நிலவோடு கோபம்
அதுதான் நாங்கள் இருவரும் அமர்ந்து கதைபேசிக் கலவி செய்து பிரியும் இடம். ஆனால் அந்த இடத்தை தன் நிழலால் நிரப்பியிருக்கிறதே அந்த மரம். தன் உயரத்தைவிட நீளமாக நிழல் பரப்பியிருக்கும் அந்த மரம் என்ன மரமாக இருக்கும்? கொன்றை? புங்கை? புன்னை? வேங்கை?