இடுகைகள்

வெளியே x உள்ளே

படம்
நிகழ்காலத் தமிழகத்தில்/இந்தியாவில் சிந்தித்துச் செயல்படுகிறவர்களாகக் காட்டிக்கொள்ளும் மனிதர்களின் மூளையை அலைக்கழிக்கும் கருத்துரைகள் பலப்பல. தேசியம், தேசப் பாதுகாப்பு, தேசியப் பெருமிதம், தேசியப்பண்பாடு, சமய நல்லிணக்கம் அல்லது சமயச் சார்பின்மை, பிராமண எதிர்ப்பு, சமூக நீதி, தீண்டாமை ஒழிப்பு, பெரும்பான்மை வாதம், சிறுபான்மையினர் பாதுகாப்பு, பெண்களின் விடுதலை என்பன அவற்றுள் சில. இந்த வார்த்தைகளை முன்வைத்து, இவற்றின் எதிர்வுகளாக சிலவற்றைக் காட்டிப் பயமுறுத்தி அவற்றில் எதை ஆதரிக்கிற மனிதனாக நீ இருக்கப் போகிறாய்? எனக் கேட்பது நிகழ்கால மனத்தின் புறநிலை. இந்தப் புறநிலை உண்மையிலிருந்து ஒருவரும் தப்பிவிட முடியாது.

சட்டமன்றத்தேர்தல் : தொடங்கும் ஆட்டங்கள்

படம்
சட்டமன்றத்தேர்தலுக்கு இன்னும் ஏழெட்டு மாதங்கள் இருக்கின்றன. என்றாலும் கொரோனாவைத் தாண்டிய செய்திகளைத் தேடிப்போகாத அச்சு மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களுக்குத் தேவையான செய்திகளைத் தருவதன் மூலம் அரசியல் கட்சிகள் தேர்தலை நோக்கி நகர்கின்றன. மாநில அரசின் ஆளுங்கட்சியான அ இ அதிமுகவின் முதல் அமைச்சர் மாவட்டத்தலைநகர் தோறும் பயணம் செய்து காட்சிக்கெளியன்; கடுஞ்சொல் அல்லாதவன் என்னும் பிம்பத்தின் வழியாகவும், நெருக்கடியிலும் நிர்வாகப்பணி மேற்கொள்பவர் என்ற அடையாளத்தை உருவாக்குவதைத் தொடர்ச்சியாகச் செய்கிறார். செய்யும் செயலைச் சொல்வதற்கான ஆட்களையும் தன்பக்கம் வைத்திருக்கிறார். அதன் முன்னணிப்படையாக இருப்பவர் ராஜேந்திர பாலாஜி. 

எட்டுப்பட்டிகளும் பதினெட்டுப்பட்டிகளும்

படம்
சில எண்கள் சார்ந்து சில மரபுத்தொடர்கள் உருவாகியிருக்கின்றன; சில நம்பிக்கைகளும் உள்ளன. மூன்று, ஆறு, எட்டு, ஒன்பது முதலான எண்களோடு கடவுள்களுக்குத் தொடர்புகள் உண்டு. மும்மூர்த்திகள், ஆறுமுகன், நமசிவாய நமஹ என்னும் எட்டெழுத்து, நமோ நாராயணாய நமஹ என்னும் ஒன்பது எழுத்து போன்றன கடவுள்களின் அடையாளங்கள். பெருமாள் என்னும் நாராயணனோடு ஒன்பது எழுத்து தொடர்பில் இருக்க, நெல்லைக்குப் பக்கத்தில் தாமிரபரணிப்படுகையில் பெருமாள் இருக்கிறார். அவரது கோயிலுக்குப் பெயர் எட்டெழுத்துப் பெருமாள் கோயில். 

நிகழ்காலத்தில் பெரியார்.

படம்
திரள் மக்களின் விடுதலைக்கும் வரலாற்றுக்கும் உள்ள உறவை யாராவது ஒருவர் எளிமையாக விளக்கி விட முடியும் என்று முன்வந்தால் அவரை ஆச்சரியத்தோடு தான் பார்க்கத் தோன்றுகிறது. அதற்கு மாறாக விடுதலைக்கும் வரலாற்றுக்கும் ஒட்டும் இல்லை; உறவும் இல்லை எனக் கூறி வரலாற்றை விலக்கி வைக்க முன் வந்தால் அவரையும் ஆச்சரியத்தோடு தான் பார்க்கத் தோன்றுகிறது. வரலாறு விளக்கவும் முடியாத - விலக்கவும் முடியாத -ஒன்றாக இருப்பது பேசுவதற்கான ஒன்றுதான்.

பழக்கவழக்கம் என்று சொல்லி

படம்
  ’ ‘ இருபது வயதில் எழுதிப் பழகு  ;  நாற்பது வயதில் நடந்து பழகு' ஔவையாரின் ஆத்திச்சூடி அல்ல இது. கொன்றை வேந்தனிலும் கூட இப்படிச் சொல்லப்படவில்லை. நாம் பின்பற்ற வேண்டிய நடைமுறையைப் புலவர் ஒருவர் சொல்லித்தான் இருக்க வேண்டும் என்பது அவசியமா என்ன.. ?

எழுத்தாளர்களின் உளவியலும் தன்னிலையும் : இமையம் - தி.ஜானகிராமன்- ஜெயகாந்தன்

படம்
இமையத்தின் முதல் நாவல் ‘கோவேறு கழுதைகள்’   அச்சில் வந்து கால் நூற்றாண்டு முடிந்துவிட்டது.பல பதிப்புகளும் வந்து விட்டன. இரண்டாவது நாவல் ‘ ஆறுமுகம்’ அச்சாகி இருபது ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டன  . இந்த இரண்டு நாவல்களையும் திரும்பவும் வாசித்துவிட்டுத் தமிழ் இலக்கியம் அவற்றை எதிர்கொண்ட விதத்தை நினைவுபடுத்திக் கொண்ட விதமாக இக்கட்டுரை இரண்டு பகுதிகளைக் கொண்டது. முதல்பகுதி விமரிசனப்பார்வைக்குள் செயல்படும் போக்குகளை விவாதிக்கிறது. இரண்டாவது இமையத்தின் ஆறுமுகம், தி.ஜானகிராமனின் அம்மாவந்தாள், ஜெயகாந்தனின் உன்னைப்போல் ஒருவன் ஆகிய மூன்றையும் ஒப்பிடுகிறது.

இன்னுமொரு போரை நினைத்தல் : ஆசி கந்தராஜாவின் நரசிம்மம்

படம்
ஈழத்தமிழ்ப் புனைகதைகள் இன்னும் போர்க்கால நினைவுகளிலிருந்து மீளவில்லை. 2009 முள்ளிவாய்க்கால் பேரழிவுகளையும் அதற்கு முந்திய கால் நூற்றாண்டுப் போர்க் காலத்தையும் மறந்து விட்டு ஈழநிலப்பின்னணியில் புனைவுகள்  எழுதவேண்டும் என்றால் அதன் கோரத்தை - வடுக்களை- பாதிப்பை உணராத தலைமுறை ஒன்று உருவாகி வரவேண்டும். அதுவரை போர்க் காலம் என்பது நேரடியாகவும் நினைவுகளாகவும் பதிவு செய்யப்படுவது தவிர்க்க முடியாதது. உள்ளே இருப்பவர்களும் வெளியே புலம்பெயர்ந்தவர்களும் திருப்பத்திரும்ப அதையே எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.