இடுகைகள்

அகண்: உள்ளோடும் தோற்றமயக்கம்

படம்
தமிழ்வெளி(ஏப்ரல், 2024 )யில் வந்துள்ள சுஜா செல்லப்பனின் இந்தக்கதையை வாசித்து முடித்தபோது ஒன்றுக்கு மேற்பட்ட காரணங்களால் வாசித்து விவாதிக்க வேண்டிய கதையாக முன்மொழியத் தோன்றியது. கதையாக்கத்திற்குத் தெரிவு செய்துள்ள உரிப்பொருள் சார்ந்து அதனைப் பெண்ணெழத்து என்று வகைப்படுத்தலாம். எழுதுபவர்கள் அப்படி வகைப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்பதில்லை. எழுத்துக்கு வாழ்க்கை அனுபவம் சார்ந்த நிகழ்வுகள் அல்லது எண்ணங்கள் மட்டுமே காரணம் என நம்புவதின் வெளிப்பாடே இவ்வகையான வகைப்பாட்டின் பின்னால் இருக்கின்றன என நினைப்பவர்கள் தான் இப்படி வகைப்படுத்துகிறார்கள் என்ற மறுதலிப்பில் உண்மையில்லாமல் இல்லை.

தொலைந்துபோகும் பெண்கள்

படம்
எளிமையான கதைமுடிச்சு, அதனை அவிழ்த்து அவிழ்த்துக் காட்டும் திரைக்கதை அமைப்பு, காட்சிப்படுத்துதலிலும் நிகழ்வுகளை அடுக்கிச்சொல்வதிலும் நவீனத்துவ முறைமை என்பது அமீர்கானின் சினிமாக்களின் பொதுத்தன்மை. அத்தோடு குறிப்பான இடத்தில் – குறிப்பான சமூகச்சூழலில் வைத்து விவாதிக்கும் பேசுபொருள் என்பதும் இன்னொரு பொதுத்தன்மைதான். தொலைந்து போகும் பெண்கள் ( LAAPATAA LADIES) படமும் அப்படியான பொதுத்தன்மைக்குள் எடுக்கப்பட்டுள்ள நல்லதொரு சினிமா.

திருக்குறள்: மறு வாசிப்பும் பலதள வாசிப்பும்

படம்
ஒரு மொழியில் எழுதப்பெற்ற எல்லாப் பனுவல்களையும் அம்மொழியைப் பேசும்/ எழுதும் மனிதர்கள் வாசித்து விடுவதில்லை; தங்கள் வாழ்வியலுக்குத் தேவையென ஏற்றுப் பயன்படுத்திக்கொள்வதுமில்லை. அவரவர் விருப்பம், அவரவர் தேவை, அவரவர் பயன்பாடு போன்றனவே அவரவர் மொழியில் எழுதப்படும் பனுவல்களை வாசிக்கச் செய்கின்றன; பயன்படுத்தச் சொல்கின்றன; கொண்டாடவும் தூண்டுகின்றன. அனைத்து வகையான அறிவுத்துறைப் பனுவல்களுக்கும் சொல்லப்படும் இக்கருத்துநிலை இலக்கியப் பனுவல்களுக்கும் பொருந்தும் என்பதை ஒருவர் மறுத்து விடமுடியாது. அதே நேரம் ஒரு மொழியில் தோன்றிய சிலவகைப் பனுவல்கள் கூடுதல் கவனம் பெறுகின்றன; பேசப்படுகின்றன; பயன்படுத்தப்படுகின்றன. அதிலும் குறிப்பாக இலக்கியப்பனுவல்கள் பலதரப்பினரிடமும் அறிமுகம் பெறுகின்றன; பயன்படுத்தப்படுகின்றன. தமிழில் கிடைக்கும் பனுவல்களில் திருக்குறள் அப்படியானதொரு பனுவலாக இருக்கிறது. ஆகவே திருக்குறளைத் தமிழர்கள் திரும்பத்திரும்ப மறுவாசிப்புச் செய்கிறார்கள். கொண்டாடுகின்றார்கள். இக்கட்டுரை திருக்குறள் மறுவாசிப்பு செய்யப்படுவதின் காரணங்களையும் அதனைத் தொடர்ந்து,பல தளவாசிப்புகள் ஏன் தேவை என்பதையும் முன்வ...

ஊர்கள் - பயணங்கள் -நினைவுகள் -அனுபவங்கள்

படம்
எனது பள்ளிக்கூட நினைவுகள் எப்போதும் பயணங்களோடு சேர்ந்தே மனதிற்குள் அலையடிக்கக் கூடியன. பள்ளிக்கூடமே போகாமல் ஊர் சுற்றிக்கொண்டிருந்த நான் பள்ளிக்கூடம் போகத்தொடங்கியதற்கு மறுக்கப்பட்ட ஒரு பயணமே காரணமே. ராமேஸ்வரத்திற்கான பயணம் என்பது எனது குடும்பத்தில் அடிக்கடி நடக்கும் ஒன்று. மூன்று அல்லது நான்கு வருசங்களுக்கு ஒரு முறை இறந்து போன உறவினர்களின் அஸ்திகளோடு கிளம்பும் அந்தக் கூட்டம், அஸ்திகளை கரைத்து விட்டுப் பிறந்த குழந்தைகளுக்கு இரண்டாவது மொட்டையையும் அங்கே போட்டு விட்டு வருவது தான் ராமேஸ்வரம் பயணத்தின் முக்கிய நோக்கம். அஸ்திகளைக் கொண்டு போய் ராமேஸ்வரம் கடலில் கலக்க வேண்டும் என்பதை மாற்ற முடியாத சடங்காக வைத்திருந்தார்கள். அந்தப் பழக்கம் இப்போது குறைந்து விட்டது என்றாலும் முழுமையாக இல்லை என்று சொல்ல முடியாது. வைஷ்ணவ நம்பிக்கையின்படி ராமேஸ்வரம் கடல் தான் அஸ்திக் கலக்கலுக்கு உரிய இடம் என்பதில் எங்கள் உறவினர்களுக்கு அசையாத நம்பிக்கை உண்டு. நான்கு குடும்பத்தைச் சேர்ந்த இருபது பேருக்கு மேல் கிளம்பிய அந்தக் கும்பலில் என்னைச் சேர்த்துக் கொள்ள மறுத்துப் பேசிய தாத்தா ஒருவர் பேசிய பேச்சு என் நினைவுக்...

வாக்களித்தோம்; காத்திருப்போம்.

படம்
எனது வாக்கைச் செலுத்துவதற்கு ஒருமணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. நடந்து சென்று வாக்களிப்பது என முடிவு செய்ததால் காலையில் நடக்கவில்லை. அரை கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு நடந்தபோக 15 நிமிடம் ஆகும். ஒன்பது மணிக்குக் கிளம்பி 09.15 க்கு வரிசையில் நின்று வாக்களித்துவிட்டு வெளியேறிய போது மணி 10.12. நாம் அளித்த வாக்கு யாருக்குப் போகிறது என்பதைக் காட்டும் ஏற்பாடும் இருக்கிறது.