இடுகைகள்

ஊடகவெளி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தமிழ்ச்சினிமா அரசியலான கதை

படம்
”கோயில் வேண்டாம் என்று சொல்லவில்லை; கோயில் கொடியவர்களின் கூடாரம் ஆகி விடக் கூடாது என்று தான் சொல்கிறேன்” எனப் பராசக்தியில் குணசேகரனை (சிவாஜி) ஆவேச வசனம் பேச வைத்தததின் மூலம், தமிழக அரசியலோடு நேரடித் தொடர்பு கொண்டது தமிழ்ச் சினிமா. அந்தவகையில் முதற்காரணம் மு.கருணாநிதிதான். அன்று முதல் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றப் பயன்படும் வெற்றிகரமான ஆயுதமாகத் தமிழ்ச் சினிமா தமிழக அரசியலின் இணையாகவே கருதப்படுகிறது.

நீயா நானாவில் அன்னா ஹசாரேயும் நானும்

படம்
விஜய் தொலைக்காட்சியின் நீயா நானாவில் தொழில் நுட்பக் கல்வி X சமூக அறிவியல் கல்வி என்ற தலைப்பிலான விவாதத்தின் விருந்தினராக அழைக்கப்பட்ட நான் அன்னா ஹசாரேவின் ஜன் லோக்பால் மசோதாவைப் பற்றிய விவாதத்திலும் கலந்து கொள்ள நேர்ந்ததைத் தற்செயல் நிகழ்வு என்று தான் சொல்ல வேண்டும்.

சின்னத்திரைகளின் வண்ணக்கோலங்கள்

படம்
வாசிப்பதற்கு முன் ஒரு குறிப்பு இந்தக் கட்டுரை 2006 இல் எழுதப்பட்டது. ஆனால் இப்போதும் இக்கட்டுரை விவாதிக்கும் எதுவும் மாறிவிடவில்லை. நிகழ்ச்சிகளின் பெயர்கள் மட்டும் மாறியிருக்கின்றன. இப்போது தொலைக்காட்சிகளில் இடம் பெறும் நிகழ்ச்சிகளின் பெயர்களை அந்த இடத்தில் மாற்றிப் போட்டு நீங்கள் வாசித்துக் கொள்ளலாம். இனிக் கட்டுரைக்குப் போகலாம்...

திரள் மக்கள் ஊடகங்களும் பரப்பியல் வாதமும்..

நமது காலம் ஊடகங்களின் காலம். பொருளாதார அடித்தளத்தின் பேரால் சமூகக்கட்டமைப்பை வரையறை செய்யும் மார்க்சியச் சமூகவியலாளர்கள் கூட 2000- க்கு முன்னும் பின்னுமான இருபதாண்டுகாலச் சமூகக் கட்டமைப்பைத் தகவல் சமூகம் (Information society) என்றே வரையறை செய்கின்றனர் . நகரம் மற்றும் பெருநகர வாசிகள் ஊடகவலைப் பின்னலுக்குள் தன் விருப்பத்தோடு வந்து சேர்ந்து விட்டனர். கிராமம் மற்றும் சிறுநகரவாசிகள் அதன் பரப்பை நோக்கி இழுக்கப்படுகிறோம் என்பதை அறியாமலேயே நுழைந்து கொண்டிருக்கின்றனர்.

உலகமயம் குறித்த முதல் விவாதம்: எதிரெதிர்த்திசைகளில்...

விஜய் தொலைக்காட்சி அலைவரிசையின் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்று நீயா.? நானா..? அத்துடன் தமிழ் தொலைக்காட்சி அலைவரிசைகளில் இடம் பெறும் விவாத நிகழ்ச்சிகளில் முதல் இடத்தில் இருக்கும் நிகழ்ச்சி என்றும் ஊடகக் கருத்துக் கணிப்புகள் சொல்கின்றன.சமூகத்தின் பல தரப்பட்ட மனிதர்களும் பங்கேற்க வாய்ப்பளிக்கும் தன்மையுடன் கூடிய பாவனை அதற்கு உண்டு. அத்துடன், சமூகத்தின் பொதுப்புத்திக்குள் உறையும் பல்வேறு கருத்துக்களை சரி அல்லது தவறு என எதிரெதிராக அணி பிரித்து நிறுத்தி வைத்து விவாதங்களை நடத்தி இறுதியில் ஒரு தீர்வைச் சொல்லி விடும் தொலைக்காட்சிப் பட்டிமன்றங்கள் போன்றதல்ல என்பதுதான் அதன் பலம். 

ஊடக அதிகாரம்

தமிழர்களாகிய நாம் புத்தாண்டு, தீபாவளி, பொங்கல் போன்ற விழா நாள் கொண்டாட்டங்களைத் தீர்மானிக்கும் சக்தியாகத் தொலைக்காட்சியைப் பெட்டியை ஆக்கிப் பல வருடங்களாகி விட்டன. தொலைக்காட்சிப் பெட்டிகளோ விழாநாள் மனிதர்களாகத் திரைப்பட நட்சத்திரங்களை முன்னிறுத்திக் கொண்டிருக்கின்றன. தீபாவளி என்றால் புத்தாடைகள் அணிந்து வேட்டுப் போடுகிறார்கள்; புத்தாண்டு என்றால் கேக் வெட்டிப் பக்கத்தில் இருப்பவர்களுக்கு ஊட்டி விட்டுத் தாங்களும் சாப்பிடுகிறார்கள். பொங்கல் என்றால் பட்டு வேட்டி கட்டிக் கரும்பு தின்கிறார்கள்; முடிந்தால் பக்கத்திலிருக்கும் கிராமத்திற்கும் சென்று வயல் வெளிகளைச் சுத்தியும் வருகிறார்கள்.

கலைக்கப்படும் மௌனங்கள்

ஞாயிற்றுக்கிழமைகளில் வெளியூர் எதற்கும் போகாமல் வீட்டில் இருந்தால் அந்த நிகழ்ச்சியைப் பார்க்கத் தவறுவதில்லை. செய்து கொண்டிருக்கும் வேலை முக்கியமானது என்ற போதும் அதை நிறுத்தி விட்டுப் பார்க்கத் தூண்டும் நிகழ்ச்சியாக இருக்கிறது நீயா? நானா? வெளியூர் போனதால் பார்க்கத் தவறியிருந்தால் மறு ஒளிபரப்பின் போதாவது பார்த்து விட வேண்டும் என்றே விரும்புகிறேன்.

புத்திசாலித்தனம் + கோமாளித்தனம் = பட்டிமன்ற நடுவர்கள்

படம்
தொலைக்காட்சிகளில் பண்டிகை நாட்களுக்குச் சிறப்பு ஒளிபரப்பைத் தொடங்கிய பிறகு, சடங்குகளுள் ஒன்றாகப் பட்டிமன்றம் ஆகிவிட்டது. தனியார் தொலைக் காட்சி அலைவரிசைகளுக்குச் சுலபமாகத் தயாரிக்கப்படும் நிகழ்ச்சிகளுள் பட்டிமன்றமும் ஒன்று. விடுமுறையாகவும் இருந்து, விழா நாளாகவும் ஆகிவிட்டால் ‘பட்டிமன்றம்‘ ஒன்று நம் வீட்டிற்குள் வந்து விடுகின்றது. விழா நாட்களில் தொலைக் காட்சியைத் தொடுவதில்லையென விரதம் பூண்டிருப்பவா்களுக்கு மட்டுமே பட்டிமன்றம் என்றால் என்ன? பட்டிமன்ற நடுவர்களென பிரசித்தி பெற்றுள்ள சாலமன் பாப்பையா, திண்டுக்கல் லியோனி என்பவா்கள் யார்? எனறு சொல்ல வேண்டும்.

அங்கீகாரத்தின் அளவுகோல்

படம்
கிணற்றிலிருந்து வாளியில் நீரிறைத்து பாத்திரத்தில் ஊற்றும் சலசலப்பு ஓசையுடன் தொடங்கி , அரிதாரத்தெ பூசிக்கொள்ள ஆசை.. நான்.. அடவு கட்டி ஆட்டம் போட ஆசை .. என்ற வரிகளாக விரியும் அந்தத் திரைப்படப் பாடலை நான் திரும்பத் திரும்பக் கேட்பதுண்டு. இசையமைப்பாளர் இளையராஜா மன விருப்பத்துடன் இசை அமைத்த படங்களுள் ஒன்றான அவதாரம் படத்தில் இடம் பெற்றுள்ள இந்தப் பாடல் செவி நுகர்கனிகளில் ஒன்று. இந்தப் பாடல் என்று இல்லை; அந்தப் படத்தின் எல்லாப் பாடல்களுமே திரும்பத் திரும்பக் கேட்கத்தக்க பாடல்கள் என்பது எனது கணிப்பு. இசையின் கோலங்களைப் பல வண்ணங்களில் தீட்டிப் பார்த்த கலைஞனின் வெளிப்பாடு என்று கூடச் சொல்லலாம். ஏதாவது சிக்கலில் மனம் அலையும் போதெல்லாம் அந்தப் படத்தின் பாடல்களைப் போட்டுக் கேட்டுக் கொண்டிருப்பது எனது வாடிக்கை.

விளம்பரத்தூதர்களின் முகங்கள்.

படம்
பள்ளிக் கூட வாகனத்தில் கண்ணயர்ந்தபடி அசைந்து அசைந்து செல்லும் அந்தச் சின்னப் பெண்ணைக் காட்டும் அந்த விளம்பரத்தை நீங்கள் பார்த்திருப்பீர்கள். பார்க்கவில்லை என்றால் தினந்தோறும் பரபரப்புடன் நடந்து கொண்டிருக்கும் ஐபிஎல் இருபதுக்கு /20 கிரிக்கெட் ஆட்டங்களைப் பாருங்கள்.

பரபரப்பின் விளைவுகள்

வாழ்க்கையின் திருப்புமுனை ஒவ்வொருவருக்கும் எப்படி வந்து சேரும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. தற்செயலாக நடந்த ஒரு வினையோ அல்லது சொன்ன ஒரு வாக்கியமோ கூட ஒருவரைப் பிரபலமாக்கி விடும். அதன் மூலம் அவரது வாழ்க்கை ஓட்டம் பெரிய திருப்பத்தில் பயணமாகி விடும். ஏற்படும் திருப்பம் ஒரு மனிதனை என்னவாக மாற்றும் என்பதை அதற்குப் பிந்திய வாழ்க்கை தான் வெளிச்சம் போட்டுக் காட்டும். இதற்குப் பல உதாரணங்களை உலக அளவிலும் காட்ட முடியும்; தமிழக அளவிலும் சொல்ல முடியும்.

நகல்களின் பெருக்கம்

நடுத்தர வர்க்கத்தின் ஓய்வுப் பொழுதின் முக்கிய வினையாக இருந்த வாசிப்பு நேரம் தொலைக்காட்சி ஊடகங்களுக்குக் கையளிக்கப் பட்டுச் சில பத்தாண்டுகள் ஆகிவிட்டன. ஒற்றை அலைவரிசையாக இருந்த அரசின் தொலைக் காட்சியோடு பல அலைவரிசைகள் போட்டி போட்ட நிலையில் தொலைக் காட்சிப் பெட்டிகளை இயக்கும் விதமே மாறி விட்டதைக் கவனித்திருக்கலாம். உட்கார்ந்த இடத்திலிருந்தே தொடு உணர்வு வழியே அலை வரிசைகளை மாற்றிக் கொள்ளும் வசதிகள் கொண்ட பெட்டிகள் மட்டுமே நடுத்தர வர்க்கத்தின் விருப்பங்கள். இலவசமாக அரசு தந்த 22 அங்குல நீளம் கொண்ட வண்ண தொலைக்காட்சிப் பெட்டியில் கூட இந்த வசதி  இருக்கிறது.ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், உருது எனப் பல மொழிகளில் ஒளிபரப்பாகும் நூற்றுக்கு மேற்பட்ட அலைவரிசைகள் தமிழகப் பரப்பில் வீட்டிற்குள் நுழைகின்றன. அவற்றுள் ஐம்பதுக்கு மேற்பட்ட அலைவரிசைகள் தமிழ் பேசுகின்றன. செய்தி அலைவரிசைகள் தினசரி நான்கந்து வெடிப்புச்செய்திகளை வெடிக்கச்செய்கின்றன. என்றாலும் ஒவ்வொரு அலை வரிசைகளின் நிகழ்ச்சித் தயாரிப்பில் வித்தியாசங்கள் இல்லை.   வேறுபாடுகள் கொண்டவைகளை விரல் விட்டு எண்ணி விடலாம்.

அழிபடும் அந்தரங்கம்

  பிரசாத் என்ற பெயருக்கு முன்னால் ‘கன்னட’ என்ற சொல்லை அவரே சேர்த்து வைத்திருந்தாரா..?அல்லது தமிழ் அச்சு ஊடகங்கள்தான் சேர்த்துச் சொல்கின்றனவா..? என்பது உறுதியாகத் தெரியவில்லை. அந்தப் பெயரைச் சுற்றி எழுப்பப்படும் புனைவுகளுக்கும், எழுதப்படும் கதைகளுக்கும் வண்ணங்கள் வழங்க வேண்டும் என்று என்னிடம் கேட்டால், நான் பரிந்துரை செய்வன; பச்சையும் நீலமும் கலந்த செஞ்சுடர் இருட்டு என்பது தான்.செஞ்சுடர் இருட்டாகப் பரவி விரியும் காட்சிகளில் மிளிரும் பச்சை வண்ணமும் நீல வண்ணமும் உண்டாக்கும் உணர்வுகள் எப்படிப் பட்டவை; அவை பார்வையாளர்¢களின் மனத்தில் எழுப்பும் உணர்வுத் தூண்டல்கள் என்ன வகையானவை என்பதை விளக்குவதற்கு புள்ளியியல் விவரங்கள் தேவையில்லை. வண்ணங்கள் பற்றிய பாரம்பரிய அறிவே கூடப் போதும்¢. ஆனால் காட்சிச் சாதனங்களுக்குச் சற்றும் குறையாமல் எழுத்தும் உணர்வுத் தூண்டலைச் செய்யும் வல்லமை உடையன என்பதைத் தர்க்க பூர்வமாக விளக்க வேண்டும் என்றால் புள்ளிவிவர ஆய்வொன்றை மேற்கொள்ளத் தான் வேண்டும். அந்த ஆய்வு வெறும் புள்ளியியல் துறையோடு நின்று விடாமல், மருத்துவ உளவியல் துறையையும் இணைத்துக் கொண்ட புள்ளியியல் ஆய்வாக இருந

அடுத்தவன் கண்ணில் இருக்கும் துரும்பு..?

படம்
  இந்திய ஊடக வெளிகள் கடும் போட்டியின் களன்களாக உள்ளன. சேரி, ஊர், கிராமம், நகரம், மாநகரம் என எல்லா வெளிகளையும் கடந்த காட்சிகளை விரித்துக் காட்டும் தொலைக்காட்சி ஊடகங்கள் இந்திய யதார்த்தத்தைக் கண்டு கொண்டனவாக இல்லை. பல நேரங்களில் இந்தியச் சமூகத்தில் நிலவும் எல்லாவகை வேறுபாடுகளையும் புறந்தள்ளி விடும் சித்திரங்களையே அவை தீட்டிக் காட்டுகின்றன. பெரும்பான்மை மக்களின் யதார்த்த வாழ்க்கைக்குப் புறம்பான விவாதங்களை முன்னெடுக்கும் ஆங்கிலச் செய்தி அலைவரிசைகளின்¢ உள்நோக்கத்தைப் புரிந்து கொள்ளாத நிலைதான் வட்டார மொழி அலைவரிசை களிடம் காணப்படுகின்றன. 2007, ஜனவரியில் அதிகம் தோன்றிய பிம்பங்கள் யார் ? என்று கேள்வியைக் கேட்டு ஒரு குறுஞ்செய்திப் போட்டி நடத்தினால் முதலிடத்தைப் பிடிப்பதில் காதல் ஜோடி ஒன்றிற்¢கும், ஒரு அபலைப் பெண்ணுக்கும் (?) நிச்சயம் கடும் போட்டி இருக்கும். 

ஊடகங்களும் அரசியலும்: மறத்தல் கொடியது ; மறக்கடித்தல் அதனினும் கொடியது

  தொலைக் காட்சி செய்தி அலைவரிசைகளின் கவனத்திலிருந்து கர்நாடகம் விலகிச் சென்று விட்டது. அம் மாநிலத்தில் இரண்டு மாதத்திற்குள் இரண்டாவது தடவையாகக் குடியரசுத் தலைவர் ஆட்சி அமுல் செய்யப்பட்டு விட்டது. ஜனாதிபதி ஆட்சிக் காலத்தில் அரசியல்¢ கட்சிகள் செய்த சித்து விளையாட்டுக்கள் எல்லாம் மறந்து போகும். திரும்பவும் தேர்தல் வரும் போது கட்சிகளும் தலைவர்களும் புதிய கோஷங்களோடு வருவார்கள். ஊடகங்களும் பழையனவற்றை மறந்து விட்டு புதிய கோஷங்களின் சாதக பாதகங்களை அலசி ஆராய்ந்து மக்கள் முன்னால் அவர்களைக் கொண்டு போய்ச் சேர்க்கும் வேலையைச் செய்யத் தயாராக இருக்கின்றன. இப்போது ஊடகங்களின் பார்வை கர்நாடகத்திலிருந்து மேற்கு வங்காள மாநிலத்தின் பக்கம் திசை திரும்பி விட்டது.

அடையாள அரசியல்: கிரிக்கெட் விளையாட்டை முன்வைத்துச் சில பரிசீலனைகள்

படம்
இங்கே உருவாக்கப்பட்டுள்ள தேசியப் பெருமிதங்கள் என்னும் அடையாள அரசியலைப் பேச நினைக்கும் இந்தக் கட்டுரை, கொஞ்சம் பின்னோக்கிச் சென்று எட்டாவது உலகப் போட்டிகளில் நேரலைகளைப் பார்க்கச் சொல்கிறது. அங்கிருந்து இன்று வரை நீளும் காட்சிகளை முன்வைத்துப் பேசுகிறது எட்டாவது உலக கோப்பைக் கிரிக்கெட் போட்டியின் இறுதியில் நல்ல வேளையாக சச்சின் டெண்டுல்கா் சதம் அடிக்கவில்லை. ஒற்றை இலக்க ரன்களிலேயே வெளியேறிவிட்டார். அவா் மட்டும் சதம் அடித்திருந்தால் அடுத்து கங்குலிக்கும் யுவராஜ் சிங்கிற்கும் அந்த உற்சாகம் தொற்றி இருக்கும். ஆஸ்திரேலியா அடித்திருந்த அந்த வெற்றி இலக்கை - 358 ரன்களை - இந்திய வீரா்கள் எட்டிப்பிடிக்கவும், வெற்றிக் கோப்பையைத் தட்டிப் பறிக்கவும் முயற்சி செய்திருப்பார்கள். முயற்சிக்கான பலன் கிடைக்கும் பட்சத்தில் டெண்டுல்கர் ‘பாரத ரத்னா‘ ஆகியிருப்பார். அரசாங்கங்களும் அவருக்கு வீடுகளையும் நிலங்களையும் வாரி இறைத்திருக்கும். கங்குலிக்கும் மற்றவா்களுக்கும் கூட அரசுகள் இப்படி நிறையத் தந்திருக்கலாம். பிரபலத்துவமும், கிளறிவிடப்பட்ட வெகுஜன உணா்ச்சிப் பெருக்கமும், இப்படி நிறையச் சாதித்திருக்கும். ஆனால், இந்தி

அழித்து எழுதும் ஆற்றல்-

கடந்த இரண்டு மாதகாலமாகத் தினசரி ஒரு நூறு தடவைக்கும் குறையாமல் அந்தச் சொல் என் காதில் விழுந்து கொண்டே இருக்கிறது. காதில் விழும் சொல்லாக இருந்த நிலை மாறி கண்ணில் படும் பிம்பங்களாகத் தொலைக்காட்சி அலைவரிசைகளில் கடந்த ஒரு மாதமாக வந்து கொண்டே இருக்கிறது. என் முன்னால் போகும் நகர்ப் பேருந்தின் பின்புறத்தில் அந்தப் பெயரையும் , அதன் அருகில் பிரபல நடிகர் ஒருவரின் ஒப்பனையோடு கூடிய முகத்தையும்¢ கடந்த நான்கைந்து மாதங்களாகத் தினசரி சில பத்துத் தடவையாவது பார்த்துக் கொண்டு தான் இருக்கிறேன்.

இவை மொழிவிளையாட்டுகள் அல்ல; போர்

படம்
என் கையிலிருக்கும் செல்போன் [Cell phone] கருவிக்குத் தமிழ்ச் சொல்லைக் கண்டு பிடிக்கும் முயற்சியை அநேகமாகக் கைவிட வேண்டியதுதான் என்று தோன்றுகிறது. இரண்டு வருடங்களுக்கு முன்னாள் செல்போன் ஓன்றை வாங்கியவுடன் கைபேசி என மொழி பெயர்த்துப் பயன்படுத்திக் கொண்டிருந்தேன். இந்த மொழி பெயர்ப்பு அந்தக் கருவியின் இருப்பிடத்தை வைத்துச் செய்த மொழி பெயர்ப்பு. ஏற்கெனவே இருந்த வீட்டுத் தொலை பேசியையும் கையில் வைத்துத் தான் பேச வேண்டும் என்றாலும், இருந்த இடத்தை விட்டு வேறு எங்கும் எடுத்துச் செல்ல முடியாது. ஆனால் செல்போனைக் கையோடு எங்கும் எடுத்துச் செல்லலாம் என்பதால் ‘கைபேசி’ என்ற பெயர்ப்பு சரியெனத் தோன்றியது. நண்பர் ஒருவர் அலைபேசி எனத் தனது முகவரி அட்டையில் அச்சிட்டிருந்ததைப் பார்த்தேன்.அலையும் இடங் களுக்கெல்லாம் தகவலைக் கொண்டு வந்து சேர்க்கிறது என்பதாலும், அங்கிருந்த படியே தகவல்களை அனுப்ப முடிகிறது என்பதாலும் அலைபேசி என்ற மொழி பெயர்ப்பு சரியாக இருக்கும் எனத் தோன்றியது. ஆனால், செல்போனின் பயன்பாடுகளைப் பார்த்தால் அந்த மொழி பெயர்ப்பும் போதாது என்று தான் தோன்று கிறது. தனது குறுஞ்செய்திகளின் வழியாகத் தந்தியின் வே

தேசந்தழுவிய களியாட்டங்கள்

உலகக் கோப்பைக் கிரிக்கெட் என்பது வெறும் விளையாட்டு மட்டுமல்ல. அதில் பங்குபெறுபவா்கள் விளையாட்டு வீரா்களும் நடுவா்களும் மட்டுமல்ல. முடிவுகளைத் தரப்போவது வீரா்களின் திறமைகளும் விதிகளும் நடைமுறைகளும் மட்டுமல்ல. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளின் பின்னணியில் மட்டுமல்ல, மொத்தக் கிரிக்கெட் விளையாட்டின் பின்னணியில் இருப்பது வியாபாரம் - சர்வதேச நவீன வியாபாரம் என்பதை ஒவ்வொரு ஐந்து நிமிடமும் உணா்ந்து கொண்டேதான் கிரிக்கெட் பார்க்கப்படுகிறது. உணா்த்தியபடியேதான் கிரிக்கெட் காண்பிக்கப்படுகிறது.