தணிக்கைத்துறை அரசியல்

இப்படி எழுதுவதால் ஊழலை ஆதரிக்கிறேன் என்று எடுத்துக்கொள்ள வேண்டாம் என்ற முன் குறிப்போடு எழுதுகிறேன்: அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் ஊழல்கள் குறித்து விரிவான தகவல்கள் வெளிவருகின்றன; விவாதங்கள் நடக்கின்றன; குற்றச்சாட்டுகள் - தண்டனைகள்- விடுவிப்புகள் என நீள்கின்றன. தொடர்ச்சியாக வெளிப்படும் இத்தகவல்களால் இந்தியா ஊழல் மலிந்த நாடு என்ற அடையாளத்தைப் பெற்றுக் கொண்டே இருக்கிறது. விடுதலைபெற்ற இந்தியாவில் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே தனியார்துறைகளும் ஊக்கப்படுத்தப் பெற்றன என்பது உண்மை. தனியார் துறையில் நடக்கும் பணிவழங்கல்கள், நிதிச்செலவு முறைகள், லாபத்தை பங்கிடும் முறைகள், சமூக நலப் பங்களிப்பிற்குத் தனியார் துறைகள் அளிக்கும் உதவிகள்,அறக்கட்டளைகள் உருவாக்குதல், உறுப்பினர்களாக்குதல், பொதுக்குழு, செயற்குழு, ஆட்சிக்குழு போன்றவற்றில் பொறுப்புகள் உருவாக்கி நியமித்தல் எல்லாம் வெளிப்படையாகவா நடக்கின்றன. அங்கெல்லாம் தவறுகளே நடந்ததில்லையா என்பது கேட்கப்படாத கேள்விகளாக உள்ளன. தனியார் துறைகளில் - அறக்கட்டளைகளை ஆரம்பிப்பவர்கள், அனுமதி வாங்கும் முறை, நிதியுதவிபெறும் மு...