தொட்டால் சுடாத பெருநெருப்பு

கரையில் நிற்கும் போதுதான் கப்பல் மிகுந்த பாதுகாப்புடன் இருக்கிறது - இந்த வாக்கியம் மிகவும் உண்மையான வாக்கியம். ஆனால் கரையில் நிற்பதற்காகக் கப்பல் கட்டப்படவில்லை என்பது அதைவிட உண்மையான வாக்கியம். இந்தியாவில் எந்தத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டாலும் அறிவிக்கப்பட்ட நாள் தொடங்கி எல்லாவகை ஊடகங்களும் கருத்துக் கணிப்புகளை வெளியிடத் தொடங்கி விடுவது வாடிக்கை.வாக்குப் பதிவு தொடங்கிய நாள் முதல் கருத்துக் கணிப்புகளை வெளியிட அனுமதி இல்லை என்பது தேர்தல் ஆணையத்தின் விதி என்பதால் அதை இந்திய ஊடகங்கள் அப்படியே ஏற்றுக் கொண்டு கருத்துக் கணிப்புகளை நிறுத்திக் கொண்டுவிட்டன என்பது பெரும்பாலோரது நம்பிக்கை.