இடுகைகள்

டிசம்பர், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இயற்பண்பியல் எழுத்தின் நேர்மறை -அபிமானியின் மனசுக்காரன்

சமகாலத்தமிழ் இலக்கியப்பரப்பில் கடந்த அறுபதாண்டு காலமாக ஆதிக்கம் செலுத்தும் இலக்கிய வடிமம் நாவல். குறைவான நேரத்தில் ஒன்றை வெளிப்படுத்திவிட முடியும் என்ற நோக்கத்தில் கவிதை வடிவத்தைத் தேர்வு செய்பவரும், சிறுகதை வடிவத்தில் எழுதிப்பார்ப்பவரும் நாவல் எழுதிப்பார்க்க வேண்டும் என்று ஆசையுடையவர்களாக இருக்கிறார்கள். பாரதியைத் தமிழின் சமகால இலக்கியத்தின் தொடக்கம் எனக் கொண்டால், அவரே தனது கவிதை வடிவத்தோடு கட்டுரைகள், புனைகதைகள் என நகர்ந்து, சந்திரிகையின் கதையென நாவல் முயற்சியில் இறங்கியபின்னரே முடிந்திருக்கிறார்.

நிர்வாக நடைமுறைகளும் நீதிபரிலானமும் - சில குறிப்புகள்

படம்
ஒற்றை அடையாள அட்டை தரப்படவேண்டும் .  இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் ஒற்றை அடையாள அட்டையை இப்போதாவது தரவேண்டும்.   அதற்கான பணிகளைத்  தேர்தல் ஆணையம் செய்யக்கூடாது. ஒன்றிய அரசின் புள்ளியியல் துறை அதனைச் செய்யவேண்டும். இதனை முதல் ஐந்தாண்டுத் திட்டத்திலேயே செய்திருக்க வேண்டும். அதற்குப் பதிலாக 18 வயதைத் தாண்டியவர்களுக்கு வாக்குரிமை அட்டையை வழங்கும் சிறப்புச்சீர்திருத்தம் நடக்கிறது. பிரிட்டானிய ஆட்சியிலிருந்து விடுதலைபெற்ற இந்தியாவின் குடிமக்களாக ஆகும் தகுதி இவை; இந்தத் தகுதியோடு கூடிய மக்களின் எண்ணிக்கை இவ்வளவு; இதில் ஒருவரின் குறியீட்டு எண் இது என்ற அடையாள அட்டையைத் தரவேண்டும். வளர்ச்சி அடைந்த நாடுகள் ஒவ்வொன்றும் இத்தகைய எண்ணைக் கொண்டே குடிமக்களை அடையாளப்படுத்துகின்றன. ஆனால் குறிப்பிட்ட காலத்திற்கு அந்த நாட்டிற்குள் பணியாற்றவரும் ஒருவருக்கு தற்காலிகக் குடியுரிமை அட்டையை வழங்குகின்றார்கள். அந்த நாடுகளுக்குள் வரும் விருந்தினர்களுக்கு இத்தகைய அடையாள அட்டையை வழங்குவதில்லை.  இரண்டாண்டுகள் போலந்தில் பணியாற்றியபோது எனக்கு வழங்கப் பெற்ற அட்டையில் நான் இருக்கக்கூடிய கா...

கதைசொல்லுதலின் சாகசங்கள்

படம்
ஜெயமோகனின் பத்துலட்சம் காலடிகள்   ஜெயமோகன் சமகாலத்தமிழின் முதன்மையான கதைசொல்லி. அவரது பத்துலட்சம் காலடிகள் அண்மையில் வந்துள்ள சிறுகதைகளில் முக்கியமான கதை. சில நாட்களாக இந்தப் பொருள் தரும் சொற்றொடர்கள் இணையப் பக்கங்களில் ஆங்காங்கே தொடர்ச்சியாக வாசிக்கக் கிடைக்கின்றன. கடந்த 30 ஆண்டுகளாகத் தொடர்ந்து சிறுகதைகளையும் நாவல்களையும் எழுதிவரும் ஜெயமோகனை முதன்மையான கதைசொல்லி என்று மதிப்பீட்டுச் சொல்லால் பாராட்டிச் சொல்வதற்கு ஒருவர் காரணங்களை அடுக்கிக் காட்டத் தேவையில்லை. ஆனால் இந்த (கொரோனா) அடங்கல் காலத்தில் நாளொன்றுக்கு ஒரு கதை என்று தவறாமல் தனது இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யும் வரிசையில் முப்பதாவது கதையாக வந்துள்ள ஒரு கதையை முக்கியமான கதை -ஆகச் சிறந்த கதை -உன்னதமான கதை – என்று சொல்வதற்குப் போதுமான காரணங்களை முன்வைக்க வேண்டும். காரணங்கள் சொல்லாமல் முன்வைக்கப்படும் சொற்றொடர் விமரிசனச் சொல்லாக இருக்காது. போகிற போக்கில் வாசிக்காமலேயே கூடச் சொல்லப்படும் மதிப்பிட்டுக் குறிப்பாகவே கருதப்படும்.

காளமாடன் என்னும் பைசன் :நிகழ்ந்தனவும் புனைவாக்கமும்

படம்
மாரி செல்வராஜ் இதுவரை இயக்கிய சினிமாக்கள் ஐந்து . முதல் படமான பரியேறும் பெருமாள் (2018) தொடங்கி கர்ணன்(2021) மாமன்னன்(2023) வாழை (2024) அண்மையில் வந்த பைசன் -காளமாடன் வரை ஒவ்வொன்றையும் அப்படங்கள் வந்த முதல் வாரத்தில் திரையரங்குகளில் ஒருமுறையும், அந்தப் படங்களைக் குறித்து எழுதுவதற்காக இணையச்செயலிகளில் இன்னொரு முறையும் பார்த்துள்ளேன். அப்படிப் பார்த்துப் புரிந்து கொண்ட நிலையில் மாரி செல்வராஜ் நிறுவியிருக்கும் தனித்துவமான கூறுகள் சிலவற்றை அடையாளம் காட்டத் தோன்றுகின்றது.

கல்விச்சந்தையும் தமிழ்க்கல்வியும்

படம்
காலத்திற்கேற்ற தமிழ் இலக்கியக்கல்வி பல்கலைக்கழகப் பணி ஓய்வுக்குப்பின் தொடர்ந்த கரோனா காலம் முடக்கிப்போட்டுவிட்டது. தொடர்ந்து கலை, இலக்கியச்செயல்பாடுகளில் ஈடுபடத்திட்டமிட்டதை எல்லாம் மாற்றிப் போட்டுவிட்டது. இந்த நிலையில் தான் குமரகுரு கலை அறிவியல் கல்லூரி நிர்வாகம் கொடுத்த இந்த அழைப்பை ஏற்றுக் கொண்டு படைப்பாக்கக் கல்வியை மையப்படுத்தித் தமிழ்ப் பாடத்திட்டம் ஒன்றை வடிவமைத்துக் கொடுத்தேன். காலத்திற்கேற்பவும் மாணாக்கர்களின் வேலை வாய்ப்பை நோக்கமாகவும் கொண்டு தமிழ் இலக்கியக் கல்வியை மாற்றும் திட்டத்தை முன்வைத்துப் பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டது. பன்முகக்கலை அறிவியல் கல்லூரி (Liberal Arts and Science) என்ற பெயருக்கேற்ப அதன் பட்டப்படிப்புகளை வேலைவாய்ப்புள்ள பட்டப்படிப்புகளாக வடிவமைத்தது. இதனைச் செயல்வடிவம் கொண்டு வருவதில் ஏற்பட்ட தடங்கல்கள் ஆசிரியர்களிடமிருந்தே உருவானது என்பது தனிக்கதை. புதிய முயற்சிகளில் ஈடுபடுபவர்களுக்காக இதனைத் தருகிறேன். ******* எண்பதுகளில் கல்வியைக் குறிக்கும்போது சந்தை அதனோடு இணையும் சொல்லாக இருந்ததில்லை. இப்போது எல்லாத் துறைகளோடு சந்தை இணைந்துவிட்டது. மருத்துவம், பொழு...

உள்ளுணர்வின் முன் அறிவிப்புகள்

படம்
1992-  டிசம்பர், 6 பாப்ரி மஜ்ஜித் இடிக்கப்பட்ட நாள். பாண்டிச்சேரியிலிருந்து அன்று நான் ஏறிய வண்டி கிளம்பிய போது பிற்பகல் மணி ஒன்று. அதிகபட்சம் சென்னை செல்ல நாலுமணி நேரம் ஆகலாம் . பாரிமுனையில் இறங்கி நடந்தே போனாலும் அரை மணி நேரம் தான் ஆகும். ஐந்து மணிக்குப் போய் இறங்கி ஆறு மணிக்கு சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருக்கும் நண்பர்களோடு சேர்ந்து கொள்ளலாம். எனது திட்டம் நிறைவேறவில்லை.அப்போது சென்னையின் முதன்மைப் பேருந்து நிலையம் பாரிமுனைதான். வெளியூர்களிலிருந்து வரும் எல்லாப் பேருந்துகளும் அங்கிருந்துதான் கிளம்பும். திருவள்ளுவர் பேருந்துகளுக்கு மட்டும் தனியாக ஒரு பகுதி உண்டு. அதற்குப் பக்கத்தில் வெளிமாநிலப் பேருந்துகள் நிற்கும்.  

மனு : சில சொல்லாடல்கள்

படம்
வாய்மொழிப்பனுவல் உலகம் முழுவதும் வலதுசாரிகளின் முதன்மையான அடையாளம் "இருப்பதில் மாற்றம் தேவையில்லை" என்பது. முதலாளிகளும் உழைப்பவர்களும் என்ற வேறுபாடுகள் இருந்தால்தான் தொழில் வளர்ச்சியும் உற்பத்தியும் நடக்கும். எனவே ஏழை-பணக்காரர், முதலாளி -தொழிலாளி, ஆளும் வர்க்கம் - உழைக்கும் வர்க்கம் என்ற சொல்லாடல்களே தேவையற்றவை என வலதுசாரிகள் நினைப்பதுண்டு. வேறுபாடுகளைப் பேசி, வேறுபாடுகளைக் களைவதற்கான முயற்சிகளாகப் போராட்டங்களைக் கையிலெடுப்பவர்கள் ஆபத்தானவர்கள்; அதனைப் பேசாமல் தவிர்த்துவிடுவதே சரியானது என்பதே வலதுசாரிக்கொள்கையாளர்களின் அடிப்படைக் கருத்தியல்.

பெரிய கார்த்தியல் என்னும் திருக்கார்த்திகை

படம்
இந்தியப் பண்பாட்டின் பல்தள வெளிப்பாடு என்பது அதன் சடங்குகள், நம்பிக்கைகள், கொண்டாட்டங்கள் என ஒவ்வொன்றிலும் தங்கியிருக்கிறது என்பதைக் குறிப்பான ஆய்வுகள் வழியாக அறியமுடியும். நிகழ்காலத்தில் இந்துமதமாக அறியப்படும் பெருமதத்தின பண்டிகைகளான தீபாவளி, துர்கா பூஜை, யுகாதி, சங்கராந்தி, திருக்கார்த்திகை போன்றன எல்லாக்காலத்திலும் இதற்குள்ளேயே இருந்த பண்டிகைகள் எனச் சொல்லவும் முடியாது. குறிப்பான பண்பாட்டு ஆய்வின் முறைமைகளைப் பயன்படுத்தி, இந்திய அளவில் கொண்டாடப்படும் ஏதாவது ஒரு பண்டிகையைப் பற்றிய ஆய்வைச் செய்யவேண்டும். ஒன்றின் சாயலில் வெவ்வேறு நிலப்பரப்பில் கொண்டாடப்படும் விதங்களைத் தொகுத்துக் கொண்டு எது மூலம்; எந்தக்கூறுகள் இன்னொன்றிலிருந்து எடுக்கப்பட்டவை என ஆய்வு செய்வதன் மூலம் ஒவ்வொன்றையும் தனித்தனியாக விளக்க முடியும்.  ஒரு பண்டிகையின் நோக்கங்கள், பின்னுள்ள கதைகள், வேண்டுதல்கள், அளிப்புகள் அல்லது பலியிடல்கள், தொடரும் வெளிப்பாடுகள் என எல்லாவற்றையும் ஆவணப்படுத்தி விவாதிக்கவேண்டும். அத்தகைய ஆய்வுகள் பண்பாட்டாய்வுகளில் புதிய வெளிச்சங்களைத் தரலாம். இந்த மாற்று வடிவங்களை இந்தியப் பண்பாட்டி...

இலக்கிய ஆய்வுகளும் சமுதாய அறிவியலும்

படம்
தமிழ் ஆய்வுகள், தமிழியல் ஆய்வுகளாகக் கல்வி நிறுவனங்களுக்குள் மாறிவிட்டன.புதிதாகத் தொடங்கப்படும் ஒரு பல்கலைக் கழகத்தின் தமிழ்த் துறை, தமிழியல் துறையாக அமைக்கப்பட வேண்டும் என வல்லுநர் குழுக்கள் பரிந்துரைக்கின்றன. பல்கலைக்கழகத்திற்கு வெளியே செயல்படும் தமிழ் சார்ந்த உயராய்வு நிறுவனங்களும் தமிழியல் ஆய்வு நிறுவனங்களாகவே செயல்படுகின்றன.

சினிமாக்கட்டுரைகள்

மாரி செல்வராஜின் காளமாடன் என்னும் பைசன்:நிகழ்ந்தனவும் புனைவாக்கமும்-நவம்பர்,24,2025 தமயந்தியின் தன் விருப்ப சினிமாக்கள்-நவம்பர் 20, 2025 திரைப்பட ஆக்கம்- கவனமும் கவனமின்மையும்- நவம்பர் 08, 2025 கலையியல் எதிரிகள்-செப்டம்பர் 20, 2025 – திரைப்படங்களைப் பார்த்தல் பொதுக்குறிப்புகளும் சிறப்புக்குறிப்பும் செப்டம்பர் 14, 2025 பார்க்கத்தக்க இரண்டு சினிமா-ஜூலை 30, 2025 பொதுப்புத்தியை விவாதிக்கும் கலையியல் : டூரிஸ்ட் பேமிலியும் அயோத்தியும்-ஜூலை 05, 2025 உலகத்தமிழர்களை நோக்கிய தமிழ்ச் சினிமாக்கள்-ஜூன் 23, 2025 நல்ல சினிமாவாக ஆகத்தவறிய இரண்டு படங்கள்-மே 17, 2025 நெருப்பும் இன்னொரு நெருப்பும்- விழிப்புணர்வின் பெயரில் காமத் தூண்டல்-ஏப்ரல் 20, 2025 புஷ்பா-2 வெகுமக்களின் சினிமா-பிப்ரவரி 14, 2025 அடுத்தடுத்துப் பார்த்த சினிமாக்கள்-பிப்ரவரி 04, 2025 கிஷ்கிந்தா காண்டம்- குற்றவியலும் உளவியலும்-நவம்பர் 22, 2024 வாழையைப் பற்றியும் வாழையைச் சுற்றியும்- நவம்பர் 11, 2024 தங்கலான்: விடுதலை அரசியலின் கருவி-செப்டம்பர் 05, 2024 வெப்பம் குளிர் மழை -காலப்பிழையான சினிமா-ஜூன் 15, 2024 ஹாட் ஸ்பாட் : விவாத...