இடுகைகள்

தொலையாமல் அலைதல்- ஒட்டாவாவின் குறுக்கும் நெடுக்கும்

படம்
பூக்கும் தருணங்கள் தொடங்கிவிட்டன கனடாவுக்குள் சரியாக 30 நாட்கள் இருந்தேன். அமெரிக்காவின் நியுயார்க் மாநிலம் பப்பல்லோ விமான நிலையத்தில் இறங்கிச் சாலை மார்க்கமாக ஒட்டாவா நகருக்குப் போனேன். போகும் பாதையெங்கும் வயல்களும் தோட்டங்களும் வனங்களும் நீர்ப்பரப்புகளுமே கண்ணை நிரப்பின. போகும் பாதையில் நிரம்பிய பச்சையம் மொத்தப் பயணத்திலும் கூடவே இருந்துவிட்ட தாகத் தோன்றுகிறது. ஒருவேளை ஒட்டாவாவுக்குப் பதிலாக டொரண்டோவில் இறங்கியிருந்தால், இப்படித் தோன்றியிருக்காதோ என்று மனம் நினைக்கிறது. வானுயர்ந்து நின்றிருக்கும் கட்டடங்களே மனதை முதலில் ஆக்கிரமித்திருக்கும். பேரங்காடிகள், காட்சிக்கூடங்கள், அருங்காட்சியகங்கள், கல்விக்கூடங்கள், வீடுகள், அலுவலகங்கள், சாலையின் பரப்புகள், போக்குவரத்துகள், கார்கள், டிராம்கள் என நவீனத்துவ அடையாளங்கள் பிடித்துக்கொண்டிருக்கும்.

பிராமணியம் என்பது நபர்கள் அல்ல.

படம்
ஒரு காலகட்டத்தில் ஏற்புடையவர்கள் இன்னொரு காலத்தில் எதிர்ப்பாளர்களாகவும்  எதிரிகளாகவும் ஆவதற்குப் பல காரணங்கள் இருக்கும். நமது கருத்து மாற்றங்கள் காரணங்களாக இருப்பதுபோல, அவர்களின் செயல்பாடுகளும் காரணங்களாவதுண்டு. சமூக ஊடகங்களின் வரவுக்கு முன்பு இவ்வகை மாறுபாடுகள் வெளியில் தெரியாமல் ஒதுங்குவதும் ஒதுக்குவதுமாக இருந்துள்ளது. இப்போது சமூக ஊடகங்களில் பாவனையாக இருக்கும் நட்புப்பட்டியல் என்பது உண்மையில் நட்புப்பட்டியல் அல்ல. தெரிந்தவர்; சந்தித்தவர்; நம்மை ஏற்கக்கூடியவர்; எதிர்ப்புநிலையை அறிந்துகொள்வதற்காகக் கவனிக்கப்படுபவர் எனப் பலநிலைகளில் இருப்பவர்களைக் கொண்ட பட்டியலே நட்புப்பட்டியல். 

திறனறிந்து திறன் வளர்க்கும் கல்விக்கூடங்கள்

படம்
கோடைவிடுமுறைக்குப் பின் மூத்த பேரன் (மகள் வழி) ஹர்ஷித் நந்தாவுக்கு வகுப்புகள் ஆரம்பித்துவிட்டன. ஆரம்பித்து இரண்டு வாரங்கள் ஆகின்றன. நானும் சில நாட்களில் எனது காலை நடையாகப் பள்ளிக்குப் போய்த் திரும்பினேன். அப்போது அங்கே மைதானத்தில் இசைக்குழுவிற்கான பயிற்சி நடந்துகொண்டிருந்தது. அதில் அவனும் ஓர் உறுப்பினர்.

சேரனோடு இரண்டு நாட்கள்

படம்
பெரு நகரத்தின் நடுவில் ஒரு சிற்றங்காடிக் கூடங்கள் நேற்றும் இன்றும் நண்பர் கவி.சேரனோடு இருக்கிறேன். அவரது குடியிருப்பு டொரண்டோ நகரின் மையப்பகுதியான டென்சன் அவென்யூ. வானைத் தொடும் பல்லடுக்குக் கோபுரங்களாக நிற்கும் கட்டடங்களுக்குள் நிற்கும் வரிசை வீடுகளில் ஒன்று அவரது வீடு. வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு சிறு பூங்கா இருக்கிறது. அதன் ஒரு மூலையில் தொடங்கி அங்காடித்தெரு தொடங்குகிறது. ஒவ்வொரு அங்காடியிலும் ஒரு வகைச் சாமான்கள் மட்டுமே விற்கும் கடைகள் இருக்கின்றன. மசாலா சாமான்கள் என்றால் எல்லாவகைப் பொருட்களையும் விற்கும் விதமாக ஒரு கடை. காய்கறிகள் என்றால் அதற்கு மட்டுமே ஒரு கடை. மீன் வெட்டித்தரும் தனிக்கடை. இப்படி துணிக்கடை, காலை உணவு மட்டும் தரும் உணவகம், மதிய உணவு, இரவு உணவுக்கெனத் தனிக்கடைகள். பல் பொருள் அங்காடி என்ற நிலைபாட்டுக்கெதிராகத் தனித்தனி அங்காடிகள். அந்த அங்காடிகளில் உலகின் பலநாட்டுச் சிறு வியாபாரிகளும் இருக்கிறார்கள். இந்திய உணவுவிடுதியும் இருக்கிறது. ஈழத்தமிழர்களும் கடையை வாங்கி நட த்துகிறார். காலாற நடந்து காய்கறிகளை வாங்கிவிட்டு மதிய உணவை முடித்துக் கொண்டு திரும்பினோம்.   இரண...

டொரண்டோ: போனதும் வந்ததும் சந்தித்தவர்களும்

படம்
  ஒட்டாவா> டொரண்டா < ஒட்டாவா டொரண்டாவில் 5 நாட்கள் இருப்பதற்கான பயணத்திட்டத்தில் போகும்போது பேருந்துப்பயணம் ; வரும்போது இருப்பூர்திப் பயணம் என்பது முன்பே முடிவான . இரண்டு பயணமுறைகளிலும் பயண நேரத்தில் பெரிய கால வேறுபாடு இல்லை. பேருந்துப் பயண நேரம் 5 மணி 5 நேரம் . ரயிலில் 30 நிமிடங்கள் குறைவு. ஒட்டாவாவிலிருந்து காலை 7 மணிக்குக் கிளம்பும் பேருந்து பகல் 12 மணிக்குப் போய்ச்சேர்கிறது. நான் ஒட்டாவாவின் இரண்டாவது நிறுத்தத்தில் ஏறி, டொரண்டோவில் கடைசி நிறுத்தத்திற்கு முந்திய ஸ்கார்புரோவில் இறங்க வேண்டியவன். அதனால் எனது பயண நேரம் 4 மணி 30 நிமிடம்தான்