இடுகைகள்

புதிய வெளிகளில் விரியும் விவாதங்கள்

படம்
 ஆ .சி. கந்தராஜாவின் 'ஒரு அகதியின் பேர்ளின் வாசல்' நாவலை வாசித்த போது போலந்தில் இருந்த இரண்டாண்டுக் காலத்துக் காட்சிகள் எனக்குள் திரும்பவும் படமாக விரிந்தன.

ஜெயமோகன் உரை- சில குறிப்புகள்

படம்
  கோவை புத்தகத்திருவிழாவில் ஜெயமோகன் வழங்கிய ஒருமணி நேர உரையைச் சுருதி தொலைக்காட்சியின் வழியாகக் கேட்கும் வாய்ப்புக் கிடைத்தது. ‘ என்றும் இனிக்கும்’ போன்ற அடைமொழியோடெல்லாம் அவர் தலைப்புகள் தருவதில்லை. ஆனால் புத்தகத்திருவிழா போன்ற பெருந்திரளுக்குப் பேசவேண்டும் என்று நினைக்கும்போது ‘மானே! தேனே!!’ என்றெல்லாம் போட்டுத்தான் பேசவேண்டிய நெருக்கடியிலிருந்து தப்பிக்க முடியாது.

நீளும் வாரக்கடைசியில் நெடும் பயணங்கள் – 1

படம்
ஒவ்வொரு வாரக்கடைசியிலும் ஒரு பெருநகரம் பார்த்தல் என்னும் திட்டத்தில் டல்லாஸ் நகரிலிருந்து போய்த்திரும்புதல் அல்லது ஒருநாள் தங்கித் திரும்பிவிடும் வகையில் பயணங்களைத் திட்டமிட்டோம். அதன்படி ஒருநாள் பயணமாக ஒக்கலகாமா போய்வந்த து முதல் பயணம். அடுத்த பயணங்களான ஆஸ்டின், சான் அண்டனியோ, ஹூஸ்டன் என்பனவெல்லாம் இருநாள் பயணங்களாக அமைந்தன. வேலை நாட்களில் மாலை நேரச்சிற்றுலாவாக டல்லஸ் நகரங்களைப் பார்க்க முடிந்தது.

ஆற்றுகைப் பனுவல் என்னும் தேர்ச்சி

படம்
Antonin Artaud: The Insurgent, A Play By Charu Nivedita (in Tamil) என ஆங்கிலத்தில் தலைப்பிட்டுள்ள சாரு நிவேதிதாவின் நாடகப்பனுவல் வாசிக்கக் கிடைத்தது. ஆங்கிலத்தில் வைத்துள்ள இந்தத் தலைப்பை ‘அந்த்தோனின் ஆர்த்தோ: ஒரு கிளர்ச்சிக்காரனின் உடல்’  எனத் தமிழாக்கிக் கொண்டேன். அப்பனுவல் நாடக எழுத்தாளர் ஒருவரின் எழுத்துப் பனுவலாக இல்லாமல், ‘நிகழ்த்தவிருக்கும் அரங்கை மனதில் கொண்டு முழுமையான ஆற்றுகைப்பனுவலாக -டைரக்டோரியல் ஸ்கிரிப்டாக – எழுதப் பெற்றிருக்கிறது என்பது முதல் வாசிப்பிலேயே தோன்றியது. பனுவலை மேடையேற்றத் தயாராகும் இயக்குநர் சாரு தந்துள்ள குறிப்புகளைப் பின்பற்றிக் காட்சிக் கோர்வைகளையும் இசைப்பின்னணி, ஒளிமையமைப்பு போன்றவற்றையும் செய்தால் போதும். பார்வையாளர்களுக்கு முழுமையான – கொண்டாட்டமான நிகழ்வைப் பார்த்த நிறைவைத் தந்துவிட முடியும். அத்தனைக் குறிப்புகளையும் சாருவின் பனுவல் தனக்குள் கொண்டிருக்கிறது. கவிதை, கதை ஆகிய இரண்டும் அதன் நுகர்வோரான வாசகர்களிட த்தில் தனியாக – அந்தரங்கமாக உறவுகொள்ளும் தொடர்பியலைக் கொண்டவை. ஆனால் நாடக எழுத்து அதன் நுகர்வோரான பார்வையாளர்களிடம் நேரடியாகத் தொடர்பு கொள...

ஹூஸ்டன்: தமிழ் இருக்கையும் நாசாவும்..

படம்
டெக்சாஸ் மாநிலத்தில் பார்க்கவேண்டிய பெருநகரங்களில் ஒன்றாக ஹூஸ்டன் இருக்கிறது. எங்கள் பயணத்திட்டத்தில் அந்நகரைப் பார்க்கும் தேதியைக் குறித்து வைத்திருந்தோம். பக்கத்து மாநிலமான ஒக்லகாமாவிற்கு அடுத்துப் போகும் ஊராக ஹூஸ்டனே இருந்தது.காரணம் அங்கிருக்கும் நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தைப் பார்ப்பது. பேரன் ஹர்ஷித் நந்தாவின் இலக்காக இருப்பது வான்வெளி சார்ந்த படிப்பும் பயணமும். சிறுவயது முதலே வான்வெளி குறித்து வாசிப்பதும் விண்ணில் பறக்கும் விமானங்கள், ராக்கெட்டுகள், விண்கலங்கள் போன்றவற்றையும் அவற்றை அனுப்பும் நிலையங்களையும் இணைத்துக்கட்டும் விளையாட்டில் ஆர்வமாய் இருப்பான். அவனது பிறந்தநாளுக்கு வாங்கித்தந்த பரிசுப்பொருட்கள் பெரும்பாலும் ‘லெஹோ’ சேர்மானப் பாகங்களாகவே இருக்கும்.