நினைவுக்குள் நாடும் காடும்
உயிர்மை இதழில் வந்திருந்த இந்தக் கவிதையை (தீபச்செல்வன்/ உயிர்மை/நவம்பர்/2025) வாசித்து முடித்தேன். ஒருமுறைக்குப் பதிலாக இன்னும் சில தடவை வாசித்துப் பார்த்தேன். முதல்வாசிப்பில் அந்தக் கவிதை தரும் ஈர்ப்பு தான் திரும்பவும் வாசிக்கச் செய்யும். ஒரு கவிதையில் கிடைக்கும் ஈர்ப்பு என்பதில் அதன் செய்நேர்த்தி, அதன் வழியாக எழுப்பும் உணர்வுத் திரட்சி, அதற்குக் காரணமான கவிதை நுட்பங்கள் எனப் பலவற்றில் ஏதாவதொன்றாக இருக்கலாம்.