பார்க்கத்தக்க இரண்டு சினிமா
இப்போது பெரும்பாலான சினிமாக்களை இணையச்செயலிகள் வழியாகவே பார்க்கிறேன், திரை அரங்கம் சென்று சினிமா பார்த்து, சுடச்சுட விமரிசனம் எழுதிய காலம் முடிந்துவிட்டது. நான் திரை விமர்சனங்கள் எழுதிய இதழ்களின் தேவையை நிரப்பப் பலரும் காத்திருக்கிறார்கள். என்றாலும் எனது பரிந்துரைகளைச் செய்கிறேன். என்னைப் போலவே செயலிகளின் வழியாகப் படம் பார்ப்பவர்களுக்கு இந்தப் பரிந்துரைகள் பயன்படக்கூடும்.