காக்கா முட்டையும் தமிழ்த்திரளும்.
வெகுஜன சினிமா விரும்பிகளைத் தன்னிலை மறக்கச் செய்து, தரமான சினிமாவின் பக்கம் நெருங்கிவரச் செய்துள்ளது காக்கா முட்டை. கலை, வணிகம், விருதுகள். விமரிசகர்களின் பாராட்டு என எல்லாவகையிலும் தமிழ்ச் சினிமாவின் நீண்ட நெடிய வரலாற்றில் முக்கியத்துவம் பெற்ற படம் இதுவரை இதுபோல் இல்லை என எழுதப்படப்போகிறது. இயக்கமும் கலைநோக்கமும் தனித்துவமாக வெளிப்பட்டதை ஏற்றுக் கொண்ட தமிழகப் பார்வையாளர்களின் ஏற்புநிலை ஆச்சரியமூட்டுவதாக இருக்கிறது.