பிக்பாஸ் - சில குறிப்புகள்

பிக்பாஸ்-7:தவறவிட்ட முதலிடம் வெகுமக்கள் ஊடகங்களைக் கவனித்து வெகுமக்கள் பண்பாடும் அரசியல் தீர்மானங்களும் எவ்வாறு கட்டமைக்கப்படுகின்றன என்பதைத் தொடர்ந்து விவாதித்து வருபவன் என்ற வகையில் இந்தியர்களின் மிகப்பெரிய பொழுதுபோக்கான கிரிக்கெட் விளையாட்டையும், தமிழர்களின் ஆகக் கூடிய நேரத்தை எடுத்துக்கொள்ளும் முதன்மை நேர நிகழ்ச்சிகளை- குறிப்பாகப் பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகளை பார்த்துவிடுவதைத் தவிர்ப்பதில்லை. நேரலையாகப் பார்க்கத் தவறினால் மறு ஒளிபரப்பிலாவது பார்த்துவிடுவேன். இப்போது அவற்றுக்கான செயலிகள் வந்தபின் நேரலையாகத் தான் பார்க்க வேண்டும் என்பதில்லை.இந்த ஆண்டில் இந்தியாவில் நடந்த உலகக்கோப்பை (50 ஓவர்கள்) போட்டியின் இறுதிப்போட்டியை நேரலையாகப் பார்க்கவில்லை. அதேபோல் நேற்று நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேரலை நிகழ்ச்சியையும் பார்க்கவில்லை, இப்போது பார்த்து முடித்துவிட்டேன்.