இடுகைகள்

நியோகா: பழைய தர்மத்திற்குள் புதிய விடியல்

படம்
ஈழவிடுதலை , தனி நாடு போன்றவற்றிற்கான போராட்ட ம் மற்றும் போர் நிகழ்வுகளையும், அதன் விளைவான புலப்பெயர் வுகளை யும் பின்னணியா க க்கொண்ட புனைகதைகள் நிறைய வாசிக்கக் கிடைக்கின்றன. அவ்வப்போது திரைப்படங்களாகவும் வந்து கொண்டுள்ளன. கனடாவில் வாழும் சிறுகதை ஆசிரியர், அரங்கவியலாளர் கருப்பு சுமதி யின் இயக்கத்தில் உருவான நியோகா என்ற சினிமா அப்படியானதொரு படம்.   2016 இல் கனடாவில் வெளியான அந்தப் படத்தின் திறப்பு பொதுப்பார்வையாளர்களுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது என்ற தகவலை சுமதியின் முகநூல் வழியாகப் படித்த தால் இணையத்தில் அந்தப் படத்தைப் பார்த்தேன்.

மரத்தில் மறைந்த மாமத யானை

படம்
முதல் நேர்காணலிலேயே நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்பு இருந்தது. அதனைத் தவறு விட்டதன் பின்னணியில் லஞ்சம் கொடுக்கக் கூடாது என்ற எனது லட்சியம் இருந்தது.இப்படி நான் நினைத்துக் கொண்டிருப்பதை ’நிறைவேறாத செயலுக்கான கற்பனை வடிவம்’ என்பது போல அண்ணன் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே இருந்த அந்த வார்த்தைகள் உறுதி செய்து கொண்டிருந்தன.

மிதந்த கனவு - முதல் விமானப்பயணம்

படம்
முதல் விமானப்பயணத்திற்கான வாய்ப்பொன்றைப் பல்கலைக்கழகம் 2000 ஆம் ஆண்டிலேயே உருவாக்கிந்தது. எனது பெரும் ஆய்வுத்திட்டத்தின் நேரடி அளிப்பிற்காகப் பல்கலைக்கழக மானியக்குழுவின் தேர்வுக்குழுவின் முன்னால் இருக்க வேண்டும். அதற்கு விமானத்தில் போகலாம். குறிப்பிட்ட வகையினச் செலவு முறையில் செலவழித்துவிட்டு, ரசீதுகளைச் சேர்த்துப்பல்கலைக்கழகத்திற்கு அளித்தால் அச்செலவுத்தொகையைப் பல்கலைக்கழகம் திட்ட நிதியிலிருந்து வழங்கும். அப்படிப் போனதுதான் எனது முதல் ஆகாயவழிப் பயணம். அந்தப் பயணத்தின் நினைவுகளாகப் பெரிதும் ஒன்றுமில்லை. அதற்கு முன் சில தடவை   தரைவழிப்பயணமாக டெல்லிக்குப் போய்வந்திருந்தேன். அதனால் இந்தப்பயணம் முதல் பயணமாகத் தோன்றவில்லை.  அதனால் சௌதி அரேபியாவுக்குப் போய்வந்த பயணத்தையே எனது முதல் வான்வெளிப்பயணமாக நினைத்துக்கொள்வேன். 

கற்றல், கற்பித்தல், திட்டமிடுதல்

படம்
ஒரு பல்கலைக்கழகப் பேராசிரியராகவும் எழுத்து, செயல்பாடு, திட்டமிடல், முன்னெடுப்பு எனப் பல நிலைகளில் கல்விப்புலத்திற்குள் செயல்பட்டவன் என்ற நிலையில் நான் பணியாற்றிய பல்கலைக்கழகங்களைத் தாண்டிப் பிற பல்கலைக்கழகங்களிலும், மாநில அளவிலும், தேசிய அளவிலும் தமிழியல் சார்ந்து மலேசியா, இலங்கை போன்ற நாடுகளின் கல்விப்புலத் திட்டமிடல்களில் கருத்துரைப்பவனாகவும் இருந்துள்ளேன். அதன் காரணமாகப் பல நேரங்களில் கல்வியுலகச் சிக்கல்களைப் பற்றிய கருத்துரைகளை எழுதியுள்ளேன். அப்படியெழுதிய சில குறிப்புகளின் தொகுப்பு கல்வியில் கொள்கையின்மை நவம்பர் 30, 2011 நிகழ்கால வாழ்க்கைமுறை ஒவ்வொரு மனிதரையும் பலரையும் சார்ந்து வாழ வேண்டிய நெருக்கடியைத் தந்துள்ளது. சார்ந்து வாழ்தலின் முதல்படி, தன்னை வெளிக்காட்டிக் கொள்ளுதல். தன்னை வெளிக்காட்ட -தனது கருத்தை நிதானமாகவும் செம்மையாகவும் எடுத்துச் சொல்லப் பேச்சை விடவும் எழுத்து முறை கூடுதலாக உதவும். அனைவருக்கும் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும் என நினைப்பதில் பின்னணியில் இத்தகைய காரணங்களே இருக்கின்றன. அனைவருக்கும் கல்வி; வயது வந்தோர் அனைவருக்கும் கல்வி, 14 வயதுவரை உள்ள ஆண் பெண் இ...

பாலாஜியைப் பார்த்தநாள்

படம்
கோயில்களுக்குப் போவதில் அதிக ஆர்வம் காட்டுவதில்லை என்பதைத் தெரிந்து கொண்ட எனது உறவினர்கள் பலமுறை என்னை அழைத்திருக்கிறார்கள். அவர்களின் அழைப்பை நிராகரிக்க ஏதாவது ஒரு காரணமும் வேலையும் இருந்துகொண்டே இருந்தது. அவற்றைக் கொஞ்சம் ஒதுக்கிவிட்டு ஏற்றுக் கொண்டிருந்தால் அவர்களையும் மகிழ்ச்சி அடையச் செய்திருக்கலாம். அந்த வாய்ப்பை நான் அவர்களுக்குத் தரவே இல்லை. உறவினர்களின் அழைப்பை மட்டும் அல்ல; திருவேங்கடவனின் அழைப்பையே இரண்டுமுறை நிராகரித்திருக்கிறேன்.

வாழ்க வாழ்க: திரள் மக்கள் அரசியலின் பேருருக்காட்சிகளும் சிற்றுரு நகர்வுகளும்

படம்
நம்கால அரசியல் நடவடிக்கைகளின் உச்சமாகத் திகழுவது தேர்தல் பரப்புரைகள். கட்சித்தலைமை கலந்துகொள்ளும்  பரப்புரை ஒன்றின் குறுக்குவெட்டுத்தோற்றத்தை வாசிப்பவர்களின் முன் விரிக்கும் எழுத்துப்புனைவின் அனைத்துச் சாத்தியங்களையும் தனதாக்கியிருக்கிறது இமையத்தின் இந்தப் புனைகதை.   சின்னக் கண்டியாங்குப்பத் துப் பெண்கள் விருத்தாசலம் நகரின் புறநகர் பகுதியான மணலூரில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்கு ‘500 ரூபாய், ஒரு சேலை’ என்று பேசி அழைத்துச் செல்லப்படும்போது உருவாகும் கூட்டு மனநிலையில் தொடங்கி,  கூட்ட மைதானத்தில் கிடைக்கும் துயரம், கொண்டாட்டம், அவமானம், குற்றவுணர்வு, அச்சம் எனப்பல்வேறு உணர்வுகளின் அடுக்குகளும், சந்திக்கும் அவலங்களும் ஆவலாதிகளும் அவதானங்களும் விவரிப்புகளாகவும் உரையாடல்களாகவும் காட்சிப்படுத்தல்களாகவும் எழுதப் பெற்றுள்ளன.

கல்விப்புலப்பார்வைகொண்ட க்ரியா ராமகிருஷ்ணன்

படம்
ஒரு மொழியாசிரியனுக்கு தாய்மொழியாக இருப்பவர்களுக்கு மொழியைக் கற்பிக்கும்போது அதிகம் தேவைப்படாத அகராதிகள், இரண்டாம், மூன்றாம் மொழியாக ஒரு மொழியைக் கற்பிக்கும்போது தேவைப்படுகிறது என்பது அனுபவம் சார்ந்த உண்மை. தமிழ்மொழி சார்ந்த    அந்த அனுபவத்திற்குப் பெருந்துணையாக இப்போதும் இருப்பது க்ரியா பதிப்பகம் வெளியிட்டுள்ள  தற்காலத்தமிழ் அகராதியும் மரபுத்தொடர் அகராதியும்  என்பது சொல்லப்பட வேண்டிய ஒன்று. அதனைச் சாத்தியமாக்கியவர்  ராமகிருஷ்ணன்.