இடுகைகள்

செப்டம்பர், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நவீனத்துவமும் பாரதியும்

படம்
ஆங்கிலத்தில் மாடர்ன் (Modern), மாடர்னிட்டி (Modernity), மார்டனிசம்(Modernism) என மூன்று கலைச்சொற்கள் பயன்பாட்டில் உள்ளன. இம்மூன்று சொற்களின் வேர்ச்சொல் மார்டன் (Modern) என்பதே என்றாலும் பயன்பாட்டு நிலையில் வேறுபாடுகள் உள்ளன. இம்மூன்று சொற்களையும் தமிழில் நவீனம், நவீனத்துவநிலை, நவீனத்துவம் என மொழிபெயர்ப்புச் செய்து பயன்படுத்தலாம். தமிழில் ஒவ்வொன்றும் தனித்தனியாகச் சரியாகப் பயன்படுத்தப்படுகிறதா? என்பது விவாதிக்கப்பட வேண்டியது.

மனுஷ்யபுத்திரனின் கவிதைச் சம்பவங்கள்

படம்
  நாடகங்களைக் கவிதை வடிவில் எழுதிய சேக்ஸ்பியர், கவிதை வடிவமே உணர்ச்சிகளுக்கான வடிவம் என்பதை உடன்பாட்டுடன் சொல்கிறார். Poetry is the spontaneous overflow of powerful feelings/கவிதை வடிவம் தன்னுணர்வற்ற நிலையில் தோன்றிப் பெருகும் வலுவான உணர்ச்சிகளின் வெளிப்பாடு என்பது வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் சொன்ன வரையறை.

பெண்ணிய வாசிப்புகள் - ஒரு மதிப்புரை

படம்
தமிழ் சிறுகதை இலக்கியத்திற்கு பங்களித்துள்ள 26 பெண் எழுத்தாளர்களின் கதைகளை இந்நூலில் ஆய்வுக்குட்படுத்தி விவாதிக்கிறார். தமிழ்நாடு மட்டுமல்லாது இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் வசிக்கும் பெண் எழுத்தாளர்களின் கதைகளையும் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டதை மிக முக்கியமானதாகக் கருதுகிறேன்.

போர்க்களத்தை விசாரித்தல்: விஜயராவணனின் இரண்டு கதைகள்

படம்
சால்ட் பதிப்பக வெளியீடாக வந்த விஜயராவணனின் நிழற்காடு தொகுப்பிற்குப்பின் மூன்று கதைகளை வாசித்துள்ளேன். மூன்றும் இணைய இதழ்களில் தான் பதிவேற்றம் செய்யப்பட்டவை.   கதைக்கான பொருண்மையைத் தேர்வுசெய்வதிலும், அதனைச் சொல்வதற்குத் தெரிவுசெய்யும் சொல் முறைமையிலும் தலைப்பிடுதலிலும் புதியனவாக இருக்கவேண்டும் என்று மெனக்கிட்டு எழுதுகிறார் என்பதைக் காண முடிகிறது. இப்போது பதிவேற்றம் பெற்றுள்ள ‘தங்கமீன்’ கதை எழுப்பும் விசாரணைக்காகவும், அவ்விசாரணையின் உள்ளார்ந்த கவனத்தை வாசிப்பவர்களுக்குக் கடத்துவதற்காக அவர் தேர்வு செய்துள்ள சொல்முறைமைக்காகவும் பாராட்டப்பட வேண்டியவர்.

தங்கலான்: விடுதலை அரசியலின் கருவி

படம்
சினிமாவின் மையங்கள் அண்மையில் திரையரங்குகளில் வெளியாகிப் பேசப்பட்ட சினிமா தங்கலான். விக்ரம், பார்வதி, பசுபதி என அறியப்பட்ட நடிகர்கள் நடித்துள்ளார்கள். என்றாலும் தங்கலான் இயக்குநரின் சினிமா என்றே அறியப்படும். இயக்குநரின் சினிமா என்பதை இங்கே பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுக் கொண்டாடப்படுகிற நடிகர் மைய சினிமாவின் எதிராக நிறுத்துகிறேன்.

தி.ஜானகிராமனின் சிறுகதைகளில் வெளிப்படும் எழுத்தாளுமை.

படம்
வரலாற்றில் வாழ்தல் என்பதாக நினைத்துக் கொள்வதே மகிழ்ச்சியளிக்கக் கூடிய ஒன்று. ஒருவர் வரலாற்றின் பகுதியாக இருப்பதும், வரலாற்றை மாற்றுவதற்கான காரணமாக இருப்பதும் கூடுதல் மகிழ்ச்சிக்குரியன. ஒருவருக்கு மாற்றப்படும் வரலாற்றின் தொடக்கப் புள்ளியாக மாறும் வாய்ப்புக் கிடைக்கிறதென்றால் அவரும் அவர் சார்ந்த குழுவும் கொண்டாட்ட மனநிலைக்குள் நுழைகின்றனர் எனச் சொல்லலாம். சாகித்திய அகாடெமி திட்டமிட்டுள்ள இந்தக் கருத்தரங்கம் இதுவரை அறியப்பட்ட சிறுகதை வரலாற்றின் தொடக்கப்புள்ளியை நகர்த்திப் பார்ப்பதன் மூலம் மாற்று வரலாற்றை முன் வைக்க முயல்கிறது என நினைக்கிறேன். சிறுகதையின் தொடக்கம் வ.வே.சு. அய்யரின் குளத்தங்கரை அரசமரத்தில் இருப்பதாகச் சொல்லப்பட்ட வரலாற்றிற்குப் பதிலாகப் பாரதியின் வசன எழுத்துக்களில் சிலவற்றைத் தமிழ்ச் சிறுகதையின் முன்னோடி வடிவம் எனச் சொல்ல முயல்கிறது எனக் கருதிக் கொள்கிறேன்.

தமிழில் எடுக்கப்பட்ட வலைத்தொடர்கள்

படம்
காட்சி ஊடகச்செயலிகளின் தேவைக்காகத் தயாரிக்கப்படும் வலைத் தொடர்களில் சில பொதுத் தன்மைகள் காணப்படுகின்றன. வெளிப்பாட்டு மொழியின் அடையாளத்தைத் துறத்தல் என்பது முதல் பொதுத்தன்மை. வணிக நிறுவனங்களின் பொழுதுபோக்கு அம்சங்களுக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என நினைப்பது இரண்டாவது தன்மை. இத்தன்மை மாற்றத்தில் காட்சிச் செயலிகளின் இலக்குப்பார்வையாளர்கள் பற்றிய கணக்கீடுகளும் முக்கியப்பங்கு வகிக்கின்றன. இந்தப் பின்னணியில் சில குறிப்பிட்ட வகையான வலைத்தொடர்களே முதன்மையாகத் தயாரிக்கப்படுகின்றன. அவற்றைத் திகில்/மர்மம், அமானுஷ்யம்/இறையருள் நம்பிக்கை, குற்றச்செயல்/துப்பறியும் தொடர் என்பதான வகைப்பாட்டுக்குள் அடக்கிவிடலாம்.

மாஜீதா பாத்திமாவின் சிறுகதைத் தளங்கள்

படம்
வாசிக்கப்படும் இலக்கியப் பிரதியொன்றை ஆண்மையப் பிரதியா? பெண் மையப் பிரதியா? என அடையாளப்படுத்திக் கொண்டு விவாதங்களை முன்வைப்பது பெண்ணிய அணுகுமுறை. ஒரு பிரதியை அடையாளப்படுத்தும் கூறுகள் அதன் தலைப்பு தொடங்கி, சொல்லும் பாத்திரம், விசாரிக்கப்படும் பாத்திரங்கள், உண்டாக்கப்படும் உணர்வுகள், வாசிப்பவர்களுக்குக் கிடைக்கும் சிந்தனை மாற்றம் எனப் பலவற்றில் தங்கியிருக்கக் கூடும். தனது எழுத்துக்கள் ஒவ்வொன்றிலும் பெண்மையங்களையே எழுதும் மாஜிதா பாத்திமா, அதற்காக உருவாக்கும் பாத்திரங்களை எவ்வகையான பாத்திரங்களாகக் காட்டுகிறார் என்பதின் வழி தான் நம்பும் பெண்ணியச் சிந்தனையை - அதன் வழியாகப் பெண் விடுதலையைப் பேசுகிறார்.