இடுகைகள்

நாவல் எழுத்து: பெருவெளியும் சிறுவெளியும்

படம்
“உங்கள் வாழ்நாளில் உங்களைப் பாதித்த பெரும் அல்லது நினைவில் இருக்கக்கூடிய நிகழ்வு அல்லது ஆளுமையைப் பற்றிச் சொல்லுங்கள். அரசியல் அல்லது சினிமா சார்ந்த ஆளுமைகளையோ, அவர்களால் முன்னெடுக்கப்பட்ட நிகழ்வுகளாக இருக்கக்கூடாது” இப்படியொரு தூண்டுகோலை முன்வைத்து அந்த வகுப்பைத் தொடங்கினேன். பல்கலைக்கழக மானியக்குழுவின் புத்தொளிப்பயிற்சி வகுப்பு அது. நடத்தியது ஒரு பல்கலைக்கழகத்தின் ஆசிரிய மேம்பாட்டிற்கான இயக்குநரகம் என்றாலும் இந்தியாவின் எந்தப் பல்கலைக்கழக எல்லைக்குள் இருந்தும் வந்து கலந்து கொள்ளலாம். ஒரேயொரு வரையறை, அவர்கள் பல்கலைக்கழக மானியக் குழுவின் கட்டுப்பாட்டில் இயங்கும் கல்லூரியின் தமிழ் ஆசிரியராக இருக்கவேண்டும்; அவர்களுக்கான பணியிடைப் பயிற்சி அது. தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் டெல்லி, கேரளம், ஆந்திரம் முதலான மாநிலங்களின் கல்லூரிகளிலிருந்தும் மொத்தம் 48 பேர் கலந்து கொண்டிருந்தனர்.

இப்படியாக முடிந்தது 2022

படம்
எனது எழுத்துகளின் அடிப்படைத்தன்மை என்னவென்று கேட்டால், எல்லாவற்றையும் சூழலில் வைத்து வாசித்துப் பேசுவது என்றே சொல்ல விரும்புகிறேன். பார்ப்பனவற்றையும் கேட்பனவற்றையும் வாசிப்பனவற்றையும் உணர்வனவற்றையும் உள்வாங்கிப் பகுப்பாய்வுக்குட்படுத்தி வாசிக்கிறேன். ஆம் எல்லாமும் வாசிப்புத்தான். வாசித்தனவற்றை வகைப்படுத்திப் புரிந்துகொள்கிறேன். புரிந்துகொண்டதின் அடிப்படையில் விளக்கங்களையும் மதிப்பீடுகளையும் முன்வைக்கிறேன்.

விருதுகள் -2022

இந்தியாவில்மட்டுமல்ல உலகெங்கும் வழங்கப்படும் எல்லாவகை விருதுகளும் நபர்களின் விருப்பு வெறுப்பு அடிப்படையில் தான் தரப்படுகின்றன. விருதுகளை உருவாக்கியவர்களின் நோக்கம் சார்ந்த விருப்பு- வெறுப்பு ஒருவகை என்றால், விருதுக் குழுவில் இருக்கும் நபர்களின் விருப்பு - வெறுப்பு இன்னொருவகை.  இதற்காக அறிவிக்கப்படும் விருதுகளை அப்படியே ஏற்றுக்கொள்ளட வேண்டும் என அர்த்தமில்லை. இந்திய அரசின் கலை இலக்கிய அகாடெமிகளான சாகித்திய அகாடெமி,சங்கீத் நாடக அகாடெமி, லலித் கலா அகாடெமி போன்றனவற்றில் விருப்பு வெறுப்பு இருக்கக்கூடாது எனத் தொடர்ந்து விமரிசனம் செய்யப்பட்டாலும் ஆளுங்கட்சி, அகாடெமிகளில் இருக்கும் நபர்கள், அவர்களால் நியமிக்கப்படும் தேர்வுக்குழுக்களால் விருப்பு வெறுப்புகளோடுதான் பரிந்துரைகள் நடக்கின்றன.  தமிழக அரசு ஆண்டுதோறும்  வழங்கும் விருதுகள் யாரால் தீர்மானிக்கப்படுகின்றன என்ற கேள்வியே இல்லை. கலைமாமணி விருதுகளும் அப்படித்தான்.

ஹேமிகிருஷ் – விலகி நிற்கும் கதைசொல்லி

வாசிப்பும் தடைகளும் தொடர்ச்சியாக வாசித்து முடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தடுப்பதில் முதல் காரணியாக இருப்பது வித்தியாசம் காட்டாத தன்மை என்றே சொல்வேன். கவிதைத் தொகுதிகளில் இந்தத் தடையை உணர, பத்திருபது கவிதைகளையாவது தாண்டவேண்டியதிருக்கும். ஆனால் சிறுகதைத் தொகுப்பு என்றால் நிலைமையே வேறு. தொகுப்பொன்றில் முதல் கதையை வாசித்து முடித்து விட்டு அடுத்த கதையைத் தொடங்கி வாசிக்கும்போது இரண்டிலும் புனைவுக்கூறு சார்ந்து வித்தியாசம் இல்லையென்றால் மூன்றாவதாக ஒன்றைத் தொடங்குவவதில் சுணக்கம் ஏற்பட்டு விடுவதைத் தடுக்கமுடியாது. நாட்கணக்கிலான இடைவெளிக்குப் பின்னரே வாசிப்பைத் தொடர முடியும். இந்தச் சுணக்கம் ஏற்படாமல் அண்மையில் வாசித்து முடித்த சிறுகதைத் தொகுப்பாக ஹேமிகிருஷின் நெட்டுயிர்ப்பு. தொடர் வாசிப்பில் தொகுப்பின் 10 கதைகளையும் வாசித்து முடிக்க முடிந்தது. இந்த ஒரு காரணமே, அண்மையில் வந்த சிறுகதைத் தொகுப்புகளில் கவனித்து வாசிக்க வேண்டிய தொகுப்பு எனப் பரிந்துரைக்கப் போதும் என்று நினைக்கிறேன்.

நந்தனார் தெருக்களின் மனிதர்கள்

படம்
தொடர்ச்சியாகச் சந்தித்துக்கொண்டே இருக்கும் நண்பர்கள் என்றால் முதல் சந்திப்பும் அச்சந்திப்பில் பேசிக்கொண்ட உரையாடல்களும் நினைவில் இல்லாமல் போக வாய்ப்புண்டு. அதே வேளையில் முதல் சந்திப்பின் உரையாடல்களே நெருங்கிய நட்புக்காரணமாக இருந்தது என்றால் முதல் சந்திப்பின் பதிவுகளும் சொற்களும் மனதிலிருந்து அழிந்துவிடுவதில்லை. மனிதர்களைக் குறித்த நினைவுகளுக்கும் ஞாபகங்களுக்கும் சொல்லப்பட்ட இந்தக் குறிப்பு வாசித்த எழுத்துகளுக்கும் பொருந்தக் கூடியனவாகப் பல நேரங்களில் இருக்கிறது. விழி பா. இதயவேந்தனின் கதைகளில் முதன்முதலில் வாசித்த கதை ‘நந்தனார் தெரு’ அவரை நினைத்துக் கொள்ளும்போது அந்தக் கதையே எப்போதும் நினைவுக்கும் வரும். முதல் தொகுப்புக்கு அந்தக் கதையைத் தான் தலைப்பாக வைத்திருந்தார். அவரது மறைவுக்குப்பின் கருப்புப் பிரதிகள் வெளியிட்டுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட 20 கதைகளுக்கும் “நந்தனார் தெரு, மற்றும் சில கதைகள்” என்றே தலைப்பிட்டுள்ளது

இந்திய ஞானமார்க்கத்தில் வள்ளலாரின் சன்மார்க்கநெறி

படம்
மனிதகுல வரலாறு பல்லாயிரம் ஆண்டுகளைக் கொண்டது. மனிதர்களின் தோற்றம் பற்றிய அறிவியல் பார்வைகள் உருவாகியிருக்கின்றன. அதன் தொடர்ச்சியாகவே மனிதர்களால் உருவாக்கப்பட்டவைகளாகவே மொழிகள், கலைகள், கருத்துகள் போன்றனவும் என்ற கருத்தும் உருவாகியிருக்கின்றன. ஆனாலும் மனிதத் தோற்றம் பற்றிய சமயங்களின் கருத்துகள் வேறாக இருக்கின்றன. மனித உருவாக்கம் கடவுளால் நிகழ்ந்தது என்ற கருத்தே பெரும்பாலான சமயங்கள் சொல்லும் முன்வைப்பு. இந்த முன்வைப்பின் தொடர்ச்சியாகவே, மொழியின் தோற்றம், கலைகளின் தோற்றம், கருத்துகளின் தோற்றம் பற்றியனவும் கடவுளோடு தொடர்பு கொண்டனவாக நம்பப்படுகின்றன.

மொழி அரசியல்: மதவாத அரசியல் இணையும் புள்ளிகளும் விலகும் தடங்களும்

படம்
காசி தமிழ்ச்சங்கமம்-2022 சங்கமம்: சங்கமம் என்ற சொல்லுக்கு முன்னால் ‘தமிழ்’ இணைக்கப்பட்டுத்                ‘தமிழ்ச்சங்கமம்’ என்றொரு நிகழ்வு இம்மாதம் – நவம்பர் 16 ஆம் தேதி முதல் நடந்துகொண்டிருக்கிறது. நடக்கும் இடம் காசி. சங்கமம் என்பது கூடுகை; சங்கமம் என்பது கலத்தல்; சங்கமம் என்பது ஆறு.