விழிப்புணர்வு சினிமாக்கள்- சில பரிமாணங்கள்

 Fire - ஆங்கிலத்தில் பெயர் வைக்கப்பட்டு தீபா மேத்தா இயக்கிய படம். 1996 இல் வந்த அந்தப் படத்தின் பெயரைத் தாங்கி தமிழில் இப்போது ஒரு சினிமா வந்துள்ளது. பிப்ரவரி மாதத்தில் வந்த அந்த சினிமாவிற்கு அரங்குகளில் நல்ல கூட்டம் . பாண்டிச்சேரி போயிருந்தபோது பார்க்க நினைத்தும் டிக்கெட் கிடைக்கவில்லை. காரணம் முதல் தீயின் காட்சிகளை நினைவூட்டும் காட்சிகள் இதிலும் இருக்க வாய்ப்புண்டு என்பதுபோலச் சுவரொட்டிகளும் சமூக ஊடக முன்னோட்டங்களும் இருந்ததைச் சொல்லலாம்.

நெருப்பு, நிலம், நீர் என மும்மைத் தொகுப்பாக தீபா மேத்தா இயக்கிய படவரிசையில் தீ முதல் படம். அதன் மூலக்கதை இந்தியப் புனைகதை ஆசிரியர் இஸ்மத் சுகாயின் சிறுகதை. அந்தச் சினிமாவில் இந்தியத் திரைத்தாரகைகளில் சிறந்த நடிகைகளாகக் கருதப்பட்ட சப்னா ஹாஸ்மியும் நந்திதா தாஸும் நடித்தனர். இயற்கையான உணர்வுகளைக் கட்டுப்படுத்தும் சடங்குகள், சமயநம்பிக்கைகளை விமரிசிக்கும் நோக்கில் எடுக்கப்பட்ட அந்தப்படத்தின் காட்சிகள் காமத்தைத் தூண்டும் நோக்கத்தோடு இருந்தது எனச் சொல்லி அப்போதைய இந்திய அரசாங்கத்தின் தணிக்கைக்குழு தடை செய்தது. அதைவிடவும் அழுத்தமான காமத்தூண்டல் காட்சிகள் இடம் பெற்ற சினிமாக்களைத் தடை செய்யாமல் அனுமதித்த தணிக்கைக் குழு இந்தப்படத்தைத் தடுக்க நினைத்ததற்கு வேறொரு காரணம் இருந்தது. பெண்ணுடல் மீது மோகம் கொள்ளும் இன்னொரு பெண்ணுடல் என்பதான ஒருபால் உறவை இயல்பானதாகத் தீபா மேத்தா காட்டியிருந்தார். அதனாலேயே அந்தத் தடை எனப் பலரும் தணிக்கைக் குழுவினரை விமரிசன செய்து எழுதியது நினைவில் இருக்கிறது. நான் அந்தப் படத்தை ஒரு திரைப்படவிழாவில் பார்த்து எழுதியதும் நினைவில் இருக்கிறது.

தீபா மேத்தாவின் சினிமாவை நினைவூட்டும் விதமாக அதே பெயரை வைத்து, காமத்தைத் தூண்டும் காட்சிகள் நிரம்பிய படம் என்பதை நினைவுபடுத்தியுள்ளார் இயக்குநர். இந்த நெருப்பு (ஃபயர்) சினிமாவை இயக்கிக் கதைசொல்லியாக நடித்துள்ளவர் ஜெ. எஸ். கே. சதீஸ்குமாரே படத்தின் தயாரிப்பாளர். ஒரு குற்றம் எப்படி நடந்தது; காவல் துறை எப்படித்துப்பறிந்தது என்பதுபோலத் திரைக்கதை வடிவம் உருவாக்கப்பட்டுள்ளது. துப்பறியும் காவல் அதிகாரியே சொல்லும்விதமாகக் காட்சிகளும் வசனங்களும் அமைந்துள்ளதால், படத்தின் நோக்கம் விழிப்புணர்வு உண்டாக்குவது என்பதாகப் பாவனை செய்யப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில் அந்தக் காவல் அதிகாரியில் பேச்சுக்குப் பிறகு காட்சிப்படுத்தப்படும் பெரும்பாலான காட்சிகள் ஆண் - பெண் உறவுகளை நிகழ்த்தும் படுக்கையறைக் காட்சிகளே.

உடலியக்க - பிசியோதெரபிஸ்ட் -மருத்துவரால் ஏமாற்றப்படும் பெண்கள் குறித்த கதைநிகழ்வுகள் என்பதால் ஆண் - பெண் உறவுக்காட்சிகளாக இல்லாமல் உடலியக்க மருத்துவக்காட்சிகளாகவே பெண் உடல்களைக் காட்சிப்படுத்தி மலினமாகப் பார்வையாளர்களுக்குத் தீனியாக்கி இருக்கிறது நெருப்பு. சில ஆண்டுகளுக்கு முன்னால் விஜய் தொலைக்காட்சியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அறிமுகமாகிப் பிரபலம் அடைந்த பாலாஜி முருகதாஸ் படத்தின் எதிர்நிலை நாயகப்பாத்திரமான - பிசியோ தெரபி மருத்துவராக நடித்துள்ளார். அதே தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடித்த ரக்‌ஷிதா மகாலெட்சுமியும், சுரேஷ் சக்ரவர்த்தியும் முதன்மையாக பாத்திரங்களில் நடித்துள்ளனர். அவர்கள் அல்லாமல் சாக்‌ஷி அகர்வால், காயற்றி, சாந்தினி போன்ற அதிகம் அறிமுகம் இல்லாத பெண்கள் நடிக்கவைக்கப்பட்டுள்ளனர்.


ஒளிப்பதிவு, ஒளியமைப்பு. காட்சிக்கான கட்டடங்கள், இயற்கைச் சூழல், ஒலிப்பதிவு போன்றவற்றில் துல்லியத்தன்மையுடன் செய்யப்பட்டுள்ள படத்தின் நோக்கம், பெண்களுக்குக் கிடைத்துள்ள சுதந்திரத்தைக் கட்டுப்பாட்டுடன் பயன்படுத்த வேண்டும்; இல்லையென்றால் பாலியல் ரீதியாக ஏமாற்றப்படும் வாய்ப்புகள் நிரம்பியதாக நமது காலம் இருக்கிறது என்று சொல்வதாகச் சினிமா வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் காட்சிகளில் உருவாக்கப்படும் களிப்பூட்டும் தன்மை உண்மையில் ஆண் - பெண் உறவுசார்ந்த காட்சித்துண்டுகளால் நிரப்பப்பட்டுப் பார்வையாளர்களைக் கவரும் நோக்கமே அதிகம் நிறைந்துள்ளது. படத்தின் தயாரிப்பாளரின்/ இயக்குநரின் நோக்கம் விழிப்புணர்வு உண்டாக்குவது என்பது போலத் தோன்றினாலும் வணிக வெற்றிக்குப் பெண்ணுடலைப் பயன்படுத்தும் எதிர்மறை நோக்கம் கொண்ட படம் இந்த நெ

ஒரு குறும்படமும் இன்னொரு நெடும்படமும்
நவம்பர் 26, 2023

தான் சொல்ல நினைக்கும் கருத்துத்தான் முதன்மையானது;சொல்லும் முறை இரண்டாம்பட்சம் தான் என நினைப்பது உங்களைப் பார்வையாளர்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்காது. விழிப்புணர்வு அல்லது செய்தி சொல்லுதல், இயங்கத்தூண்டுதல் என்பன முன்வரும்போது கலையியல் தன்மைக்கும் அதே அளவு முக்கியத்துவம் தரவேண்டும். கலையியல் என்பது வாசிப்பவரை- பார்வையாளரைத் தன்னுள் இணைக்கும் உத்தி என்பதைப் புரிந்துகொண்டால் போதும். நவம்பர் 25 அன்று இரண்டு படங்களும் இதில் கவனம் செலுத்தாத படங்களே..


என்ர மகன் எழிலன் - ஒரு குறும்படம்
 
ஒரு சினிமாவைப் பற்றி எழுதும்போது இன்னொரு சினிமாவைப் பார்க்கும்படி சொல்லி, யாராவது ஒரு படத்தைக் குறிப்பிடுகிறார்கள். சில நேரங்களில் குறும்படங்களின் இணைப்பை அனுப்பி வைக்கிறார்கள். முந்தா நாள் கூழாங்கல் குறித்த பதிவைப் படித்துவிட்டு ஒருவர் அனுப்பிய குறும்பட படத்தின் தலைப்பு: என்ர மகன் எழிலன்.

ஈழப்போரில் காணாமல் போனவர்கள் - காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சில ஆயிரத்துக்கும் மேல் என்கின்றனர். இந்தப் படம் அப்படிக் காணாமல் போன மகன் ஒருவனைத்தேடி அலையும் தந்தை, பைத்தியமாகிப் போன துயரத்தைச் சொல்ல முயன்றுள்ளது. சொல்ல நினைத்ததைச் சொல்லிவிட வேண்டும் என்பதில் இருக்கும் தீவிரம், எப்படிச் சொன்னால் பார்வையாளர்களிம் மனதோடு பேசும் என்பதில் இல்லையோ என்ற எண்ணத்தைத் தூண்டியது.

சத்தியசோதனை: காவல்துறை மீதான விசாரணை

எந்தவொரு அமைப்பின் மீதும் தமிழ்ச்சினிமாவின் - இயக்குநர்களின் பார்வை என்பது மையப்பாத்திரத்தை ஏற்கும் நடிகர்களின் அடையாளம் சார்ந்த ஒன்றாகவே அமைகிறது. ஏனென்றால் இங்கே நடிகர்களுக்காகவே திரைக்கதைகள் உருவாக்கப்படுகின்றன.

குற்றம், நீதி, சட்டம் சார்ந்த அமைப்புகளைத் திரைக்கதையாக்கிக் காட்சிப்படுத்தும் சினிமாக்களும் விலக்கானவை அல்ல.
நாயக நடிகர்கள் காவல்துறை அதிகாரிகளாகவோ, சாதாரணக் காவலர்களாகவோ பாத்திரமேற்கும்போது அந்தப் படங்களின் முடிவு காவல் துறை மக்களின் நண்பன் என்ற கருத்தைத் திணித்துவிட்டுப் படம் முடியும். நாயக நடிகருக்குக் கிடைக்கும் பிம்ப உருவாக்கம், நடிகர் ஏற்ற பாத்திரத்தின் வழியாகக் காவல்துறைக்குப் போய்ச்சேரும். எதிர்நிலையில் வில்லத்தன நடிகர்கள் காவல்துறை சார்ந்த பாத்திரங்களை ஏற்றால், களையெடுக்கப்பட வேண்டிய பெருச்சாளிகளாகக் காட்டிப் படம் முடியும். இருவகைப் படங்களுமே துறையின் தேவையையும் இருப்பையும் கேள்விக்குள்ளாக்குவதற்குத் தனிநபர்களைக் குறித்த - அதிகாரிகளைக் குறித்த பார்வையைப் பார்வையாளர்களுக்குக் கொடுத்துவிட்டு ஒதுங்கிவிடும். தனிநபர்களின் உரிமை, இருப்பு போன்றவற்றைப் பாதுகாக்கவேண்டிய குடிமை அமைப்பாகவும் பொது நடைமுறைகளைக் குலைப்பவர்களைக் கண்டுபிடித்துத் தண்டிக்கவேண்டிய குற்றவியல் நடைமுறைகளைத் தடுக்க வேண்டிய அமைப்பாகவும் இல்லாத காவல் துறையின் உள்ளார்ந்த செயல்பாடுகளின் மீதான விமரிசனம் நமது சினிமா இயக்குநர்களின் அக்கறையாக இருந்ததில்லை.

இந்தப்பொதுப்போக்கிலிருந்து விலகிய படமாக வந்துள்ளது சத்தியசோதனை.
மக்களுக்காக - மக்களின் பாதுகாப்புக்காகவும் இருக்கவேண்டிய காவல் நிலையத்தை, தங்களின் வருமானத்திற்கான ஒன்றாக நிர்வகிக்கும் காவல்துறைப் பணியாளர்கள் மீது கூர்மையான விமரிசனத்தை வைத்துள்ளது சத்தியசோதனை. ஒரு கிராமத்துக் காவல் நிலையத்தை வகைமாதிரியாக்கி, தமிழ்நாட்டு/ இந்தியக் காவல்துறை விமரிசனப்படுத்த எள்ளலும் அங்கதமும் சரியான சொல்முறை என உணர்ந்து அதற்கேற்ப மையப்பாத்திரத்தை ஏற்க பிரேம்ஜியைத் தேர்வு செய்துள்ளார் இயக்குநர் சுரேஷ் சங்கையா.படத்தின் காட்சிகளிலும் நிகழ்ச்சிகளிலும் எல்லாவகையான ஓர்மைகளும் இல்லை; காலப்பிழைகள் உள்ளன. காட்சிகளை உள்வாங்கும் காமிராவின் இடத்திலும் நகர்வு முறையிலும், காட்சிகளை நிரல்படுத்துவதும் போதிய அனுபவமும் பயிற்சியும் படக்குழுவினருக்கு இல்லை என்பதைக் காணமுடிகிறது. இக்குறைகள் பார்வையாளர்களுக்குப் படத்தைக் கொண்டுபோவதில் தடைகளாக அமையக்கூடியன.

தென் தமிழ்நாட்டில் அருப்புக்கோட்டைக்கருகில் உள்ள காவல் நிலையம் என்று சித்திரித்துள்ளதால், கிராமத்துக் காவல் நிலையங்கள்தான் இப்படி என்று எடுத்துக்கொள்ளவேண்டியதில்லை. நகரத்துக் காவல் நிலையங்களில் வேறுவகையான குற்றச்செயல்களும் கண்டுகொள்ளாமல், தங்களைக் காத்துக்கொள்ளும் நடைமுறைகளும் இருக்கவே செய்கின்றன. அதனை மையப்படுத்தினால் நடைமுறையில் இருக்கும் அரசியலையும் அரசியல்வாதிகளையும் நோக்கி நகரவேண்டியதாக இருக்கும். அதனை எண்ணிக் கிராமத்துக் காவல் நிலையம் என்று தெரிவு செய்தார்களோ என்னவோ. அதையெல்லாம் தாண்டிக் காவல் துறையின் இருப்பையும் செயல்பாடுகளையும் கேள்விக்குள்ளாக்க வேண்டும் என்ற எண்ணம் படக்குழுவினருக்கு இருந்துள்ளது என்பதற்காகப் பாராட்டலாம்; படத்தைப் பார்க்கலாம்.

ருப்பு.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இரட்சிப்பின் உடலாக மாற்றப்படும் சீலியின் சரீரம்

மிதக்கும் வெளிகளை எழுதுதல்: நவீன கவிதையின் இரண்டு புதுமுகங்கள்

தொல்காப்பியம்; இலக்கணத்தைத் தாண்டி...