இடுகைகள்

ஜனவரி, 2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஆண்டின் கடைசி நாளிலிருந்து இன்னொரு ஆண்டின் முதல் நாளுக்கு

2026 ஆம் ஆண்டை இதற்கு முந்திய ஆண்டு போல நகர்த்தக் கூடாது என்று நினைக்கிறேன். அதனை உறுதி ஏற்பு என்று சொல்லத்தோன்றவில்லை. 1980 ஆம் ஆண்டிலிருந்து எழுதி வரும் எனக்கு தொடர்ச்சியாக ஒன்றில் ஆழமாக எழுதிப் புதையும் மனநிலை இல்லை என்று 45 ஆண்டுகளுக்குப் பின்னர் உறைக்கின்றது. அந்த மனநிலை இருந்திருந்தால் தொடங்கிய நாவல்களை முடித்திருக்கலாம். எழுத நினைத்த இன்னும் சில நாடகங்களை எழுதி நூலாக்கியிருக்கலாம். என்னிடம் இருப்பது தாவித்தாவிச் செல்லும் மனநிலை என்று புரிந்திருக்கிறது. இதைக் கைவிட வேண்டும் என நினைக்கிறேன். அரசியல், சினிமா, நாடகம், இலக்கியம், ஊடகக் கவனம் என அவ்வப்போது எழுதித் தாண்டியிருக்கிறேன் கடந்த காலத்தை.