இடுகைகள்

இருமொழிகளில் ஒரு கவிதைத் தொகுப்பு

படம்
காண்மதி நீவிர்... கண்டா வரச்சொல்லுங்க... செவ்வியல் கவிதைகளில் ஆங்காங்கே விளித்துச் சொல்லும் சொற்றொடராக இருக்கும் ஒன்று காண்மதி. கண்டது தானே? என்ற வினாவும் விடையும் உள்ளடக்கிய ஒரு சொற்றொடர். அதனைத் தொடர்ந்து வரும் ‘நீவிர்’ என்பது முன்னிலைப் பன்மை. நீங்கள் கண்டுகொள்ளுங்கள் என்று ஒன்றைக் குறித்துச் சொல்வதாகவோ, நீங்கள் பார்த்தீர்களா? என அறியா வினாவாகவோ கேட்கும் தன்மையிலானது. பெரும்பிரிவிலோ, சிறுபிரிவிலோ தனித்திருக்கும் தலைவியின் மனம் தலைவனைத் தேடிக் கொண்டிருக்கும்போது உருவாகும் வினாச் சொற்றொடர். இவர்கள் எல்லாம் பார்த்திருப்பார்கள்; நான் தான் பார்க்கவில்லை; ஆனால் பார்த்துவிடுவேன் என்ற நம்பிக்கை இருக்கின்றது.

இரண்டு பயணங்கள்

படம்
அது இரண்டு மணிநேரப் பயணம் தான். இடைநில்லாப் பேருந்தில் ஏறினால் பயண நேரத்தில் முக்கால் மணி நேரம் குறையலாம். சில நிறுத்தப் பேருந்துகள் என்றால் இரண்டிற்கும் இடையில் ஒன்றரை மணி நேரம் பயணம் செய்ய வேண்டியதிருக்கும். நாகர்கோவிலுக்கும் திருநெல்வேலிக்கும் இடையில் உள்ள தூரத்தைக் கடக்க எந்த வகைப் பேருந்தைத் தேர்வு செய்வது என்ற குழப்பம் எல்லாம் இப்போது இல்லை. விரைந்து செல்லும் வாகனத்தில் ஏறி அமர்ந்து விட்டேன்.

நினைவுக்குள் நாடும் காடும்

படம்
உயிர்மை இதழில் வந்திருந்த இந்தக் கவிதையை (தீபச்செல்வன்/ உயிர்மை/நவம்பர்/2025) வாசித்து முடித்தேன். ஒருமுறைக்குப் பதிலாக இன்னும் சில தடவை வாசித்துப் பார்த்தேன். முதல்வாசிப்பில் அந்தக் கவிதை தரும் ஈர்ப்பு தான் திரும்பவும் வாசிக்கச் செய்யும். ஒரு கவிதையில் கிடைக்கும் ஈர்ப்பு என்பதில் அதன் செய்நேர்த்தி, அதன் வழியாக எழுப்பும் உணர்வுத் திரட்சி, அதற்குக் காரணமான கவிதை நுட்பங்கள் எனப் பலவற்றில் ஏதாவதொன்றாக இருக்கலாம்.

தண்டனைகளும் மன்னிப்பும்

படம்
விலக்கும் விதியும் பெர்ட்டோல்ட் பிரெக்ட் எழுதிய - EXCEPTION AND THE RULE விதிவிலக்கும் விதியும் என்றொரு நாடகத்தைச் சென்னையின் மேக்ஸ்முல்லர் பவன் வளாகத்தில் - தோட்ட அரங்கில் பார்த்த நினைவு இப்போதும் இருக்கிறது. அந்த நாடகத்தைப் பார்க்கப் புதுச்சேரியிலிருந்து மாணவர்களோடு சென்றிருந்தேன்.

அவ்வப்போது மனுஷ்யபுத்திரன்

படம்
பெருங்கவிகள் ஏற்படுத்தும் நெருக்கடி ஒரு மொழியில் இயங்கும்/ இயங்கிய பெருங்கவிகளின் கவிதைகளைத் தொகுத்து வகைப்பாட்டிற்குள் வைத்துப் பேசுவது எந்தத் திறனாய்வாளருக்கும் எளிதானதல்ல. திறனாய்வாளர்களைத் திணறடிக்கும் மரபுத்தொடர்ச்சியின் தொடக்கம் தமிழ்க் கவிதைப்பரப்பில் ஔவையும் கபிலரும். செவ்வியல் கவிதைக்குப் பின்னர் அற இலக்கிய காலத்தில் திருக்குறளை எழுதிய திருவள்ளுவரைக் காட்ட முடியும். ராமாயணம் எழுதிய கம்பரின் பிறகவிதைப் பனுவல்களையும் ஒருங்கிணைத்துப் பார்க்கும்போது அந்த வரிசையை அவர் நீட்டித்தார். பக்திக்கவிதைகளில் அப்படியொரு பெரும் ஆளுமையைக்காட்டுவது எளிதல்ல. ஓரளவு ஆண்டாளின் பாவைப்பாடல்களையும் நாச்சியார் திருமொழியையும் ஒரு சிறிய விலகல் என்று சுட்டலாம்.