இடுகைகள்

அசோகமித்திரனின் சிறுகதைத் தொனிகள்

படம்
சமூக யதார்த்தத்தை எழுதுவதில் இரண்டு போக்குகள் உள்ளன. முதல் போக்கு குறிப்பான இலக்கு எதனையும் வைத்துக் கொள்ளாமல் சமூகத்தின் இருப்பையும் அதன் விசித்திரங்களையும் அதற்கான சமூகக் காரணங்களையும் தனிநபர் செயல்பாடுகளையும் எழுதிக் காட்டும் முறை. இதன் தொடக்கப் புள்ளியாகப் புதுமைப்பித்தன் எழுத்துக்களைச் சொல்லலாம். அவர் தொடங்கிய இந்தப் போக்கின் நீட்சியாகச் சுந்தரராமசாமி, சா.கந்தசாமி, அசோகமித்திரன், பிரபஞ்சன், பாவண்ணன், சுப்ரபாரதி மணியன் போன்றவர்களின் சிறுகதைகளும் நாவல்களும் இருக்கின்றன எனக்கூறலாம். 

கெட்டுப்போகும் பெண்கள்

படம்
மனிதர்களின் அடிப்படைத் தேவைகள் உணவு, உடை, இருப்பிடம் என்று வரையறுத்துச் சொல்ல முடிவதுபோல் அடிப்படை உணர்வுகள் இவைதான் என்று வரையறுத்துச் சொல்லிவிட முடியாது. அடிப்படைத்தேவைகளைப் பெறவும் தனதாக்கிக்கொள்ளவும் உரிமைகொண்டாடவும் உருவாக்கப்படும் நடைமுறைகளே உழைப்பின் விதிகளாக மாறுகின்றன. உழைப்பு விதிகளின்படி கிடைக்கும் அடிப்படைத்தேவைக்கான பொருட்களைப் பிரித்துக்கொள்ளும் முறைகள் உருவாக்கப்படும்போது பொருளியல் அல்லது தொழில்முறை நடைமுறைகள் உருவாகின்றன.

கலை அடையாளங்களும் காமத்தின் ஈர்ப்பும்

படம்
  கலைகளில் ஒன்றை உருமாற்றம் செய்து ஒரு மொழி சார்ந்த குழுமத்தின் அல்லது நிலம் சார்ந்த பண்பாட்டின் அடையாளமாக மாற்றமுடியும் என்பதை இந்திய மாநிலங்களின் கலை பண்பாட்டு அமைப்புகள் செய்து காட்டியுள்ளன. தமிழ்நாட்டின் பண்பாட்டு அமைப்புகளும் பல்கலைக்கழக அழகியல் சார்ந்த துறைகளும் அதனைச் செய்ய முயற்சிக்கவில்லை என்றே தோன்றுகிறது.    நாடகம், நடனம், இசை, இலக்கியம் எனப் பலவற்றில் நாம் இத்தகைய முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும்.

திரைப்படங்கள் பார்த்த ஒரு ரசிகனின் பயணம்

படம்
என் நினைவில் இருக்கும் ஆகப் பழைய படத்துக்கு வயது அரை நூற்றாண்டு ஆகப் போகிறது. கலையரசி (இயக்கம்: A.காசிலிங்கம்) திரைக்கு வந்த 1963 ஆம் ஆண்டிலேயே படத்தைப் பார்த்திருக்க வாய்ப்பில்லை. மதுரையில் இருந்து 35 மைல் தொலைவில் இருக்கும் எழுமலை டூரிங் டாக்கீஸுக்கு ஒரு படம் வந்து சேர குறைந்தது இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் ஆகும். எனது ஊரிலிருந்து இரண்டு மைல் தொலைவிலிருந்த தாய்க்கிராமம் எழுமலையில், எம்.ஜி.ஆர்- பானுமதி நடித்த கலையரசியை இரண்டாம் ஆட்டமாகப் பார்த்துவிட்டு நள்ளிரவுக்குப் பின்னால் வீடு வந்து சேர்ந்த நினைவு இன்னும் பசுமையாக இருக்கிறது. அப்போது எனக்கு ஆறு அல்லது ஏழு வயதிருக்கும்.

திறமையாளர்களைக் கண்டறிதலும் திறப்புகளை உருவாக்குதலும் -மு.க.வும் மு.க.ஸ்டாலினும்

படம்
நான் முதல்வன் திட்டம் 2022, மார்ச், ஒன்றாம் தேதி, முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் ‘நான் முதல்வன்’ என்னும் திட்டத்தைத் தொடங்கிவைத்தார். அதனால் விளைந்துள்ள பலன்களைத் தமிழக இளையோர்கள் உணரவும் பயன்படுத்திக் கொள்ளவும் தொடங்கியுள்ளனர். இன்னும் சில ஆண்டுகளில் நான் முதல்வன் திட்டம் வழியாகப்  பள்ளிக்கல்வியைச் சரியாகவும் திறனுடனும் முடித்துக் கல்லூரிக் கல்விக்குள்  நுழைந்தவர்களின் எண்ணிக்கை பல லட்சங்களாக இருக்கப் போகின்றது. 

தமிழில் திரை விமர்சனம்

படம்
ஒரு சினிமா வெளிவந்து முதல் காட்சி முடிவதற்கு முன்பே சில நூறு விமரிசனக்குறிப்புகள் வந்துவிழும் காலத்தில் இருக்கிறோம். சமூக ஊடகங்களின் வரவால் ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்தில் தமிழ்ச் சினிமா உலகம் -சினிமாவைத் தொழிலாக நம்பியிருக்கும் தொழிலாளர்களும் வணிகர்களும் பெரிதாகப் பாதிக்கப்படுகிறார்கள் எனப் பலரும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு சிறுகதை -ஒரு வலைத்தொடர் -ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி

மறுவிளக்கம் என்னும் புத்தாக்கம்: இமையத்தின் இன்னொரு நகர்வு இம்மாத உயிர்மையில் 'தண்டகாரு(ர)ண்யத்தில் சீதை' (காருண்யம் அல்ல; காரண்யம் என்பதே சரியான சொல்) என்றொரு சிறுகதை அச்சாகியுள்ளது; எழுதியுள்ளவர் இமையம். தலைப்பில் சீதை என்னும் இதிகாசப்பாத்திரத்தின் பெயரைச் சூட்டியதின் வழியாக அவரது புனைவாக்கத்தில் புதிய தடமொன்றின் முதல் கதையாக அமைந்துள்ளது இந்தக் கதை . அவர் எழுதிய சிறுகதைகளைப் பெரும்பாலும் வாசித்திருக்கிறேன். இதைத்தான் அவரது முதல் மறுவிளக்கக்கதையாக வாசிக்கிறேன். தொடர்ந்து தனது சிறுகதைகளுக்கான பாத்திரங்களைச் சமகால வாழ்க்கையிலிருந்து தெரிவு செய்து எழுதுபவர். இந்தக் கதையில் அதிலிருந்து விலகி, இதிகாச நிகழ்வொன்றை மறுவிளக்கம் செய்துள்ளார்.மரபான ராமாயணங்களில் கணவனின் கால்தடம்பற்றி நடக்கும் சீதையை விவாதிக்கும் பெண்ணாக எழுதிக்காட்டியுள்ளார். அந்த விவாதங்களில் தனது கணவன் ராமனிடம் பல வினாக்களை எழுப்புகிறாள்;விடைகள் சொல்லாமல் ஒதுங்கிப்போனாலும் விடாமல் கேள்விக்கணைகளைத் தொடுக்கிறாள்; தனது சிந்தனையைத் தனது கருத்தாக முன்வைக்கிறாள். “ராமன் என்பதும் ராமனுக்கான அதிகாரம் என்பதும் அவனுடைய கையிலிரு