ஆதிக்க மனநிலையை விசாரித்தலும் அகத்தைப் பேசுதலும்
ஆதிக்கமனநிலையை விசாரித்தல்
இப்போது வந்துள்ள தலித் (இதழ்.39/ ஏப்ரல் -மே) இதழில் இரண்டு சிறுகதைகள் அச்சிடப்பட்டுள்ளன. "கெட்டவன்" என்ற கதையை எழுதியவர் அபிமானி. தமிழ்நாட்டின் நெல்லை மாவட்டப் பின்னணியில் எழுதும் எழுத்தாளர். "நழுவல்" என்ற கதையை எழுதியுள்ள இ.இராஜேஸ் கண்ணன், இலங்கையின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். இவர்களின் எழுத்துகளை முன்பே வாசித்திருக்கிறேன். அவர்களது புனைவுகளிலும் கட்டுரை எழுத்துகளிலும் சமகால வாழ்வியலின் சிக்கல்கள் மீது விசாரணைகளும் கேள்விகளும் இருக்கும். இந்த இரண்டு கதைகளிலும் விசாரணைகள் நிகழ்ந்துள்ளன. ஆனால் விசாரிக்கப்படுவதற்குக் கதைக்குள் உருவாக்கப்பட்டுள்ள பாத்திரங்களின் அடையாளங்கள் மூலம் அபிமானியின் கதை தலித்திய கதையாக வெளிப்பட்டுள்ளது. இராஜேஸ்கண்ணனின் கதை வர்க்கப் பார்வைக் கதையாக எழுதப்பட்டுள்ளது. கதையின் நுட்பங்களான சொல்முறை, உரையாடலில் இருக்கவேண்டிய மொழிநடை போன்றவற்றில் கூடுதல் குறைவு போன்றன இருந்தபோதிலும் கதைகள் இரண்டும் விவாதிக்கும் மையம் வழியாகக் கவனம் பெறுவதோடு கதைக்களன்கள் சார்ந்த மனநிலைகளை முன்வைத்துள்ளன.
******
விசாரணை செய்வதற்கு இருதரப்பு தேவைப்படுவது நடைமுறை. நீதிமன்ற விசாரணைகளில் வாதி - பிரதிவாதி என்ற இரு தரப்புகளையும் விசாரித்துத் தீர்ப்பு சொல்ல நீதிமான் இருப்பார். அத்தோடு அவ்விரு தரப்பு நியாயங்களையும் எடுத்துச் சொல்ல அந்தந்த நபர்கள் ஏற்பாடு செய்த வழக்குரைஞர்களும் இருப்பார்கள். இந்தச் சொற்கள் குற்றவியல் வழக்குகளிலும் குடிமையியல் வழக்குகளிலும் ஒன்றுபோல் இருப்பதில்லை. குற்றம் இழைத்தவர்Xகுற்றம் சாட்டியவர் என்ற எதிர்வு குற்றவியல் வழக்குகளின் முரண்பாடு. பாதிக்கப்பட்டவர் X பாதிப்பு உண்டாக்கியவர் என்ற எதிர்வு குடிமையியல் வழக்குகளின் முரண்பாடு. இவ்விரு வழக்குகளிலுமே நபர்களுக்குப் பதிலாக அமைப்புகளும் இருக்கக் கூடும்.
நடைமுறையில் நாம் காணும் இந்த அமைப்புகள் அப்படியே இலக்கியப்பனுவல்களில் இருக்குமென எதிர்பார்க்க வேண்டியதில்லை. அந்தப் பனுவல்கள் பாத்திரங்கள் சார்ந்த சிறுகதை, நாவல், நாடகம் போன்ற வடிவங்களில் பாத்திர எதிர்வுகள் மட்டுமே உருவாக்கப்படும். அவர்களுக்காக வாதாடும் வழக்குரைஞர்கள் வேலையை எழுத்தாளரின் எழுத்துத் திறனே செய்யும். அவர்கள் எழுதும் உரையாடல்கள், உடல்மொழி வெளிப்பாடு, சூழல் விவரிப்பு, காலப்பின்னணி வழியாக அதனை உருவாக்குவார்கள். இத்தோடு நிறுத்திக்கொள்ளும் எழுத்தாளர்கள், நீதிமானின் இடத்தை வாசகர்களிடம் விட்டுவிட்டு ஒதுங்கிக் கொள்வார்கள். வாசித்து முடிக்கும் வாசகர்கள் அவரவர் சமூகப்புரிதலுக்கேற்பப் பாத்திரங்களுக்குரிய நீதியை - முடிவை அளிப்பார்கள். இப்படி ஒதுங்காமல் நீதிபதியின் இடத்தையும் எழுத்தாளர்களே எடுத்துக்கொள்வதும் உண்டு.
அபிமானியின் கெட்டவன் கதையில் ' கொலை செய்யப்பட்ட அய்யப்பன்' கெட்டவனாக முன்வைக்கப்படுகிறார். அவரைக் கொலை செய்த அண்ணன் மகன் மீது விசாரணை இல்லை. கணவனை இழந்தபின் வாலிப வயதில் இருக்கும் மகனோடு இருக்கும் அண்ணன் மனைவியிடம் பாலியல் அத்துமீறலைச் செய்ய நினைத்த அய்யப்பனின் கெட்ட செயல் மீது நேரடியாக விசாரணை இல்லை. அதற்குப் பதிலாக அந்த ஊரில் இருக்கும் இன்னொரு சாதி மனிதர்களைத் தனக்குக் கீழானவர்கள் என்ற மனநிலையில் எந்தவித மரியாதையும் தராமல் 'வாடா, போடா ' என்று அழைக்கும் உரிமையை எடுத்துக்கொண்டு திரியும் ஆதிக்க மனமே விசாரணைக்குரியதாக ஆக்கப்பட்டுள்ளது. பொருளாதார நிலையிலும் வாழ்வியல் தரத்திலும் தாழ்த்தப்பட்டவர்களை விடவும் கீழான அடுக்கில் இருக்கும் இடைநிலைச் சாதி மனிதர்களுக்குள் இருக்கும் ஆணவம், தாழ்த்தப்பட்ட மனிதர்களுக்குத் தரவேண்டிய மரியாதையைத் தர மறுக்கிறது என்ற விவாதத்தைக் கதை முழுவதும் விவரிக்கிறார் அபிமானி.
முழுவதும் இடைநிலைச் சாதி நிலக்கிழார்களின் தயவில் இருந்த காலத்திலேயே தங்கள் உறவினர்களான தாழ்த்தப்பட்ட சாதி மனிதர்கள் இருக்கிறார்கள் என்ற வேதனைப்படும் மனநிலை கொண்ட கதைசொல்லியைப் போன்ற மையக்கதாபாத்திரத்தை உருவாக்கிக் கதையை நகர்த்துவதன் மூலம் இதனைச் செய்துள்ளார் அபிமானி. இடைநிலைச் சாதி மனிதர்களுக்குத் தான் கத்தி பிடித்து ஆடறுக்கத் தெரியும் என்பதுபோல, அவர்களுக்கு இடமளித்து மரியாதை செய்யும் பழைய வழக்கங்களை ஏன் மாற்றக்கூடாது என்ற கேள்விகளும் கதைக்குள் இருக்கிறது. இந்த விசாரணையில் உருவாக்கப்படும் முரண்பட்ட மனிதர்களின் வீடு, தெரு, கோயில் போன்ற விவரங்களும் எழுத்தாளரின் நெல்லைப் பின்னணியும் சேர்ந்து இந்தக் கதையைத் தலித்தியச் சொல்லாடல் கொண்ட விசாரணையாக மாற்றியிருக்கிறது.
******
இ.இராஜேஸ் கண்ணனின் நழுவல் கதை சமூகத்தகுதியிலும் பொருளாதாரநிலையிலும் தன்னை மேலானவராக நினைத்துக்கொள்ளும் விதானையாரின் தவறவிட்ட ஒரு செயலுக்காக உளையும் மன உளைச்சலை விவரிக்கிறது. தனது இரக்கக்குணத்தாலும் உதவும் மனப்பான்மையாலும் வளர்ந்த செல்லப்பனின் மகன் அரசுப்பதவி பெற்று தனது ஊரில் அதிகாரியாக வரும்போது, அவனுக்குத் தரவேண்டிய மரியாதையைத் தருவதிலிருந்து விலகிவிடுகிறார் விதானையார். அந்த விலகல் கூட அவரே எடுத்த முடிவல்ல. அவரது தகுதியும் சமூக நிலையையும் சுட்டிக்காட்டிக் குழப்பிய வேலாயுதத்தின் யோசனையின் பேரில் எடுத்த முடிவு.
நிகழ்வுகளாக எழுதாமல் மனவோட்டமாகவே எழுதப்பட்டுள்ள இந்தக் கதையில் முழுவதும் விசாரிக்கப்படுவது விதானையாரின் மன உளைச்சல் தான். அந்த மன உளைச்சலில் வெளிப்படும் வாதப்பிரதி வாதங்கள் ஒவ்வொன்றுக்கும் எழுத்தாளர் இராஜேஸ் கண்ணனே பொறுப்பு. விதானையார் X செல்லப்பன் என்ற எதிர்வில்/ முரணில் சாதி அடையாளத்திற்குப் பதிலாகப் பொருளியல் வசதிகளும் பணக்காரரின் இரக்க மனமும் அதிகம் வெளிப்படும் விதமாக எழுதப்பட்டுள்ளதால் மனிதாபிமானக் கதாபாத்திரம் ஒன்றின் தன்னிரக்க வாதமாகக் கதை அமைந்துவிட்டது. அதற்குப் பதிலாகத் தனக்குத் தரவேண்டிய மரியாதையைத் தராமல் ஒதுங்கிப்போன விதானையாரை விசாரிக்கத்தக்க உரையாடலையோ, மனவோட்டத்தையோ செல்லப்பனின் மகனது குரல் மூலம் அல்லது உரையாடல் மூலம் தந்திருந்தால் இந்தக் கதை இன்னும் நீளவும் விரிவான விசாரணையை எழுப்பிய கதையாகவும் ஆகியிருக்கும். அதை இ.இராஜேஸ்வரன் தவறவிட்டிருக்கிறார்.
****
தலித் இதழின் சிறுகதைகளிலிருந்து தொகுப்பு ஒன்றை உருவாக்கி அவற்றின் சொல்லாடல்களை விவாதித்து நீண்ட முன்னுரை எழுதி நூலாக்கம் செய்யும் வேண்டுகோள் ஒன்றை தலித் இதழின் ஆசிரியருக்கு -முனைவர் ரவிக்குமாருக்கு வைக்க விரும்புகிறேன்.
****************************************************************
நிர்வாண உடலை விவாதித்தல்
உடலை எழுதுதல் அல்லது வரைதல் என்பது எப்போதும் ஆண்மையமாகவும் பெண்மையமாகவும் எதிர்வுகளோடு இருப்பதைக் காண்கிறோம். கேசாதிபாதம் அல்லது பாதாதிகேச விவரணை என்பது ஆணின் உடலைக் குறித்தனவாகத் தமிழ்க்கவிதைகளுக்குள் இல்லை. பெரும்பாலும் பெண்ணுடல் குறித்த விவரணைகளாகவே இருக்கின்றன.
சமயச் சொல்லாடல்களில் மூடிய உடல் X நிர்வாண உடல் என விரித்துப் பேசும் சொல்லாடல்கள் ஆண்களைச் சார்ந்ததாக இருக்கும்போது ஆன்மீகத் தேடலாக விவாதிக்கப்பட்டு தத்துவக் கேள்விக்குள் நகர்ந்து கொள்கின்றன. ஆனால் பெண்களைச் சார்ந்ததாக இருக்கும்போது புனித உடலாகவும் குற்றம் இழைக்கும் உடலாகவும் விவாதிக்கப்படுகின்றன. முழுவதும் மூடப்படாத அரை நிர்வாண உடல்களும் முழு நிர்வாணத்தைக் காட்டும் பெண்ணுடல்களும் ஆணைக் குற்றம் செய்யத் தூண்டும் ஒன்றாகப் பார்க்கப்படுவதும் எப்போதும் விவாதப்பொருளே.
நிர்வாண உடலைப் பார்க்குமிடத்தில் இருக்கும் ஆணின் இடம் அல்லது பெண்ணோடு அவனுக்கிருக்கும் உறவு சார்ந்து குற்றத்தின் அளவும் பண்பும் அதிக விவாதங்களுக்குரியதாக இருந்துள்ளன. தனது காதலனே ஆனாலும் திருமணத்திற்கு முன் தனது உடலைத் திறந்து காட்டுதல் என்பது பாவச் செயல் என்பதாகவே சமயங்கள் கற்பிக்கின்றன. திருமணத்திற்குப் பின் பெண்ணின் உடல் கணவனின் உடமை என்ற நிலையில் பாவமாகக் கருதப்படுவதில்லை. இந்த உறவுநிலை தாண்டிய மற்றவர்கள் முன் பெண்ணின் மூடப்படாத உடல் உண்டாக்கும் உணர்வுகள் குறித்த விசாரணைகள் இப்போதும் குற்றமனத்தோடு கூடியனவாக உள்ளன.
*******
இத்தகைய விவாதம் ஒன்றைக் கதையாக்கியுள்ள அரவிந்தன் அந்தக் கதைக்கு உடல் என்று தலைப்பிட்டுள்ளார். மார்ச் மாத அம்ருதாவில் வந்துள்ள அந்தக் கதையில் தான் மட்டும் தனிமையில் இருப்பதாக நினைத்துக்கொண்டு தனது உடலை - குளித்து முடித்த ஈரத்தோடு இருக்கும் தனது உடலின் அழகைத் தானே ரசித்துக்கொண்டிருக்கும் இளம்பெண்ணொருத்தியின் முழு நிர்வாண உடலை, அவளது சகோதரன் பார்த்துவிட நேர்கிறது. தனது கவனக்குறைவும் சகோதரனின் எச்சரிக்கையில்லாத நுழைவுமான தற்செயல் நிகழ்வில் காட்சிப்பொருளான தனது முழு நிர்வாண உடல், தனது சகோதரனையும் இன்னொரு ஆணாகவே நினைத்து அச்சம் கொள்கிறது. ஆண்களின் பார்வையில் பெண்ணுடலுக்கு ஒரே அர்த்தம் தான் இருக்குமோ என்ற எண்ணத்தில் அலைக்கழித்தல் தவிக்கும் மனதை விரிவாக எழுதுகிறார் அரவிந்தன்.
இதுவரையிலான உறவு முறையிலிருந்து விலகி இனி உருவாகப்போகும் அவமானம், குற்றவுணர்வு என நீளும் எண்ண ஓட்டங்கள் தேவையற்றவை என்பதைச் சகோதரனின் சின்ன உரையாடல் ஒன்று இல்லாமல் ஆக்கிவிடுகிறது என்பதாகக் கதையை முடித்துள்ளார். அந்த உரையாடல் இப்படி நடக்கிறது:

“கதவ மூடிட்டு ட்ரெஸ் மாத்த மாட்டியாடி லூஸு” என்றான் சிரித்துக்கொண்டே.சடாரென்று எழுந்த அவள், “கதவ தட்டிட்டு உள்ள வர மாட்டியாடா நாயே” என்றபடி அவன் தோளில் அறைந்தாள்.
“நீ மறுபடியும் தூங்கிட்டியோன்னு நெனச்சு கதவ தள்ளிப் பார்த்தேன். அது ஓப்பனாயிடுச்சு. நான் என்ன பண்றது?” என்று சொல்லிவிட்டு மீண்டும் சிரித்தான்.
சந்தியாவுக்கும் சிரிப்பு வந்துவிட்டது.
*************
உடலைச் சுற்றி உருவாக்கப்பட்டுள்ள புனிதம்Xதீட்டு, அவமானம்Xதிளைப்பு போன்றன விவாதிக்கப்பட வேண்டும் என்பதைப் பெண்ணியச் சொல்லாடல்களும் உளவியல் விவாதங்களும் திரும்பத் திரும்ப வலியுறுத்தும் நிலையில் அதனைச் செய்வதற்குப் புனைகதைகள் நல்லதொரு வழிமுறை என்ற அளவில் அரவிந்தனின் இந்தக் கதை வாசிக்கப்பட வேண்டிய ஒன்று. ஆனால் இந்தக் கதை எழுதப்பட்டுள்ள முறையில் விவாதம் மட்டுமே உள்ளது. கதைக்கான நிகழ்வுகள் உருவாக்கப்படவில்லை என்பதைக் குறையாகவே சொல்லவேண்டும்.

கருத்துகள்