இடுகைகள்

பழமலையும் சந்ருவும்-சந்திப்பும் நினைவுகளும்

படம்
முகநூலின் வருகைக்குப் பின்னர் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் திருப்பும் பக்கங்களெல்லாம் பார்க்கக் கிடைக்கின்றன. நண்பர்களுக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கும் ஒருவர் மாற்றி ஒருவர் சொல்லிக்கொள்ளும் வாழ்த்துகளும் கேட்கின்றன. அதேபோல் நண்பர்களின் சந்திப்புகளும் படங்களாக விரிகின்றன. அண்மையில் கவி. பழமலய்யைச் சந்திக்க நேர்ந்தது. ஓவியர் சந்ருவிற்குப் பார்க்காமலேயே வாழ்த்துச் சொல்ல முடிந்தது.

தி.சு.நடராசனின் திறனாய்வுப் பார்வைகள் :தமிழ் அழகியல், தமிழகத்தில் வைதீக சமயம்

படம்
தமிழ் அழகியல்: மரபும் கோட்பாடும் பேரா. தி.சு. நடராசனின் எழுத்துகள் ஒவ்வொன்றும் வாசிக்கப்பட வேண்டியவை. அவரது மாணவராக அவற்றை வாசித்து அவரோடு வாசித்து விவாதித்துள்ளேன். குறிப்பான பொருண்மையில் எழுதப்பட்ட நூல்களைத் தாண்டி இரண்டு நூல்களை ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டும் எனச் சொல்வேன். அவை  1. தமிழ் அழகியல்: மரபும் கோட்பாடும்  2. தமிழகத்தில் வைதீக சமயம்வரலாறும் வக்கணைகளும் இவ்விரு நூல்களும் கல்வித்துறை ஆய்வுப்பார்வையைத் தாண்டித் தமிழ் இலக்கியத்தையும் தமிழர்களின் பண்பாட்டு வரலாற்றையும் திறனாய்வுக் கண்ணோட்டத்தோடு பார்ப்பதற்கும் எழுதுவதற்குமான    பார்வையைத் தரவல்லன.  

திறனாய்வு அணுகுமுறைகள் என்ன செய்கின்றன

பனுவல், வாசிப்பு,  திறனாய்வுப்பார்வை, திறன்கள், உள்ளடக்கக் கூறுகள், வடிவக்கூறுகள், வெளிப்பாட்டுநிலை, விளக்கங்கள், விவாதங்கள், முடிவுகள், வழிகாட்டல்கள், கலைஞர்களை உருவாக்குதல், மனிதத்தன்னிலைகளை மாற்றுதல் எனத் திறனாய்வு அணுகுமுறைகளுக்கு ஒரு சங்கிலித்தொடர் வினைகள் இருக்கின்றன. இத்தொடர் வினைகளைப் பின்வரும் திறனாய்வு அணுகுமுறைகள்:  மார்க்சியத்திறனாய்வு அமைப்பியல் திறனாய்வு பெண்ணியத்திறனாய்வு தலித்தியத்திறனாய்வு பின் காலனியத்திறனாய்வு எவ்வாறு கையாளுகின்றன என்பதை மட்டும் இங்கே விளக்கலாம்.

திலீப்குமாருக்கு விருது

படம்
இதழியலாளர், நாடகவியலாளர், அரசியல் விமரிசகர் மற்றும் செயல்பாட்டாளர் நண்பர் ஞாநியின் பெயரில் விருதொன்றை நிறுவியுள்ளது மாற்று நாடக இயக்கம்.. பரிக்‌ஷா ஞாநி நினைவு விருதினைப் பெற்ற முதல் ஆளுமை நாடக எழுத்தாளர் எஸ்.எம்.ஏ. ராம். அந்த விழா மேடையில் நானும் இருந்தேன். விருதினை வழங்கும் நிகழ்வாகத் திருப்பத்தூர் மாற்று நாடக இயக்கத்தின் வருடாந்திர நாடகவிழா தெரிவுசெய்யப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டுக்குரிய விருதாளராக சிறுகதையாசிரியர், மொழிபெயர்ப்பாளர் திலீப்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நான் அவரது இரண்டு கதைகளை நாடகமாக்கியவன் என்ற வகையில் அவருக்கு வாழ்த்துகள் சொல்கிறேன்.

இரண்டு தொடர் ஓட்டக்காரர்கள் - ஜெயமோகனும் அபிலாஷும்

படம்
அபிலாஷின் பத்தி எழுத்துகள் கல்விப்புலப்பார்வையையும் விமரிசன நோக்கையும் சம அளவில் கலந்து எழுதும் அவரது கவனம்பட்டு எழுத்துகளாக மாறியதில் குறிப்பிட வேண்டியனவாக இருப்பனவற்றை உயிர்மை பதிப்பகம் நூல்களாக மாற்றித் தந்துள்ளது. அவை எழுதப்பட்டபோது வாசித்தவைதான் என்றாலும் பின்வரும் நூல்களைப் புத்தகச் சந்தையில் வாங்கி மொத்தமாக வாங்கிப்படித்தேன்.