இடுகைகள்

அக்டோபர், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

BIGBOSS - AN INTERNSHIP PROGRAMME / பிக்பாஸ் நிகழ்வைப் பயிற்சி நிகழ்வாகவும் மாற்றலாம்.

படம்
2025 ஆம் ஆண்டுக்கான பிக்பாஸ் நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில்  சில நாட்களில் தொடங்க உள்ளது. தொடங்குவதற்கு முன்பு இந்த இந்த யோசனையைச் சொல்கிறேன். அந்த நிகழ்ச்சியை வெறும் பொழுதுபோக்குப் போட்டி நிகழ்ச்சியாக மட்டும் நடத்தாமல் தமிழ்ச்சினிமா மற்றும் காணொளி ஊடகங்களுக்கான திறமையாளர்களை உருவாக்கும் கற்றல்/ கற்பித்தல் நிகழ்ச்சியாகவும் மாற்றலாம். 

எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே.

கவிதைகள்: ஆக்கங்களும் வாசிப்புகளும். செம்மொழியான தமிழுக்குத் தனித்துவமான இலக்கியவியல் ஒன்று இருக்கிறது. எல்லாச் செவ்வியல் மொழிகளிலும் இருக்கும் இலக்கியவியல் நூல்கள் பேசுவதைப் போலத் தமிழின் இலக்கியவியல் நூலான தொல்காப்பியமும் இலக்கியத்தை ஆக்கும்/ செய்யும் முறைகளையே பேசுகின்றது. ஆனால் அதன் துணைவிளைவுகள் சில இருக்கின்றன என்பதை அடிப்படையாகக் கொண்டு இந்தக் கட்டுரை எழுதப்படுகிறது.

தமயந்தியின் காயல் - பிரிவுத்துயரின் வலைப்பின்னல்

படம்
எழுத்தாளர் தமயந்தியின் இயக்கத்தில் வந்துள்ள காயல் அவரது இரண்டாவது சினிமா. முதல் சினிமா தடயம். சினிமாவுக்குள் நுழைந்த மற்ற எழுத்தாளர்களிடமிருந்து தமயந்தியின் நுழைவும் இருப்பும் முக்கியமான வேறுபாடு உடையது. எழுத்தாளர் என்ற தனித்த அடையாளத்தோடு நுழைந்து, வணிக சினிமாவுக்குள் தன் இருப்பிற்காகப் போராடியிருக்கிறார். அவரது முதல் படம் தடயத்தைப் பார்வையாளர்கள் முன் வைக்கப் பலவிதமான சிரமங்களை அனுபவித்தார். திருநெல்வேலியில் ஒரு முதியோர் இல்லத்தில் இருந்த அரங்கில்தான் தடயம் படத்தைப் பார்த்தேன். இரண்டாவது படமான காயலையும் முடித்துவைத்து ஆண்டுக்கணக்கில் காத்திருந்து அரங்கில் வெளியிட முடிந்துள்ளது. இத்தகைய முயற்சிகளின் பின்னணியில் மனந்தளர்ந்து விடாத அவரது பிடிவாதம் இருக்கிறது.