திரளின் மனநிலைகள்
பாவனைகளும் தந்திரங்களும் நெரிசலில் 42 பேரின் குரூர மரணம் என்பது நடந்த உண்மை. காரணியாக இருந்த அரசியல் கட்சி த.வெ.கழகம். பாதிப்பைப் பற்றிப் பேசுவதை அந்தக் கட்சி தொடர்ந்து தவிர்க்கிறது. தவிர்ப்பதன் மூலம், விளக்கம் சொல்லும் இடத்தில் அரசை நிறுத்தித் தப்பித்துக் கொள்ள நினைக்கிறது. பாதிப்பைப் பற்றிப் பேசத்தூண்டும் ஊடகச் சந்திப்புகள் நடக்காமல் பார்த்துக்கொள்கிறார்கள். அரசும் தயக்கம் காட்டிக்கொண்டே தான் இருக்கிறது.