இடுகைகள்

தமிழ் மரபிலிருந்து விமரிசனப்பார்வையை உருவாக்கவேண்டும்

படம்
யோகி: தமிழ் இலக்கியச்சூழலில் இலக்கியத்தின்அடைவு நிலையை, தமிழ்நாட்டு இலக்கியம்தான் முடிவுசெய்கிறது. இப்படியிருக்கையில் புலம்பெயர் இலக்கியத்தை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?மலேசியா-சிங்கப்பூர் இலக்கியம் குறித்தும் உங்கள் அபிப்பிராயம் என்ன?

உலகப்பார்வையாளர்களுக்கான தமிழ் அரங்கநிகழ்வு: சக்திக்கூத்து:

படம்
‘எதிர்பார்ப்பு’ என்ற சொல்லையும் ‘முன்முடிவு’ என்ற சொல்லையும் ஒரே அர்த்தம் கொண்ட சொற்களாக நினைப்பதில்லை. "எந்தவித எதிர்பார்ப்புகளு மற்று ஒரு கலைப்படைப்பிற்குள் நுழையவேண்டும்; கலைநிகழ்வைக் காணவேண்டும்” என்று சொல்லப்படும்போதெல்லாம் அது சாத்தியமா? என்ற கேள்விகள் எனக்குள் எழுந்துகொண்டே இருக்கும். எழுத்துசார்ந்த படைப்பாயினும்சரி, அரங்கநிகழ்வாக இருந்தாலும்சரி வாசகர் அல்லது பார்வையாளர் என்பவர் சில எதிர்பார்ப்புகளோடுதான் நுழைகின்றார். நான் ப்ரசன்னா ராமசுவாமியின் சக்திக்கூத்தைக் காணச் சில எதிர்பார்ப்புகளோடு தான் நுழைந்தேன். என்னைப்போலவே பார்வையாளர்கள் ஒவ்வொரு வருக்கும் ஒவ்வொரு எதிர்பார்ப்பு இருந்திருக்கக் கூடும்.

இச்சையைத் தவிர்க்கும் புனிதப் பசுக்கள் :எஸ்.செந்தில்குமாரின் புத்தன் சொல்லாத பதில்.

படம்
மூன்றாவதாகவே உயிர்மையில் வந்த அந்தக் கதையைப் படித்தேன்.ஆகஸ்டு உயிர்மையில் வந்துள்ள யுவன் சந்திரசேகரின் கதையும், ஆத்மார்த்தியின் கதையையும் வாசித்தபின்பு கடைசியாகத் தான் எஸ். செந்தில்குமாரின் அந்தக் கதையை - புத்தன் சொல்லாத பதில் *** -படித்தேன்.

நிலவோடு கோபம்

அதுதான் நாங்கள் இருவரும் அமர்ந்து கதைபேசிக் கலவி செய்து பிரியும் இடம். ஆனால் அந்த இடத்தை தன் நிழலால் நிரப்பியிருக்கிறதே அந்த மரம். தன் உயரத்தைவிட நீளமாக நிழல் பரப்பியிருக்கும் அந்த மரம் என்ன மரமாக இருக்கும்? கொன்றை?  புங்கை? புன்னை? வேங்கை?

ஒரு சொம்பின் கதை

“ ஏய்! என்னாச்சு.. ரொம்ப யோசிச்சுக்கிட்டு இருக்கிறமாதிரி தெரியுது. ஓ.. திரும்பவும் அதே நினைவு தானா? பித்தளைச் சொம்பு கண்ணில பட்டுவிடக்கூடாதே உனக்கு”.