இடுகைகள்

முழுமையைத் தவறவிடுகின்றன

படம்
  சில வெற்றிப்படங்களில் - தனித்தன்மை கொண்ட நாயகப்பாத்திரத்தில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஸ் என்ற நடிகையை மையப்பாத்திரமாக்கி எடுக்கப்பட்டுள்ள டிரைவர் ஜமுனாவும் இணையவெளிப்படங்களின் பொதுத்தன்மையோடுதான் வந்துள்ளது. குறிப்பாகச் சொல்வதென்றால் , முழுமையைத் தவறவிட்ட இன்னொரு படமாகவே இருக்கிறது. தமிழில் எடுக்கப்படும் பெரும்பாலான படங்கள் குற்றப் பின்னணி , ரகசியம் , திடீர் திருப்பம் , எதிர்பாராத முடிவு என்ற கட்டமைப்போடுதான் எடுக்கப்படுகின்றன. அந்தப் பொதுத்தன்மை இந்தப்படத்திலும் இருக்கிறது.

சூழலில் வாழ்தலும் எழுதுதலும்

படம்
அச்சு நூல்களுக்கு இணையாக இணைய இதழ்களையும் வாசிப்பவன். அதன் இடையே முகநூலிலும் நுழைந்து வெளியேறுவதுண்டு. கோவிட் தொற்றுக் காலத்தில் முகநூலில் செலவழித்த நேரம் அதிகம் என்றே சொல்லலாம். முன்பு வாசிக்கக் கிடைத்தது போல முகநூல் கவிதைகள் இப்போது இல்லை என்ற உணர்வு உண்டான நிலையில் தான் முகநூலில் எழுதப்படும் தன் அனுபவக் குறிப்புகளைத் தேடி வாசிக்கும் பழக்கம் ஏற்பட்டது. தன் அனுபவக் குறிப்புகளை எழுதும் முகநூல் பதிவர்களில் பலர் அன்றாடம் சந்திக்கும் மனிதர்கள், நிகழ்வுகள், அமைப்புகளில் செயல்படும்போது சந்திக்கும் சிக்கல்கள் எனப் பலவற்றை எழுதும்போது அவற்றை வாசித்தபோது புனைவுகளின் தன்மையை நெருங்குவதைக் கண்டிருக்கிறேன்.

சென்னைப் புத்தகக்கண்காட்சிப் பரிந்துரைகள்

நாம் எப்படி வாசிக்கிறோம்? வாசிப்புத்தேவைகள் எப்படி உருவாகின்றன? நமது வாசிப்பு விருப்பங்கள் எப்படிப்பட்டவை? வாசித்தவற்றை                       யாருக்குச் சொல்கிறோம் என்ற புரிதலோடு இந்தப் பரிந்துரைகள்.

சென்னைப் புத்தகக்காட்சிப் பரிந்துரைகள் -2

நாம் எப்படி வாசிக்கிறோம்? வாசிப்புத்தேவைகள் எப்படி உருவாகின்றன? நமது வாசிப்பு விருப்பங்கள் எப்படிப்பட்டவை? வாசித்தவற்றை யாருக்குச் சொல்கிறோம் என்ற புரிதலோடு இந்தப் பரிந்துரைகள்.

புத்தகக்கண்காட்சி-2023/ எனது பரிந்துரைகள் - முதல் தொகுதி

இலக்கியமாணவனாக நினைக்கத் தொடங்கி, இலக்கியத்திறனாய்வு இலக்கியமாணவனாக நினைக்கத் தொடங்கி, இலக்கியத்திறனாய்வு ஆசிரியனாக ஆனவன் நான். சிற்றிதழ் வாசிப்பில் அறிமுகமான க.நா.சு.வும், வெ.சாமிநாதனும் காரணங்களைச் சொல்லாமல் பெயர்களை முன்வைக்கிறார்கள் என்பதை உணர்த்தியவர் சி.சு.செல்லப்பா. அவரது விமரிசனப்பார்வையில் பனுவலுக்குள் நின்று பேசும் ஓர் ஒழுங்கு உண்டு. அந்த ஒழுங்கைத்தாண்டிப் பனுவல்களைச் சூழலில் வைத்து வாசிக்கவேண்டும்; பனுவல்களுக்குள் இருக்கும் தரவுகளையும் நிகழ்வுகளையும் காலப்பின்னணியில் காரணகாரியங்களோடும், தர்க்கபூர்வமாகவும் விவாதிக்க வேண்டும். அதன் மூலம் ஒரு கருதுகோளை நிறுவிக்காட்ட முடியும் என்ற திறனாய்வு முறையியலைக் கற்பித்த முன்னோடிகள் இலங்கையின் பேராசிரியர்கள் க.கைலாசபதியும், கா.சிவத்தம்பியும். அவர்களின் பாதையில் முதன்மையாகக் கல்விப்புலங்களுக்குள் அறிமுகமான தமிழக முன்னோடித் திறனாய்வாளர் கோ.கேசவன். அவரது பள்ளு இலக்கியம் - ஒரு சமூகவியல் பார்வை, மண்ணும் மனிதர்களும் என்ற இரண்டு நூல்களும் வாசிப்புத்திளைப்பை உருவாக்கிய திறனாய்வு நூல்கள். இவை படித்த நூல்கள். படிக்கச் சொல்கிறேன். படித்துப்...