வாய்மொழிப்பனுவல் உலகம் முழுவதும் வலதுசாரிகளின் முதன்மையான அடையாளம் இருப்பதில் மாற்றம் தேவையில்லை என்பது. முதலாளிகளும் உழைப்பவர்களும் என்ற வேறுபாடுகள் இருந்தால்தான் தொழில் வளர்ச்சியும் உற்பத்தியும் நடக்கும். எனவே ஏழை-பணக்காரர், முதலாளி -தொழிலாளி, ஆளும் வர்க்கம் - உழைக்கும் வர்க்கம் என்ற சொல்லாடல்களே தேவையற்றவை என வலதுசாரிகள் நினைப்பதுண்டு. வேறுபாடுகளைப் பேசி, வேறுபாடுகளைக் களைவதற்கான முயற்சிகளாகப் போராட்டங்களைக் கையிலெடுப்பவர்கள் ஆபத்தானவர்கள்; அதனைப் பேசாமல் தவிர்த்துவிடுவதே சரியானது என்பதே வலதுசாரிக்கொள்கையாளர்களின் அடிப்படைக் கருத்தியல்.