இடுகைகள்

துள்ளிவரும் மல்லல் பேரியாறு

  தொடர்ச்சியாக ஒரு புலத்தில் சோதனைகளையும் புத்தாக்கங்களையும் செய்துகொண்டே இருப்பதின் மூலம் ஒருவரது அடையாளம் உருவாகிறது. அந்தப் புலத்தில் மரபுத்தொடர்ச்சியை உருவாக்கி இற்றைப் படுத்திக்கொண்டே இருப்பதின் மூலம் அவரது இருப்பும் இயக்கமும் உறுதிப்படுத்தப்படும்.

நெடுமுடிவேணு : நினைவில் இருப்பார்

படம்
  இந்திய அளவில் தொடங்கிய நடப்பியல் அலை ஒவ்வொரு இந்திய மொழிகளிலும் ஒவ்வொரு விதமாகத் தாக்கத்தையும் பங்களிப்பையும் உருவாக்கியது. மலையாளத்தில் குறிப்பான சூழலில் நிகழும் நிகழ்ச்சிகளையும் அவற்றில் பங்கேற்ற வகைமாதிரிப் பாத்திரங்களையும் உருவாக்கிய பங்களிப்பாக வெளிப்பட்டது. மரபான மலையாள சமூகத்தில் உடைப்புகளை ஏற்படுத்தும்போது உண்டாகும் முரண்பாடுகள் அத்தகைய படங்களின் உரிப்பொருட்களாக வெளிப்பட்டன. அந்த வெளிப்பாட்டுக் காட்சிகளில் மாற மறுக்கும் முந்தைய சமூகத்துப் பிரதிநிதிகளின் வகைமாதிரிப் பாத்திரங்கள் பல உருவாக்கப்பட்டன.

அயல் பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகள்

படம்
ஹார்வர்டு பல்கலைக்கழகம் உலகத்தின் பெருமைமிகு பல்கலைக் கழகங்களில் ஒன்று. அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் அமைந்துள்ள அப்பல்கலைக்கழகம் உலகின் தலைசிறந்த அறிவாளிகளையும் நோபல் விருதாளர்களையும் உருவாக்கித் தந்த பல்கலைக்கழகம். அந்தப் பல்கலைக் கழகத்தில் செம்மொழியான தமிழ்மொழிக்கொரு இருக்கை அமைக்க வேண்டும் என்ற எண்ணம் நிறைவேறுவது தமிழர்களுக்கும் தமிழுக்கும் பெருமையே. அது தந்த உற்சாகத்தில் அதே வகையான பெருமைகளை உருவாக்கும் முயற்சிகள் இப்போது பல இடங்களில் தொடங்கியுள்ளன.

ஜெயந்தி: மாமனிதர்களின் அடையாளங்கள்

படம்
ஜெயந்தி என்பது வேறொன்றும் இல்லை. பிறந்த நாள் தான். பிறந்த நாளை, பிறந்த நாள் என்று கொண்டாடுவதற்குப் பதிலாக ஜெயந்தி என்று கொண்டாடுவது வெறும் பெயரளவு மாற்றம் அல்ல. ஜெயந்தி என்ற சமஸ்கிருதச் சொல்லால் பிறந்த நாள் அழைக்கப்படும்போது சமஸ்கிருதமயமாக்கப் பட்டதாக மாறி மேல்நிலையாக்கமும் பெறுகிறது. அதனால் சமஸ்கிருதக் கருத்தியலும் சேர்ந்து கொள்கிறது . பிறந்த நாள் கொண்டாட்டங்கள் வெறும் மனிதர்களுக்கானது. ஜெயந்தி மனிதர்களுக்கானதல்ல; மகான்களுக்கானது என்பது அதன் உள்கிடை. 

உலகத்தமிழ் இலக்கிய வரைபடம் என்னும் கருத்துரு

படம்
இலங்கைத்தீவிலும் இந்தியத்துணைக் கண்டத்திலும் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே தமிழர்கள் வாழ்கிறார்கள். கலை, இலக்கியப் பனுவல்களை உருவாக்கியிருக்கிறார்கள். தமிழ்மொழியின் ஆரம்பகால நிலப்பகுதி இன்று இரண்டு நாடுகளுக்குள் இருக்கும் பகுதிகளாக இருக்கின்றன.

வீரத்திலிருந்து காமம் நோக்கி : புலம்பெயர்ப்புனைவுகளின் நகர்வுகள்

படம்
இலக்கியப்பரப்பில் புலப்பெயர்வு (daispora) இலக்கியங்கள் என்ற அடையாளம் பழையது. ஆனால் தமிழ் இலக்கியப் பரப்பில் அதன் வருகை – அடையாளப்படுத்துதல் தனி ஈழத்துக்கான போருக்குப் பின்னான புலப்பெயர்வின் வழியாகவே நிகழ்ந்தது. அதற்கும் முன்பே காலனிய காலத்தில் இந்தியாவிலிருந்தும் இலங்கையிலிருந்தும் தமிழர்கள் ஐரோப்பியர்களின் காலனியாதிக்கக் கண்டங்களுக்கும் நாடுகளுக்கும் புலம் பெயர்க்கப்பட்டார்கள் என்பது வரலாறு.

சி. அண்ணாமலையின் வெங்காயம் : மதத்தில் மறையும் மாமத யானை

படம்
நாடகக்காரரும் நாடகம் பற்றிய பதிவுகளைப் பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்துசெய்து வருபவருமான சி.அண்ணாமலை எழுதி காவ்யா வெளியிட்டுள்ள நாடகம் வெங்காயம்.வெங்காயம் -பெரியார் பற்றிய நாடகம் என்ற குறிப்புடன் வந்துள்ள இந்த நாடகப்பிரதியைப் பற்றிப் பேசத் தொடங்கும் போது மிகுந்த எச்சரிக்கையோடு பேச வேண்டியுள்ளது. ஏனென்றால் தமிழ் நாட்டில் நவீன நாடகத்தளத்தில் செயல்படுகிறவர்களாகக் கருதிக் கொள்ளும் பலரும் நாடகத்தைப் பற்றிய விமரிசனங்களையும், நாடகப் பிரதிகளைப் பற்றிய விமரிசனங்களையும், விமரிசனங்களாகக் கருதி விவாதிப்பதில்லை என்பது எனது சொந்த அனுபவம்.