கலைஞர் மு. கருணாநிதி:காலத்துக்கும் நினைக்கப்பட வேண்டியவர்
நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்திவ் வுலகு என்பது எல்லா மனிதர்களுக்கும் பொருந்துவதில்லை. சிலர் இதனை மறுத்து நேற்று இருந்தேன்; இன்று இருக்கிறேன்; நாளையும் இருப்பேன் என்று உறுதி காட்டுகிறாகிறார்கள். அவர்களைச் சாவு நெருங்கிவதில்லை. மரணத்தை அறிய முயன்று தோற்றுக் கொண்டிருக்கிறார்கள் மனிதர்கள். மரணத்தை அறிதல் இருப்பவர்களுக்குச் சாத்தியமில்லை. மரணத்தை அறிந்தவர்கள் -சந்தித்தவர்கள் திரும்பவும் வந்து அதன் இயல்புகளைச் சொல்லப்போவதில்லை. அறியப்படாத நிரந்தரமாக இருக்கும் மரணம் ஒரு நிகழ்வாக் கற்பிக்கப்பட்டிருக்கிறது. நிகழ்வு என்றால் நிகழ்த்துபவர் வேண்டும். தானே நிகழ்த்திக்கொள்வதா? இன்னொருவரால் நிகழ்த்தப்படுகிறதா? தன்வினையா? பிறவினையா? நிகழ்காலமா? கடந்தகாலமா? எதிர்காலமா?