தமிழினியின் கவிதைகள்:பொதுவிலிருந்து சிறப்புக்குள் நகர்த்துதல்

தமிழினி ஜெயக்குமரனின் போர்க்காலம் தொகுப்பில் இருக்கும் கவிதைகள் எண்ணிக்கை 14 மட்டுமே. இதற்குமேல் கவிதைகள் எழுத அவள் இல்லை. மொத்தமுள்ள 48 பக்கங்களில் இந்த 14 கவிதைகளும் அச்சாகியுள்ள பக்கங்கள் 26. மீதமுள்ள பக்கங்களில் சில உரைகள் உள்ளன.4 வது கவிதை இது : கைவீசி நடக்கிறது காலம். அதன் கால்களில் ஒட்டிய துகள்களாய் மனித வாழ்க்கை- ஒட்டுவதும் உதிர்வதுமாய். காலத்தை முந்திப் பாய்கின்றன கனவுக்குதிரைகள். காலடி பிசகாமல் நீள்கிறது காலப்பயணம். வேறெதையும் கண்ணுற்று நிற்பதுமில்லை கணக்கெடுத்துச் சுமப்பதுமில்லை. காலம் நடக்கிறது.