இடுகைகள்

காக்கா முட்டையும் தமிழ்த்திரளும்.

படம்
வெகுஜன சினிமா விரும்பிகளைத் தன்னிலை மறக்கச் செய்து,  தரமான சினிமாவின் பக்கம் நெருங்கிவரச் செய்துள்ளது காக்கா முட்டை. கலை, வணிகம், விருதுகள். விமரிசகர்களின் பாராட்டு என எல்லாவகையிலும் தமிழ்ச் சினிமாவின் நீண்ட நெடிய வரலாற்றில் முக்கியத்துவம் பெற்ற படம் இதுவரை இதுபோல் இல்லை என எழுதப்படப்போகிறது. இயக்கமும் கலைநோக்கமும் தனித்துவமாக வெளிப்பட்டதை ஏற்றுக் கொண்ட தமிழகப் பார்வையாளர்களின் ஏற்புநிலை ஆச்சரியமூட்டுவதாக இருக்கிறது.

ஒற்றைக் கவிதையை எழுதுவதற்கு முன்...

படம்
இந்தியாவைப் பொறுத்தவரை ஈழத்தமிழர் பிரச்சினை அயலக உறவுத் துறையின் வழிகாட்டுதலில் கவனமாகும் ஒரு பிரச்சினை மட்டுமே. எப்போதும் அதுமட்டுமே. ஆனால் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளுக்கும் தமிழர்களுக்கும் சமமற்ற இரண்டு இனங்களின் உரிமை மற்றும் தன்னாட்சி சார்ந்த முரண்பாடுகளின் சிக்கல். இவ்விரண்டும் 50 ஆண்டுகளாகச் சந்தித்துக் கொண்டதேயில்லை. சந்தித்துக்கொள்ளும் ஒன்றாக ஆகிவிடக்கூடாது என்பதில் இந்திய அரசு/அதிகாரவர்க்கம் கவனத்தோடு இருந்தது; இருக்கிறது.

விடுதலை ( ஓரங்க நாடகம்)

மலையாள மூலம்; ஜி.சங்கரப்பிள்ளை தமிழில்; அ.ராமசாமி இளைஞன் :   கேட்டாயா நீ. நான் சொன்னேனே.. அதேதான் கேட்டாயா..? மணி ஏழு.. முதியவன்      : (அமைதியாக) கேட்டேன். இளைஞன் :   அப்புறம்.. இப்படி இருப்பதன் அர்த்தம்? அவன் தன் உயிரையும் பணியையும் பணயம் வைத்து இதைச் செய்துள்ளான். நேரம்வரும். ஒரு கயிறு இதுவழியே வரும். அதன் நுனியில் கம்பியை அறுக்கும் அரம். நம்மையும் வானத்தையும் பிரித்து நிற்கும் இந்தக் கம்பிகளை அறுத்து முறிப்பேன். என்னுடைய திட்டங்களை முன்பே சொல்லியிருக்கிறேனே..

பேச்சென்னும் லாவகம்

படம்
பல நேரங்களில் இதை நான் அனுபவத்திருக்கிறேன். கல்லூரிகள் நாடகப்பட்டறை அல்லது நடிப்புப் பட்டறைகள் நடத்துவதற்காக மாணவிகளை அல்லது மாணவர்களைத் தேர்வு செய்வதற்காகச் சந்திக்கும்போது பெரும்பாலும் இதுதான் நடக்கும். இதைத் தான் தங்களின் நடிப்புத் திறமை என்று நம்பும் இளைஞர்களே பெரும்பாலும் இருக்கிறார்கள். பெரும்பாலும் ஆண்களிடம் எங்கே கொஞ்சம் நடித்துக் காட்டுங்கள் என்று சொன்னவுடன் அவர்கள் செய்யும் முதல் காரியும் கைகளை எங்காவது இருக்கிப் பிடித்துக் கொண்டு பேசத் தொடங்கிவிடுவார்கள். பேசுவதற்காக அவர்கள் மனப்பாடம் செய்து வைத்திருக்கும் வசனம்: 

உத்தமவில்லன் : இன்பியலில் கரையும் துன்பியல்

படம்
எழுதியது ஒரேயொரு கவிதை. மனித வாழ்வின் சலனங்கள் அனைத்தையும் உறையச் செய்துவிடும் வல்லமைகொண்ட வரிகள் கொண்ட கவிதை. அந்தக் கவிதைக்குள் அவன் வைத்த அலங்காரச் சொற்றொடர் “நீர்வழிப்படூஉம் புனை”. உத்தம வில்லன் படத்தின் இரவுக்காட்சியைப் பார்த்துவிட்டு வந்து படுத்த நள்ளிரவில் கணியன் பூங்குன்றனின் இந்தச் சொற்றொடரோடு ஔவையின் ‘உயவுநோயறியாது துஞ்சும் ஊர்’ என்ற வரியும் சேர்ந்துகொண்டு தூக்கம் கலைத்துக்கொண்டே இருந்தன.   மரணத்தையும் காமத்தையும் இணைத்த படத்தின் தாக்கம் என நினைத்துக் கொண்டேன்.

வெகுமக்கள் எழுத்தின் இரண்டு ஆளுமைகள்: யுவகிருஷ்ணா, அதிஷா

தமிழில் எழுதப்படும் வலைப்பூக்கள்,   முகநூல், ட்விட்டர் என இணையத்தின் அச்சு ஊடகத்தில் வேலைபார்க்கும் ஒருவருக்கு இணையவெளிப் பயணம் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்ட காலம் நமது காலம். தமிழகத்தின் பிரபலமான அச்சு ஊடகங்களுக்குள் பணியாற்றும் இந்த இரண்டு  பெயர்களையும் இணையவெளியில் அலையும் ஒருவர் சந்திக்காமல் இருந்தால் ஆச்சரியம்.  ஒருவர் யுவகிருஷ்ணா, இன்னொருவர் அதிஷா..

சேகுவோரா

படம்
[மலையாள மூலம்: கோபன். தமிழில் ;  அ.ராமசாமி]       காட்சி.1 நாடகம் தொடங்கும்பொழுது மேடையில் ஒரு சவப்பெட்டி. அதனுள் விகாரமான தோற்றம் கொண்ட முதியவன் அண்ணாந்து பார்த்தபடி கிடைத்தப்பட்டுள்ளான். சவப்பெட்டியினுள் முழுமையான வெளிச்சம். சவப்பெட்டியின் முன்பாக மூன்று ராணுவ அதிகாரிகள் நடந்து வருகின்றனர். சவப்பெட்டியிலிருந்த வெளிச்சம் மங்கிக் குறைகிறது. மேடையில் உள்ள மூன்று மேஜை விளக்குகள் அடுத்தடுத்து எரிகின்றன. சேகுவோராவின் ஓவியம் பின் திரையில் தெரிகின்றது.

தொல்காப்பியம்; இலக்கணத்தைத் தாண்டி...

முன்னுரை தொல்காப்பியம் எழுத்து , சொல் , பொருள் என முப்பொருண்மையை விரிவாகப் பேசும் இலக்கணம் என்பது நமது கல்விபுலம் சொல்லும் தகவல். பின்னர் யாப்பு , அணி என இரண்டும் தனி இலக்கணங்களாக விரிவுபட்டதின் தொடர்ச்சியாகத் தொல்காப்பியத்திலேயே ஐந்திலக்கணம் குறித்த செய்திகள் உண்டு எனப் பேசத்தொடங்கியது தமிழ்க் கல்விப்புலம்.   இன்று உலக அறிவு விரிவடைந்துள்ள நிலையில் தொல்காப்பியத்தை இலக்கண நூலாகக் கற்பிப்பதைத் தாண்டி ஓர் அறிவுத் தோற்றவியல் நூலாகக் கற்பிக்க வேண்டும் என்பது எனது நிலைப்பாடு. ஐரோப்பியர்கள் அரிஸ்டாடிலின் எழுத்துகளைத் தொகுத்து வைத்துக்கொண்டு ஐரோப்பிய அறிவின் தொடக்கமாக முன்வைக்கிறார்கள். அப்படியொரு ஆளுமையாகத் தொல்காப்பியரை முன்வைக்க முடியும் . தொல்காப்பியப் பனுவலுக்குள் மனித அறிவுருவாக்கம் குறித்த விளக்கங்கள், சமூகவியல் அறிவு, உடலைப் பயன்படுத்தி உணர்வுகளைக் காட்டும் நடிப்புக்கோட்பாடு, நூலறிவியல் சிந்தனைகள், இடம்பெற்றுள்ளன. 

வலி தந்த வலிமை : ஜெயகாந்தனுக்கு அஞ்சலி

படம்
08- 04 -2015 இரவு எட்டுமணிக்குத் தொடங்கிய ஐ. பி. எல். கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் முடிந்த கையோடு செய்தி அலைவரிசைகளுக்குத் தாவியபோது எழுத்தாளர் ஜெயகாந்தன் மரணம் அடைந்து விட்டார் என்ற செய்தி   வந்துவந்து போய்க்கொண்டிருந்தது. தூங்குவதற்காகக் கண்களை மூடினால் தூக்கம் வரவில்லை.

தமிழ் அறிவுத்தோற்றவியலின் பரிமாணங்கள்

திருக்குறளின் கல்வி கேள்வி அதிகாரங்களை முன்வைத்து முன்னுரை: மனித நாகரிக வளர்ச்சி என்ற சொல்லாடலில் இலக்கியங்களுக்குப் பெரும்பங்கு இருக்கின்றன என்ற கருத்து இன்று ஏற்கப்பெற்ற கருத்து. அதிலும் தமிழ் போன்ற செவ்வியல் மொழிகளிலிருந்து உருவான இலக்கியங்கள், அம்மொழி பேசுகின்றவர்களின் வளர்ச்சியில் மட்டுமல்லாமல், உலகந்தழுவிய பொதுமைக் கூறுகளை முன் வைத்து உலக நாகரிக வளர்ச்சிக்கே காரணிகளாக ஆகியிருக்கின்றன.

குற்றவியலின் தர்க்கங்கள்-ஆப்பே கடையில் நடந்த 236 ஆவது மேசை உரையாடல்

படம்
ஒரு கவிதையை வாசிப்பதற்கும் நாடகத்தை வாசிப்பதற்கும் அடிப்படையான வேறுபாடுகள் இருப்பதுபோலப் புனைகதையை வாசிப்பதற்கும் அடிப்படையான வேறுபாடு இருக்கவே செய்கிறது. புனைகதைகளுக்குள்ளும்  சிறுகதை வாசிப்பும் நாவல் வாசிப்பும் வேறுபட்டது.

தற்காலிகமா? நிரந்தரமா?

படம்
ஐரோப்பியர்களுக்குக் கல்யாணத்திற்கு முன் சேர்ந்து வாழ்தல் (Living together) தவிர்க்க முடியாத நெருக்கடியின் விளைவு. இந்தியர்களுக்கு சேர்ந்து வாழ்தல் நெருக்கடி அல்ல;தேர்வு (Choice). இரண்டில் எது ? பந்தம் தொலைத்துக் கொஞ்சும் - கொஞ்ச காலமா? பந்தமென்றறியாத பந்தம் தொடரும் நீண்ட காலமா? தற்காலிகமா? நிரந்தரமா? 

எளிமையின் பயங்கரம்

கொம்பனை முன்வைத்துத் தமிழின் வட்டார சினிமாக்களைப்  பற்றி ஓர் அலசல் ‘அதிகத் திரையரங்குகள்; குறைந்த நாட்கள்; கூடுதல் கட்டணம்; வசூல் வெற்றி’ என்ற சூத்திரம் செயல்படும் இந்தக் காலகட்டத்தில் ஏப்ரல் முதல் வாரத்தில் வந்த சகாப்தம், நண்பேன்டா, கொம்பன் மாதிரியான படங்களின்  விமர்சனத்தை மே முதல் வாரம் வாசிப்பது அபத்தமான ஒன்று. 

ஆற்றுகை

writtentext kum performance text kum vilakkam solla mudiuma si.  (ரிட்டன் டெக்ஸ்ட்க்கும்,பெர்பார்மென்ஸ் டெக்ஸ்ட்க்கும் விளக்கம் சொல்ல முடியுமா சார்)

விருதுகள் - வெகுமதிகள் - விளையாட்டுகள்

இந்தியாவில்மட்டுமல்ல உலகெங்கும் வழங்கப்படும் எல்லாவகை விருதுகளும் நபர்களின் விருப்பு வெறுப்புஅடிப்படையில் தான் தரப்படுகின்றன. விருதுகளை உருவாக்கியவர்களின் நோக்கம் சார்ந்த விருப்பு- வெறுப்பு ஒருவகை என்றால், விருதுக் குழுவில் இருக்கும் நபர்களின் விருப்பு - வெறுப்பு இன்னொருவகை.  இதற்காக அறிவிக்கப்படும் விருதுகளை அப்படியே ஏற்றுக்கொள்ளட வேண்டும் என அர்த்தமில்லை.

முப்பாட்டன் முருகன் அல்ல; கணியன் பூங்குன்றன்

இரண்டு வாரங்களுக்கு முன் எனது சொந்தக் கிராமத்திற்கும் எனது மனைவியின் கிராமத்திற்கும் சென்று வந்தேன். இந்தக் கிராமங்களோடான உறவு முறிந்து 30 ஆண்டுகள் ஆகிவிட்டன என்றாலும் அவ்வப்போது போய்வருவது வழக்கம். உசிலம்பட்டியிலிருந்து கிளம்பும் நகரப் பேருந்தில் பயணம் செய்யும் அனுபவம் ஒவ்வொரு முறையும் வேறாக இருக்கும். இந்தமுறை பேருந்தில் செல்லவில்லை; காரில் சென்றேன்.

முகநூல் பதிவுகள் - இலக்கிய சேவைகள் - தமிழ் ஆய்வுகள் - நெஞ்சு நனைக்கும் நினைவுக்குறிப்புகள்

13 - 03-2015 அன்று இரவு 9 மணி வாக்கில் முகநூலில் நண்பர் பௌத்த அய்யனார்   இப்படி ஒரு   நிலைத்தகவல் போட்டார். ·       ஆண்டுக் கணக்கு முடிவு வந்து விட்டால் பேராசிரியர்கள் இலக்கியம் வளர்க்க ஆரம்பித்து விடுகிறார்கள். அதைப் படித்த உடன் அதற்கு உடனடியாக நான் ஒரு எதிர்வினையைத் தர வேண்டும் என நினைத்து இப்படி எழுதினேன்:

பண்பாட்டு நிலவியலும் தமிழ் நாவல் வாசிப்பும்

உலக இலக்கிய வரலாற்றின் ஆதியிலக்கிய வடிவம் எது? எனக் கேட்டால் ஐரோப்பியச் செம்மொழிகளான கிரீக், லத்தீன் மொழிகளிலிருந்து தொடங்கும் ஐரோப்பிய இலக்கியங்களைக் கற்றவர்கள் நாடகங்கள் தான் ஆதி இலக்கியங்கள் எனச் சொல்லக் கூடும். ஆனால் அவை கவிதைகளால் ஆன நாடகங்கள் எனத் தடுமாறவும் கூடும். அதேபோல் இந்தியச் செம்மொழிகளில் ஒன்றான சமஸ்கிருதத்திலிருந்து இலக்கிய வடிவங்களை உருவாக்கிக் கொண்டவர்கள்கூட நாடகங்களே ஆதியிலக்கிய வடிவங்கள் என நினைக்கவே செய்வார்கள். ஆனால் வேதங்களையும் ஸ்மிருதிகளையும் கணக்கில் கொண்டு கவிதைகளே ஆதியிலக்கிய வடிவம் என்று மயக்கங்கொள்ளவும் செய்வர். ஆனால் இன்னொரு செம்மொழியாகிய தமிழ்ச் செம்மொழியிலிருந்து உருவாக்கப்பெற்ற இலக்கிய மரபை அறிந்தவர்கள் கவிதையே ஆதியிலக்கிய வடிவம் என்று தயங்காமல் சொல்வர். நாடகத்தன்மையைக் கொண்ட தொடர்நிலைச் செய்யுளாகிய சிலப்பதிகாரம் கூட உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் தான்.

தி.ஜானகிராமனின் சிறுகதைகளில் வெளிப்படும் எழுத்தாளுமை.

வரலாற்றில் வாழ்தல் என்பதாக நினைத்துக் கொள்வதே மகிழ்ச்சியளிக்கக் கூடிய ஒன்று. ஒருவர் வரலாற்றின் பகுதியாக இருப்பதும், வரலாற்றை மாற்றுவதற்கான காரணமாக இருப்பதும் கூடுதல் மகிழ்ச்சிக்குரியன. ஒருவருக்கு மாற்றப்படும் வரலாற்றின் தொடக்கப்புள்ளியாக மாறும் வாய்ப்புக் கிடைக்கிறதென்றால் அவரும் அவர் சார்ந்த குழுவும் கொண்டாட்ட மனநிலைக்குள் நுழைகின்றனர் எனச் சொல்லலாம். சாகித்திய அகாடெமி திட்டமிட்டுள்ள இந்தக் கருத்தரங்கம் இதுவரை அறியப்பட்ட சிறுகதை வரலாற்றின் தொடக்கப்புள்ளியை நகர்த்திப் பார்ப்பதன் மூலம் மாற்று வரலாற்றை முன் வைக்க முயல்கிறது என நினைக்கிறேன். சிறுகதையின் தொடக்கம் வ.வே.சு. அய்யரின் குளத்தங்கரை அரசமரத்தில் இருப்பதாகச் சொல்லப்பட்ட வரலாற்றிற்குப் பதிலாகப் பாரதியின் வசன எழுத்துக்களில் சிலவற்றைத் தமிழ்ச் சிறுகதையின் முன்னோடி வடிவம் எனச் சொல்ல முயல்கிறது எனக் கருதிக் கொள்கிறேன்.

பின் நவீனத்துவ விமரிசன முறை - எளிய அறிமுகம்

படம்
முன்னுரை மனித குல வரலாறு பல்வேறு வாழ்தல் முறைகளைக் கடந்து வந்துவிட்டது. பின்- நவீனத்துவம் என்பதுவும் அத்தகையதொரு வாழ்தல் முறைதான் என்பதை நாம் நம் மனதில் இருத்திக் கொள்ள வேண்டும். தமிழ்ச்சூழல், மேற்கத்திய உலகம் தரும் கருத்து மற்றும் சிந்தனைகளைப் பெரும்பாலும் திறனாய்வுக் கோட்பாடுகளாக மாற்றிக் கொள்வதும், கலை இலக்கியத் தளங்களுக்குள் சுருக்கிக் கொள்வதும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றது. பின் நவீனத்துவமும் அத்தகைய நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் பின் நவீனத்தின் அடிப்படைகள் திறனாய்வுக்குள் மட்டும் அடங்கி விடுவன அல்ல. அது ஒரு வாழ்தல் முறை. அந்த வாழ்தல் முறை சரியான வாழ்தல் முறையா?தவறான வாழ்தல் முறையா ? எனக் கேட்டால் அதற்கு என்னிடம் பதில் இல்லை. ஆனால் வாழ்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்பதை மட்டும் பதிலாகச் சொல்ல முடியும். நான் மட்டும் அல்ல ஒவ்வொருவரும் வாழ்ந்து பார்த்துக் கொண்டிருக் கிறோம் என்பதுதான் அதற்கான பதில். ஒருவேளை அதன் நிறைவில் , அதாவது எனது மரணத்தின்போது அல்லது எல்லோரும் அவரவர் மரணத்தின் போது – பின் நவீனத்துவ வாழ்தல் முறை பற்றிய தர்க்கக் கேள்விகளுக்கு வி

அரங்கியல் என்னும் கலை அடிப்படைகள்

…. . கற்பிக்கின்றவர்களுக்கும் கற்கின்றவர்களுக்குமான குறிப்புகள் கலை இலக்கியப் படைப்புகளை வகுப்பறைக் கல்வி முறையில் கற்பிப்பதுவும், கற்றுக் கொள்வதும் சாத்தியம் தானா? அப்படிக் கற்றுக் கொண்ட ஒருவர் படைப்பில் ஈடுபடுதலும் திறமான படைப்புகளை உருவாக்குதலும் இயலுமா..?   இவ்வளவு ஏன்../ திறமான ஆசிரியர்களால் திறமான படைப்புகள் எதுவும் உருவாக்கப்படுவது சாத்தியமில்லையே…

பூங்குழலியும் மதியழகனும் - கவிதை வாசிப்பு 1 :

படம்
கவியின்பம் அல்லது இலக்கிய இன்பம் என்ற தலைப்புகளில் நான் மாணவனாக இருந்த காலத்தில் எனக்குக் கிடைத்ததுபோல இப்போதைய மாணாக்கர்களுக்கு - இப்போது எழுதப்படும் இலக்கியங்கள் பற்றி எடுத்துச் சொல்லும் எழுத்துக்கள் இல்லை. இலக்கியம் பற்றி எழுதப்படுவன எல்லாமும் விமரிசனங்களாக - விமரிசனங்கள் என்ற பெயரில் போற்றுவது, தூற்றுவது, தள்ளி வைப்பது, கூட்டம் சேர்ப்பது, இருட்டடிப்பு செய்வது, வெளிச்சம் போட்டுக் காட்டுவது எனத் தொடர்ந்து நடக்கிறது. நடப்பது நடக்கட்டும். நடப்பது நன்றாக நடக்கவில்லை என்பது மட்டும் புரிகிறது

கடைசி வாய்ப்பைத் தெரிந்தே தவறவிட்டேன்.

படம்
தமிழ்மொழியைச் செம்மொழியாக்கிடும் முயற்சிக்குப் பத்தாண்டுகள் நிறைவடைந்து விட்டது. செம்மொழித் தமிழுக்கான நிறுவனம் தொடங்கப்பட்டும் 8 ஆண்டுகள் முடிந்துவிட்டன. எட்டாண்டுகளாகவே அதற்கெனத் தனியாக நியமிக்கப்பட வேண்டிய தலைமை நிர்வாகி - இயக்குநர் - பதவி நிரப்பப்படாமலேயே இருக்கிறது. இந்தப் பதவிக்கு நான் ஏற்கெனவே இரண்டுமுறை விண்ணப்பம் செய்தேன். இரண்டு முறையும் எனது பெயர் பரிசீலனை செய்யப்பட்டதா என்பதை நானறியேன். அப்படிப் பரிசீலனை செய்யப்படாமல் போவதற்கு விதிப்படியும் நடைமுறைகளின்படியும் சிலபல காரணங்கள் இருந்திருக்கலாம். அதனால் நேர்காணலுக்கு அழைக்கப்படவில்லை.

மணவிழா என்னும் நாடகம்

[ 2007 இல் எனது மகளின் திருமணத்தைச் சமஸ்கிருத வார்த்தைகளின்றி நடத்திட நினைத்தேன். அந்நிகழ்வை ஒரு நாடகப்பிரதியை எழுதுவதுபோல எழுதித்திருத்தினேன். நண்பர் முருகேச பாண்டியன் தான் கட்டியங்காரனைப் போலக் காட்சிகளை நடத்திக்காட்டினார். அந்தப் பிரதியை வேண்டிப் பின்னர் சிலர் அவ்வப்போது தொடர்பு கொண்டார்கள். அவர்கள் அந்தப் பிரதியைக் கொண்டு அவர்களின் நாடகத்தை எப்படி மேடையேற்றினார்களோ எனக்குத் தெரியாது. இன்று காலை ஒரு நண்பர் இந்தப் பிரதி வேண்டும் என்றார். எதிர்வரும் 15 ஆம் தேதி மேடையேற்றும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாம். அவரது நெறியாள்கையின்படி நடக்கும் அந்த நாடகத்தின் பிரதி மட்டும் என்னுடையது. நாடகங்கள் இன்பியலாகவும் துன்பியலாகவும் அமைவதைப் போல திருமணங்களும் அதனதன் போக்கில் முடியக்கூடும். அதற்குப் பொறுப்பு நெறியாளர் மட்டுமே. பிரதியை எழுதியவன் அல்ல] ==========================================================================

எழுத்துக்குத் தடை என்னும் பேதமை: மாதொருபாகனை முன்வைத்து

படம்
பெருமாள் முருகனின் மாதொரு பாகனை அப்போது  வாசித்திருக்க வில்லை. மாதொருபாகன் (2010) மட்டுமல்ல; 2011-2013 ஆண்டுகளில் வந்த பல நூல்களைப் படிக்கவில்லை. நான் போலந்து நாட்டு வார்ஷா பல்கலைக்கழகம் போனது ஒரு காரணம். இங்கே வந்த பிறகு இப்போது புதிதுபுதிதாக வந்து கொண்டிருக்கும் நாவல்களையே படிக்க நேரம் கிடைக்கவில்லை. அந்த 2 ஆண்டுப் பாக்கி அப்படியே தான் இருக்கப்போகிறது. பெருமாள் முருகனின் மாதொரு பாகனை வாசிக்காமல் விட்டதற்குப் பெரிதாக வருத்தமில்லை. ஆனால் அவரின் நிழல்முற்றம் (1993) நாவலை வாசிக்காமல் இருந்ததற்காக வருத்தப்பட்டதுண்டு.

நகரும் நதிக்கரையில் நடந்தபடி…

படம்
நதிக்கரையோரக் கிராம வாழ்வாயினும் நகர வாழ்வாயினும் நீரோடும் நீருக்குள் சுழலும் நினைவுகளோடும் பின்னிப் பிணைந்ததாகவே இருக்கக்கூடும். கவி கலாப்ரியாவின் மறைந்து திரியும் நீரோடை என்னும் கட்டுரைத் தொகுப்பை வாசிக்கும்போது நீரின் சிலிர்ப்பைத் தவிர்த்து நினைவின் சுளிப்பைத் தொடரும் பயணமாக மாறிவிட்டதை உணர்ந்தேன். பயணங்கள் எப்போதும் பாதத்தின் நகர்வில் சாத்தியமாகக் கூடியவை. அசையாப் பாதங்கள் அலையா மனதின் உறைவிடம்.