சூழலில் உழல்தல்

அ. மார்க்ஸ், எஸ்.வி ஆர் போன்றோரால் பயன்பெற்ற அவரது தலைமுறைப் படைப்பாளிகள் இருக்கிறார்கள். எஸ்.வி.ஆரின் சீடர்கள் இன்றும் அவரைப் பற்றி பேசுகிறார்கள். ஆனால் அவர் புனைவு பக்கம் சென்றிருந்தால் அவரை தலைமேல் தூக்கி வைத்திருப்பார்கள். அ. மார்க்ஸை இன்றும் ஒரு அரசியல் போராளி, கருத்தாளர் என்பதைத் தாண்டி அவரது கருத்தியல் பங்களிப்புக்காக நாம் அங்கீகரிப்பதில்லை. இதையே நான் அ. ராமசாமிக்கும், ஜமாலனுக்கும் சொல்வேன். இந்த விமர்சகர்களின் அவல நிலை என்னவென்றால் அவர்கள் எழுதுவதை நிறுத்திய சில ஆண்டுகளில் மொத்த உலகமும் அவர்களை மறந்து விடும். எத்தனை ஆயிரம் பக்கங்கள்! யாருமே பொருட்படுத்த மாட்டார்கள். இன்று ஓரளவுக்கு வாசிக்கப்படும் வரலாற்று, பண்பாட்டு ஆய்வாளர்களுக்கும் இதையே சொல்வேன். (இது அவர்களுடைய தவறல்ல, இது நம் சூழலின் அவலம்.) Abilash Chandran

***********
1100 கட்டுரைகளுக்கும் மேல் வலைப்பூவில் இருக்கின்றன. கவிதை, நாடகம், புனைகதைகள், சினிமா, நுண்ணரசியல், பேரரசியல், சொந்தக்கதை, சோகக்கதை, நண்பர்கள், எதிரிகள் பங்காளிகள் எனக் கலந்துகட்டி எழுதிக்கொண்டுதான் இருக்கிறேன். முகநூலில் இணைப்புத் தருவதன் மூலம் தினசரி 100 பேர் வந்துபோகிறார்கள் எனக்காட்டுகிறது. இல்லையென்றால் ஒருவரும் வரப்போவதில்லை.
=========================
    • Mujeeb Rahman
      கடின உழைப்பு.அயராதமுயற்சி.தமிழ் உங்களால் வளருகிறது.
    • Hide

  • பொன். குமார்
    உண்மை. எழுதுங்கள்..

    • Thanjavur Harani
      ஒருதுளிகூட குறைவில்லாத நாவல்.சிறுகதை.குறுநாவல் போன்ற புனனைகதைக்கு இணையானது உங்கள் பன்முகக் கட்டுரைகள். உங்களின் எல்லா கட்டுரைகளையும் வாசிப்பேன். ஓரளவுக்கு வாசித்துமிருக்கிறேன். எழுதுங்கள் சார். கவிதை, சிறுகதை, கவிதை, எழுத்தாளுமைகள், அரசியல் ஆளுமைகள், நிகழ்வுகள், திரைப்பட வரலாற்றசைவுகள், பல்துறை நூல்கள் பற்றிய மதிப்பீடு எனத் தமிழில் நீங்கள் தொடாதது இல்லை. எழுதுங்கள் சார். இனியும் வாசிப்பேன். ஒரு படைப்பாளியாக எழுதுவதைப் போலவே வாசிப்பும் அற்புதத் தருணங்களைத் தரிசிக்க வைப்பவை. உங்களின் எழுத்தும் அப்படியே

    • Riyas Qurana
      நீங்கள் என்றும் எங்களைப் போன்றவர்களால் நினைவு கூரப்படுவீர்கள் தோழர்.
      4
      • Like
      • Reply
      • Hide
      • 20h
    • Senthil Vel
      ஆனந்தவிகடனில் பத்தி எழுத்து ஜெமோ,சாரு,நாஞ்சில் அனைவருக்கும் நிறைய புதிய வாசகர்களை பொதுவெளியில் பெற்றுதந்தது.முன்பு தினமலர் இணைப்பு இதழில் நீங்கள் எழுதிய பத்தியும் அவ்வாறே. பாரதி மணி,சுகா பத்தி எழுத்தால் புகழ் பெற்றவர்கள். சுஜாதாவின் புனைவெழுத்துக்கு இணையாக பத்தி எழுத்துக்கும் வாசகர்கள் உண்டு. இப்பொழுது இளைஞர்கள் புனைவை விட கட்டுரைகளை அதிகம் படிக்கிறார்கள். அபிலாஷிற்கே பத்தி எழுத்து வாசகர்கள் அதிகம்.
      • Like
      • Reply
      • Hide
      • 1d
    • Senkuttuvan Raja
      எழுதுக....எழுதி எழுதி மேற்செல்க ....
      • Like
      • Reply
      • Hide
      • 19h



    கருத்துகள்

    இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

    ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

    தணிக்கைத்துறை அரசியல்

    நவீனத்துவமும் பாரதியும்