரையும் சார்ந்து வாழ வேண்டிய நெருக்கடிக்குள் திணித்திருக்கிறது. அந்தத் திணிப்புகள் உருவாக்கும் சிக்கலைத் தீர்க்கவே எல்லாவகை அமைப்புகளும் உருவாகியிருக்கின்றன. நிகழ்காலம் என்பது அந்தந்தக் காலகட்டத்துக்கும் உரியது.

ஈழம் : போரும் போருக்குப் பின்னும் - அண்மைப் புனைகதைகளை முன்வைத்து

படம்
இலக்கிய உருவாக்கத்தில் உள்ளடக்கத்திற்கும் வடிவத்திற்குமான உறவுபற்றிய சொல்லாடல்கள் முடிவிலியாகத் தொடர்பவை. எழுதப்படும் நிகழ்வு ஒன்றே ஆயினும், வெளிப்பாட்டுத்தன்மையையும் எழுப்பும் விவாதங்கள் அல்லது விசாரணைகளையும் இலக்கியத்தின் வடிவமே தீர்மானிக்கிறது. அடிப்படை இலக்கிய வடிவங்களான கவிதை, நாடகம், கதைகள் என்ற மூன்றிலும் எல்லாவற்றையும் எழுதிக் காட்டமுடியும் என்றாலும், வெளிப்படும்போது வேறுபாடுகள் தவிர்க்க முடியாதவைகளாக இருக்கின்றன. என்றாலும் ஒவ்வொரு வடிவத்திற்கும் பொருத்தமான சம்பவங்களும் சொல்முறையும் இருக்கவே செய்கின்றன. இலக்கியப் பிரதிகள் அடிப்படையில் மனிதர்களின் உணர்வுகளையும், உறவுகளையும் பதிவுசெய்யும் வெளிப்பாட்டு வடிவங்கள். உணர்வுகளும்சரி, உறவுகளும்சரி மனிதர்களுக்கிடையேயானதாகவும், மனிதர்களுக்கும் இயற்கைக்கு மிடையேயானதாகதாகவும் இருக்கின்றன. 

மணற்கேணியில் தமிழ்ச் செவ்வியல் இலக்கிய ஆய்வுகள்

முன்னுரை ஒவ்வொருவரும் அவரவர் தாய்மொழியின் இயல்பையும் இலக்கிய வரலாற்றையும் அதன் வளர்ச்சிப்போக்கிற்கான காரணங்களோடு அறிந்து கொள்ள வேண்டியது அடிப்படைத்தேவை. அந்தத்தேவை நிறைவேறும் போதுதான் அந்த நபர் தனது சொந்தப் பண்பாட்டுக்குள் இருப்பதை உணரமுடியும். ஒருவரின் தன்னிலை அல்லது இருப்பு என்பதே அவரது தாய்மொழியாலும், அதில் உருவான இலக்கியப்பிரதிகளாலும், அதன் வழியாக உருவாகும் பண்பாட்டுக் கூறுகளாலுமே உருவாக்கம் அடைகிறது.

ஆலயமு மண்டபமு மன்னசத்ர சாலையும்

[முன்குறிப்பு: முனைவர் பட்டத்திற்குச் சேர்ந்தபின் எழுதிய முதல் கட்டுரை. அப்போதுதான் சத்துணவுத் திட்டம் அறிமுகமான நேரம். விலையில்லா..., குறைந்த விலைத் திட்டங்களின் காலத்திலும் கொஞ்சம் பொருத்தம் உண்டுதான்] நாட்டில் வறட்சி ஏற்படுகின்றபொழுது கஞ்சித்தொட்டி வைத்தல், அன்னதான மண்டபம் அமைத்தல் போன்ற நிகழ்வுகள் ஏற்படுவது அண்மைக்காலங்களில் கண்கூடு. இதே தன்மையொத்த ‘ சத்திரம்- அதன் மூலம் உணவு வழங்கல்’ என்றொரு நிலையைக் கி.பி. 15 ஆம் நூற்றாண்டிற்குப் பிந்திய தமிழ் இலக்கியங்களில் காண முடிகிறது. கி.பி. 15 தொடங்கி 18 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை தமிழகத்தில் ஆட்சிபுரிந்த விசயநகர, நாயக்க அரசர்களின் சமூகநலத்திட்டங்களில் ஒன்றாகவே இவை கூறப்படுகின்றன. (அ.கி. பரந்தாமனார், மதுரை நாயக்கர் வரலாறு, ப.266) இக்கட்டுரை அத்தகைய சத்திரங்களின் நிறுவன வடிவையும், சமூகத்தேவையையும், மக்கள் எதிர்கொண்ட நிலைகளையும் காண முயல்கிறது. சத்திரத்தின் நிறுவன வடிவம். சத்திரம் என்ற அமைப்பு விசயநகர, நாயக்க அரசர்கள் காலத்தில் காணப்பட்டாலும், அது வேறொரு வடிவில் பிற்காலச் சோழர்கள் காலத்திலேயே இருந்துள்ளது. தர்மகாரியமாக அன்னதான ம

தொல்காப்பியம்; இலக்கணத்தைத் தாண்டி...

முன்னுரை தொல்காப்பியம் எழுத்து , சொல் , பொருள் என முப்பொருண்மையை விரிவாகப் பேசும் இலக்கணம் என்பது நமது கல்விபுலம் சொல்லும் தகவல். பின்னர் யாப்பு , அணி என இரண்டும் தனி இலக்கணங்களாக விரிவுபட்டதின் தொடர்ச்சியாகத் தொல்காப்பியத்திலேயே ஐந்திலக்கணம் குறித்த செய்திகள் உண்டு எனப் பேசத்தொடங்கியது தமிழ்க் கல்விப்புலம்.   இன்று உலக அறிவு விரிவடைந்துள்ள நிலையில் தொல்காப்பியத்தை இலக்கண நூலாகக் கற்பிப்பதைத் தாண்டி ஓர் அறிவுத் தோற்றவியல் நூலாகக் கற்பிக்க வேண்டும் என்பது எனது நிலைப்பாடு. ஐரோப்பியர்கள் அரிஸ்டாடிலின் எழுத்துகளைத் தொகுத்து வைத்துக்கொண்டு ஐரோப்பிய அறிவின் தொடக்கமாக முன்வைக்கிறார்கள். அப்படியொரு ஆளுமையாகத் தொல்காப்பியரை முன்வைக்க முடியும் . தொல்காப்பியப் பனுவலுக்குள் மனித அறிவுருவாக்கம் குறித்த விளக்கங்கள், சமூகவியல் அறிவு, உடலைப் பயன்படுத்தி உணர்வுகளைக் காட்டும் நடிப்புக்கோட்பாடு, நூலறிவியல் சிந்தனைகள், இடம்பெற்றுள்ளன. 

தமிழ் அறிவுத்தோற்றவியலின் பரிமாணங்கள்

திருக்குறளின் கல்வி கேள்வி அதிகாரங்களை முன்வைத்து முன்னுரை: மனித நாகரிக வளர்ச்சி என்ற சொல்லாடலில் இலக்கியங்களுக்குப் பெரும்பங்கு இருக்கின்றன என்ற கருத்து இன்று ஏற்கப்பெற்ற கருத்து. அதிலும் தமிழ் போன்ற செவ்வியல் மொழிகளிலிருந்து உருவான இலக்கியங்கள், அம்மொழி பேசுகின்றவர்களின் வளர்ச்சியில் மட்டுமல்லாமல், உலகந்தழுவிய பொதுமைக் கூறுகளை முன் வைத்து உலக நாகரிக வளர்ச்சிக்கே காரணிகளாக ஆகியிருக்கின்றன.

பண்பாட்டு நிலவியலும் தமிழ் நாவல் வாசிப்பும்

உலக இலக்கிய வரலாற்றின் ஆதியிலக்கிய வடிவம் எது? எனக் கேட்டால் ஐரோப்பியச் செம்மொழிகளான கிரீக், லத்தீன் மொழிகளிலிருந்து தொடங்கும் ஐரோப்பிய இலக்கியங்களைக் கற்றவர்கள் நாடகங்கள் தான் ஆதி இலக்கியங்கள் எனச் சொல்லக் கூடும். ஆனால் அவை கவிதைகளால் ஆன நாடகங்கள் எனத் தடுமாறவும் கூடும். அதேபோல் இந்தியச் செம்மொழிகளில் ஒன்றான சமஸ்கிருதத்திலிருந்து இலக்கிய வடிவங்களை உருவாக்கிக் கொண்டவர்கள்கூட நாடகங்களே ஆதியிலக்கிய வடிவங்கள் என நினைக்கவே செய்வார்கள். ஆனால் வேதங்களையும் ஸ்மிருதிகளையும் கணக்கில் கொண்டு கவிதைகளே ஆதியிலக்கிய வடிவம் என்று மயக்கங்கொள்ளவும் செய்வர். ஆனால் இன்னொரு செம்மொழியாகிய தமிழ்ச் செம்மொழியிலிருந்து உருவாக்கப்பெற்ற இலக்கிய மரபை அறிந்தவர்கள் கவிதையே ஆதியிலக்கிய வடிவம் என்று தயங்காமல் சொல்வர். நாடகத்தன்மையைக் கொண்ட தொடர்நிலைச் செய்யுளாகிய சிலப்பதிகாரம் கூட உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் தான்.

பெண்ணியம்: இமையம் கிளப்பிய சர்ச்சை

இந்தக் கட்டுரையை வாசித்துவிட்டுப் போயிருந்தால் இவ்வளவு சர்ச்சைகளும் பேச்சுகளும் உண்டாகியிருக்காது என்றே நினைக்கிறேன். முதலில் கட்டுரை அப்புறம் சர்ச்சைகளும் விளக்கங்களும்

பெண்ணியம்: கருத்தரங்க நிகழ்வு

படம்
“ பெண்ணியம்: எழுத்துகள் வாசிப்புகள் சொல்லாடல்கள் என்றஇரண்டு  நாள் பயிலரங்கின்    படத்தொகுப்பு. 

ஒரு கருத்தரங்கமும் பின் விளைவுகளும்

படம்
கல்வி நிறுவனங்களின் நிதியாண்டு முடிவு மார்ச் 31. அதற்குள் ஒதுக்கப்பெற்ற நிதியைக் கொண்டு கருத்தரங்கம், பயிலரங்கம், சொற்பொழிவுகள் என நடத்திக் காட்ட வேண்டும். அதன் பயன்பாடு மாணாக்கர்களுக்குப் போய்ச் சேர வேண்டும் என நினைப்பதைவிட நடத்தி முடிக்க வேண்டும்; நண்பர்களை அழைத்துவிட வேண்டும் என்ற ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்பதே பொதுப்போக்கு. அதிலிருந்து விலகிச் செல்லும் நபர்களும் உண்டு. கடந்த இரண்டு மாதமாக நான்கு பல்கலைக்கழகங்கள், ஆறு கல்லூரிகளுக்குச் சொற்பொழிவாற்றவும் கட்டுரை வாசிக்கவும் சென்றிருக்கிறேன். இன்னும் சில கல்லூரிகளுக்கும், பல்கலைக் கழகங்களுக்கும் செல்ல வேண்டியுள்ளது. அதற்கிடையில் எங்கள் பல்கலைக் கழகத்திலும் நிகழ்வுகளை ஒருங்கிணைத்துக் காட்ட வேண்டியதும் அவசியம்.

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

படம்
இந்தியச் சாதீய முறை, இந்தியச் சமுதாய வரலாறு பற்றிய ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்க்கின்ற அதே நேரத்தில் அவர்களுக்கு அறைகூவல் விடுக்கும் சிக்கலாகவும் இருக்கிறது.இந்திய வரலாற்றையறிய உதவும் சான்றுகளுள் மிகத் தொன்மையானவைகளாகக் கருதப்படும் வேதங்களின் காலத்திலிருந்தே தொடர்ந்து சாதிப்பிரிவுகள் இருந்து வந்துள்ளன. தமிழ் நிலப்பரப்பிற்குள் ஆகத் தொன்மையான தனிநூல் தொல்காப்பியம். அதன் முன்பின் இலக்கியங்கள் சங்கக் கவிதைகள். இவைகளும் ஒருவித சாதிவேறுபாடுகளைக் காட்டியுள்ளன. இந்தக்கட்டுரை தமிழக வரலாற்றில் சாதியமைப்பு இறுக்கமும் பெருக்கமும் பெற்றதாகக் கருதப்படும் நாயக்கர்களின் காலத்தில் சாதிகளின் இருப்பு நிலையை மையப்படுத்தி அக்கால சமூக அசைவியக்கம் எவ்வாறு இருந்நது எனப் பேச முயல்கிறது. அம்முயற்சியில் முதலில் சாதிகள் பற்றிய தகவல்களையும் அவற்றின் இயல்புகளையும் விவரித்துவிட்டு, அதன்பின்னர் அதன் கட்டமைப்பையும் அசைவுகளையும் பற்றிப் பேசுவது என்ற முறையிலைப் பின்பற்றியுள்ளது.

இந்தியத்தனம் நிரம்பிய நவீன நாடகங்கள் : இந்திரா பார்த்தசாரதி, கிரிஷ் கர்னாட் ஓர் ஒப்பீடு

படம்
ஒட்டுமொத்த மனித குலத்திற்கு இந்தியாவின் கொடை என்ன? என்ற கேள்விக்கு, " இந்தியத்தனம் தான் இந்தியாவின் கொடை; அது மட்டும் இல்லையென்றால்,வெறும் கைகளில் ஏந்திய கிண்ணத்துடன் தான் உலகத்தின் முன்னால் இந்தியா நின்றிருக்க வேண்டும்" என்று புகழ்பெற்ற கலைவிமரிசகரும் வரலாற்றாய்வாளருமான ஆனந்த குமாரசாமி சொன்னதாக ஒப்பியல் அறிஞர் சி.டி.நரசிம்மய்யா எழுதியுள்ளார் [C.D.Narasimhaiah,2003,P.5]. தொடர்ந்து சி.டி.நரசிம்மய்யா, இந்தியத்தனத்தின் கூறுகள் எவையெனக் கூறுவதை ஏற்றுக் கொள்வதில் அறிஞர்களுக்கும் சிந்தனையாளர்களுக்கும் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்.

தமிழச்சியின் கவி உலகம்

படம்
அவரவர்க்கான மழைத்துளிகளும்  அவரவர்க்கான கவிதைகளும் .                                                                                                               முன்னுரை கல்லூரி ஒன்றில் ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியராகவும் , அரங்கவியல் செயல் பாட்டாளருமாக அறியப் பட்டிருந்த கவி தமிழச்சியின் முதல் தொகுதியான    எஞ்சோட்டுப் பெண் பெறாத கவனத்தை அவரது இரண்டாவது தொகுதியான வனப்பேச்சி பெற்றுள்ளது. மித்ர ஆர்ட்ஸ் கிரியேஷன்ஸின்   தயாரிப்பான எஞ்சோட்டுப் பெண் மிகுந்த கவனத்துடன் அதிகப் பணச் செலவிலும் தயாரித்து வெளியிடப் பட்ட  கவிதைத் தொகுப்புகளுள் ஒன்று. நூலாக்கத்தில் முதல் தொகுப்பிற்குச் செலுத்திய கவனத்தில் பாதி தான் வனப்பேச்சிக்கு இருந்திருக்கும். என்றாலும் முதல் தொகுதியை விடவும் இரண்டாவது தொகுதி கூடுதலான விமரிசன மேடைகளையும் வாசகக் கவனத்தையும் மதிப்புரைகளையும் பெற்றது.

தமிழ் ஊடகங்களில் பழங்குடியினர் பதிவுகள்

படம்
பண்பாடு என்பதை இரட்டை எதிர்வுகளின் மோதலாகக் கணித்துப் பேசும் ஆய்வாளர்கள் தங்களின் சார்புக் கேற்ப தரவுகளைச் சேகரித்து வாதிட்டு நிறுவ முயலும் காலத்தை இன்னும் நாம் கடந்து விடவில்லை . நிகழ்காலத்தில் அதிகம் உச்சரிக்கப்படும் எதிர்வாக இருப்பது மைய நீரோட்டப் பண்பாடு x விளிம்புநிலைப் பண்பாடு என்று எதிர்வு எனச் சொல்லலாம்.

சங்கப் பெண்கவிகளின் கவிதையியல்-புறம்

கவிதையியல் என்னும் கலைக்கோட்பாடு: ஓரு படைப்பாளி அல்லது ஓர் இலக்கிய இயக்கம் பின்பற்றும் படைப்பியக்கத்தைக் குறிக்கும் சொல்லாகவே கலைக் கோட்பாடு என்னும் பொதுவரையறை அர்த்தம் பெற்றுள்ளது. பொதுவரையறையின் அர்த்தம் கவிதையியல் என்னும் அதன் கூறுக்கும் பொருந்தும். நீண்ட பாரம்பரியம் கொண்ட தமிழில் கவிதையியல் என்பதற்கும் இலக்கியக் கோட்பாடு என்பதற்கும் பெரிய வேறுபாடுகள் இருந்ததில்லை. ஐரோப்பியர்களின் வருகைக்கும் பின்னால் சில மாற்றங்கள் உள்ளன என்றாலும் கவிதையியலும் இலக்கியக் கோட்பாடும் நேரெதிரானவை அல்ல. இலக்கியக் கோட்பாடு முதன்மையாகக் கருதுவது படைப்பியக்கத்தை; படைப்பியக்கம் முதன்மையாக முன் வைப்பது படைப்பு சார்ந்த நுட்பங்களை. படைப்புப் பொருள்,படைப்புமுறை, படைப்பு நோக்கம் என படைப்பு நுட்பங்கள் விரியக் கூடியன. படைப்பு சார்ந்த இவையெல்லாம் படைப்பில் வெளிப்படுகின்றன என்று காட்டுவது மட்டுமல்லாமல், அதன் நுகர்வோராகிய வாசகர்களிடம் சென்று சேர்வதில் தான் படைப்பியக்கம் முழுமை அடைவதாக அண்மைக்காலத் திறனாய்வுகள் பேசுகின்றன.

சுந்தரராமசாமியின் கவிதைகளுக்குள் உள்ளிருப்போரும் கேட்போரும்

படம்
‘ மேற்கத்திய கவிதைகளில் மேற்கத்திய விமர்சகர்கள் கண்டு பிடித்த சிறப்புகளைத்தமிழ்க் கவிதையின் மீது யந்திரரீதியாகப் பிணைப்பது தமிழ்த் திறனாய்வு ஆகிவிடாது’ “ நம் இலக்கியச் செல்வங்கள் நமக்குத் தரும் அனுபவங்களின் சாரங்களிலிருந்து நம் இலக்கியக் கோட்பாடுகள் உருவாகி வரவேண்டும்” (ப.22,25/ ந.பி. கலை: மரபும் மனிதநேயமும்.) இந்தக் குறிப்புகள் என்னுள் நிலைகொள்வதற்கு முன்பாகவே வேறு ஒரு கேள்வி அலையடித்துக்கொண்டே இருந்தது. இப்போதும் இருக்கிறது. அந்தக் கேள்வியை நான் எழுதும் இலக்கிய இதழ்கள் கட்டுரை எதிலும் எழுப்பவில்லை. கல்வியியல் புலம் சார்ந்த பேராசிரியர்கள் வாசிக்கக் கூடிய நூலொன்றிற்காக எழுதிய கட்டுரையில் எழுப்பியிருக்கிறேன்.

இலக்கிய ஆய்வுகளும் சமுதாய அறிவியலும்

இன்று தமிழ் ஆய்வுகள், தமிழியல் ஆய்வுகளாகக் கல்வி நிறுவனங் களுக்குள் மாறிவிட்டன.புதிதாகத் தொடங்கப்படும் ஒரு பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறை, தமிழியல் துறையாக அமைக்கப்பட வேண்டும் என வல்லுநர் குழுக்கள் பரிந்துரைக்கின்றன. பல்கலைக் கழகத்திற்கு வெளியே செயல்படும் தமிழ் சார்ந்த உயராய்வு நிறுவனங்களும் தமிழியல் ஆய்வு நிறுவனங்களாகவே செயல்படுகின்றன.