நிகழ்த்தும் கவிதைகளை எழுதுவது -பயிலரங்க அனுபவம்
கவிதைகளை எழுதவும் வாசிக்கவும் எனத் திட்டமிட்டுக் கொண்ட ஆறுநாள் பயிலரங்கிற்கு நான் எடுத்துக் கொண்ட பொருண்மையே இந்தத் தலைப்பு. நிகழ்த்துதலைக் கோரும் கவிதைகளின் தன்மைகள் எப்படி இருக்கும் என்பதைக் காட்டி, அதைப்போல நீங்களும் எழுதவேண்டும் என்று மரபான உத்தியில் தொடங்கி, புதியன நோக்கி நகர்த்துவதே எனது திட்டம். பொதுவானப் பயிலரங்குகளில் இந்த மரபான உத்தியைப் பலரும் பின்பற்றுவார்கள்.
தனிமனிதர்களின் வாழ்க்கையில் ஏற்படும் திருப்பங்கள் பெரும் நிகழ்வுகளோடு தொடர்புபடுத்தப்பட வேண்டும் என்பதற்காக அரசுகளும் சில நடைமுறைகளைப் பின்பற்றுகின்றன. அரசு தரும் சலுகைகள், உதவிகள் போன்றனவற்றைத் தேசத்தலைவர்களின் பிறந்தநாளன்றும், தேசத்தின் முக்கிய நாட்களான விடுதலை நாள், குடியரசு நாள் போன்றவற்றிலும் செய்கின்றன. முக்கிய நாட்களின் போது சலுகைகளையும் உதவிகளையும் வழங்குவதுபோல வேறு சில காரியங்களும் செய்யப்படுகின்றன. சிறைக்கைதிகளை விடுதலை செய்வதும் அத்தகைய செயல்களுள் ஒன்று.
மனிதாபிமான அடிப்படையில் நீண்ட நாள் சிறைக் கைதிகள் விடுவிக்கப்படுகின்றார்கள் என்று சொல்லப்பட்டாலும், அக்கைதிகள் சிறை இருப்புக் காலத்தில் தாங்கள் செய்த குற்றத்தை உணர்ந்தவர்களாக மாறி விட்டார்கள் என்பதைப் படிப்படியாக உணர்ந்த பின்னரே அவர்கள் விடுதலை செய்யப்படும் நிகழ்வு நடக்கிறது. தமிழகப் பெருஞ்சிறைகள் பலவற்றிலிருந்தும் இந்த மாதம் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் நீண்ட நாள் கைதிகள் பலர் விடுதலை செய்யப்பட்டனர். பெரும்பாலும் ஆயுள் தண்டனை என்னும் பெருந்தண்டனையைப் பெற்ற கைதிகளே விடுவிக்கப்பட்டனர் என்பதை நாமறிவோம். அவர்களின் விடுதலையோடு தமிழகத்தின் பெருந் தலைவர்களுள் சிறப்பிடம் பெற்றவரான சி.என். அண்ணாதுரையின் பிறந்த நாள் இணைக்கப் பட்டது .
மனித வாழ்க்கையில் முக்கிய நிகழ்வுகள் என்பன ஒவ்வொருவரும் தம்மைப் பற்றியும் தங்களைச் சுற்றியிருப்பவர்களைப் பற்றியும் நினைத்துக் கொள்வதற்கான நாள் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. அண்ணாதுரையின் பிறந்த நாளன்று விடுதலை செய்யப்பட்ட இவர்களுக்கு அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15 மறக்க முடியாத நாளாக இருக்கப்போகிறது என்பதை நாம் மறுத்துவிடவும் முடியாது. இப்படி நினைத்துக் கொண்டு தினசரித்தாளைப் புரட்டிக் கொண்டிருக்கும் போது இந்தச் செய்தியை நான் வாசித்தேன். நீங்களும் வாசித்திருக்கக் கூடும். என்னை அந்தப் புகைப்படமும் பக்கத்திலிருந்த செய்தியும் அதன் அடியாழத்திற்கு அழைத்துப் போனது என்பதை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
தமிழகத்தின் பெருஞ்சிறைகளில் ஒன்றான பாளையங்கோட்டைச் சிறையிலிருந்து அண்ணாவின் பிறந்த நாளினை முன்னிட்டு விடுதலை செய்யப்பட்ட நான்கு ஆயுள் கைதிகளும் வரிசையாக நிறுத்தப்பட்டு எடுக்கப் பட்ட புகைப்படமும் அச்சிடப்பட்டிருந்தது. வெள்ளை ஆடைகள் அணிந்து நின்ற அந்த நான்கு பேரைப் பற்றிய முன்தகவல்களும் செய்தியாக வெளியிடப்பெற்றிருந்தது. அந்த நான்கு பேரில் மூன்று பேர் தங்கள் உறவினர்களுடன் சென்றார்கள் என்றும் , ஒருவரை அழைத்துச் செல்ல அவரது உறவினர் ஒருவரும் வரவில்லை; அதனால் முதியோர் இல்லத்தில் அவர் சேர்க்கப்பட்டார் என்றும் அந்தச் செய்தி சொல்லியது. விடுவிக்கப்பட்ட நான்கு பேரும் கொலைகள் தொடர்பாக விசாரிக்கப்பட்டு ஆயுள் தண்டனை பெற்ற கைதிகள் என்பதையும் அந்தச் செய்தி சொல்லியது.
எட்டாண்டுகளுக்கும் குறையாமல் சிறையில் தங்கள் வாழ்நாளைக் கழித்து விட்டு வெளியேறியுள்ள இந்த நான்கு பேருக்கும் திருப்பு முனையாக எந்த நாளைச் சொல்லுவது? அவர்கள் விடுதலையாகும் அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15 என்ற இந்த நாளையா? அல்லது அவர்களைச் சிறைக்கு அனுப்புவதற்குக் காரணமான பெருநிகழ்வுகளை- கொலைக்குற்றங்களைச் செய்தார்களே அந்த நாளையா?
யோசித்துப் பார்த்தால் திருப்பங்கள் நிகழ்ந்த நாள் என்பது நம்மை மீறிய சக்தி ஒன்று நம்மை இயக்கிய நாளாக இருப்பதை உணரலாம். நமது தன்னுணர்வுக்கு அப்பாற்பட்டதான அந்த சக்தியின் காரணமாக அந்த நிகழ்வு நடந்தது என்றே நினைக்கிறோம். உயிர்க்கொலை செய்த ஒருவனை நிதானப் படுத்திக் கேட்டால் என்னை அறியாமல் நான் அதைச் செய்து விட்டேன் என்றே சொல்லக்கூடும். கொலை மட்டும் அல்ல; தற்கொலைக்கு முயன்று தோற்றவர்கள் கூடத் தன்னுணர்வு நீங்கிய கணத்திலேயே அந்த உணர்வுக்குள் தள்ளப்பட்டதாகச் சொல்கிறார்கள். தன்னுணர்வு நீங்குதல் என்பதற்கு இன்னொரு பெயரே அமானுஷ்ய சக்திக்கு ஆட்படுதல் என விளங்கிக் கொண்டால் இது புரிய வரலாம்.
அமானுஷ்ய சக்தி நமக்கு நன்மைகளைத் தருகிறபோது அதனை அதிர்ஷ்டம் விளைந்த நாள் எனக் கொண்டாடுகிறோம். அதே நாள் நமக்குத் துன்பங்களைக் கொண்டு வந்து சேர்த்திருந்தால் துக்கநாள் எனக் கருதிக் குற்றவுணர்வுக்குள் தள்ளப்படுகிறோம். செப்டம்பர் 15 அன்று விடுதலையாகி வெளியில் வந்து செய்தியாகவும், செய்திக்கான புகைப்படமாகவும் ஆன அவர்கள் - கொலைகள் காரணமாக சிறைக்குள் அடைக்கப்பட்ட அந்தக் கைதிகள்- தண்டனை கிடைப்பது வரை தாங்கள் செய்தது பெரும் சாகசம் என்றே நினைத்திருக்கக் கூடும். தாங்கள் நிறைவேற்ற வேண்டிய கடமை ஒன்றை முடித்துவிட்டதாகக் கர்வம் கூட அடைந்திருக்கலாம்.
நீதிமன்றத்தில் சாட்சியங்களும் சமூக ஒழுங்கும் பொது விதிகளும் சேர்ந்து நீங்கள் செய்தது “கடமை நிறைவேற்றம் அல்ல; தண்டிக்கப்பட வேண்டிய பெருந்தவறு” எனக்கூறித் தண்டித்த போது கூட உண்மையை உணர்ந்திருப்பார்கள் எனக் கூற முடியாது. ஆனால் எட்டாண்டுகளுக்குக் குறையாத சிறைவாசம் நிச்சயம் அவர்களைக் குற்றவுணர்வுக்குள் ஆழ்த்தியிருக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ளத்தான் வேண்டும். அந்தப் புரிதலின் அடிப்படையிலேயே அவர்களின் விடுதலை சாத்தியமாகி இருக்கிறது. நின்ற அந்த நால்வரும் ஏறத்தாழ வாழ்க்கையின் அந்திமக் காலத்தில் இருக்கும் முதியவர்கள். இனி வரும் ஒவ்வொரு நாளையும் தங்களைப் பற்றியும் தங்கள் குடும்பத்தாரைப் பற்றியும், சுற்றி இருப்பவர்கள் பற்றியும் நினைத்துப்படத்தில் வரிசையாக பார்த்துச் செயல்படும் பக்குவத்தை அடைந்தவர்களாக அவர்களை ஆக்கித் தான் சிறைவாழ்க்கை அனுப்பி இருக்க வேண்டும். அதற்கு மாறாக பழிக்குப் பழி வாங்குதல் என்பதாக அவர்கள் வெளியேறி இருந்தால் நடைமுறையில் செயல்படும் மனிதாபிமான விடுதலை என்னும் கருத்தாக்கமே கேள்விக்குறியாக மாறிவிடும்.
இனிநினைந்து இரக்கம் ஆகின்று ; திணிமணல்
செய்வுறு பாவைக்கு கொய்பூத் தைஇத்,
தண்கயம் ஆடும் மகளிரொடு கைபிணைந்து,
தழுவுவழித் தழீஇத், தூங்குவழித் தூங்கி,
மறைஎனல் அறியா மாயமில் ஆயமொடு
“தொடித்தலை விழுத்தண்டு ஊன்றி, நடுக்குற்று,
இருமிடை மிடைந்த சிலசொல்
பெருமூ தாளரோம்” ஆகிய எமக்கே?
என வரும் இக்கவிதை புறநானூற்றில் உள்ளது. எழுதியவர் பெயர் தெரியாத இந்தக் கவிதையைத் தமிழ்ச் சமூகம் அவர் எழுதிய கவிதை வரியான ‘ தொடித்தலை விழுத்தண்டு' என்பதைக் கொண்டு தொடித்தலை விழுத்தண்டினார் என்றே அழைக்கிறது.
இளமையின் துடுக்கும், பெண்கள் முன்னால் ஓர் ஆண் செய்து காட்டும் சாகசமும் படம் பிடிக்கப்படும் இக்கவிதை நினைத்துப் பார்க்கும் கடந்த காலத்தை நம்முன்னால் கொண்டு வந்து நிறுத்தும் கவிதை. இந்தக் கைதிகளின் படத்தையும் செய்தியையும் வாசித்தவுடன் என் மனக்கண் முன்னால், அந்தக் கவிதையின் வரிகளும் அது உண்டாக்கும் சித்திரமும் தோன்றின என்றாலும், எதிர்மறை நிலையிலேயெ தோன்றின என்பதையும் சொல்ல வேண்டும்.
இனி எனது அந்தக் கடந்த காலம் – சாகசங்கள் நிறைந்த கடந்த காலம் எனக்குத் திரும்ப வராது எனச் சொல்லும் தொடித்தண்டிலை விழுத்தண்டினார் போல இந்த நால்வரும் கடந்த காலத்திற்காக ஏங்க வேண்டியதில்லை. குற்றவுணர்வு மிக்க அந்தக் கடந்த காலத்தை மறந்து விட்டுப் புதிய மனிதர்களாக ஆகும் நிலையை நோக்கி நிற்கும் அவர்களில் மூவருக்குத் தான் அந்த வாய்ப்பும் கூட இருக்கிறது. அந்த நான்கு பேரில் ஒருவரைத் தேடி அவரது உறவினர்களில் ஒருவர் கூட வரவில்லை என்பதை நினைக்கிறபோது குற்றவாளிகளும், குற்ற நிலையும் இந்த உலகத்தில் என்னவாகக் கருதப்படுகிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்
நமது உலகம் – நமது உறவினர்கள்- நமது செயல்பாடுகளினால் கிடைத்த அனைத்தையும் விழுப்புண்களுக்காகக் கருதிக் கொள்வதில்லை என்பதை அந்த ஒருவரின் நிலை நமக்கு உணர்த்தியது. விழுப்புண்கள் என அவர் நினைத்த குற்றச் செயல்கள் இன்று, விழுத்தண்டு ஊண்டும் முதிய காலத்தில் குற்றவுணர்வைக் கொண்டு வந்து சேர்க்கும் ஒன்றாக மாறிவிட்டதை அவர் உணர்வதை விட, அவரைப் பற்றிய செய்தியைப் படிக்கும் மற்றவர்கள் உணர வேண்டும் என்பதே மிக முக்கியம்

போலச் செய்தலிலிருந்து விடுபடும்போதுதான் தனித்தனிக் கவிகளின் அடையாளம் உருவாகின்றது. நவீனத்துவக்கவிகள் ஒவ்வொருவரும் தனித்தனியான அடையாளத்தோடு எழுதினார்கள் என்பதையும் இப்போது வரும் புதியவர்கள் அப்படி எழுதுகின்றார்கள் என்பதும் போலச் செய்வதிலிருந்து விடுபட்டுவிடும் எத்தணிப்பில் தொடர்ச்சியாக இருக்கிறார்கள் என்பதின் அடையாளங்கள். போலச்செய்தலைக் கற்பிக்கும் பொருட்டு நிகழ்த்துதலுக்கு வாய்ப்பளிக்கும் பத்துக்கவிதைகளைக் கைவசம் எடுத்துக்கொண்டு சென்றேன். தேவதேவன், வ.ஐ.ச.ஜெயபாலன், பழமலை, வெயில், தேன்மொழிதாஸ், ஆதவன் தீட்சண்யா, சூரியதீபன்,ரவிக்குமார், கருணாகரன், பாரதியார், இவர்களின் கவிதைகளுக்குள் ஒற்றை உணர்வை மட்டும் உருவாக்கும் நோக்கம் இல்லாத - ஒற்றை நிகழ்வை மட்டும் காட்சிப்படுத்தும் தன்மை இல்லாத - ஒற்றைச் சொல்முறை மட்டுமாக இல்லாத கவிதைகளாகத் தேர்வு செய்திருந்தேன். இந்தப் பல்தன்மையையே நிகழ்த்துதலைக் கோரும் கவிதைகளின் இயல்புகள் என்பது எனது கணிப்பு.
இந்தக் கூறுகளைக் கண்டுபிடிப்பதற்காக எல்லாக் கவிதைகளையும் வாசித்தார்கள்; ஒரு தடவைக்குப் பதிலாக மௌனவாசிப்பாகவும் ஒலிக்கும் வாசிப்பாகவும் வாசித்தார்கள். வாசிப்பதோடு முதல் அமர்வு நிறைவடைந்தது.
இரண்டாவது அமர்வில் ஒவ்வொரு கவிதைக்கும் என ஏழுபேர் கொண்ட குழு கிடைத்தது. அந்தக்குழுக்கள் தனித்தனியாக ஒரு கவிதையோடு சென்று வாசித்தார்கள். வாசித்து முடித்த நிலையில் அக்கவிதைக்குள் எங்கே இடமும் காலமும் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன; எங்கே உணர்வு வெளிப்படும் காட்சிகள் இருக்கின்றன; என்னவகையான உணர்வு அங்கே உருவாகின்றது போன்றன அடையாளப்படுத்தப்பட்டு அவற்றைக் குழுவின் வெளிப்பாடாக நிகழ்த்தினார்கள்.
மூன்றாவது அமர்வு எழுதும் நேரம். முதல் வாசித்துப் புரிந்துகொண்ட கவிதைகளின் இயல்புகளை உள்வாங்கி முதல் மாலை தொடங்கி, இரவு உணவு வரை கவிதைகள் எழுதுவதற்கான நேரம் தரப்பட்டது. பயிலரங்குக்கு வந்தா 63 பேரும் கவிதைகள் எழுதினார்கள் என்பது அதன் வெற்றி. 63 கவிதைகளில் மூன்றில் இரண்டு பங்கு கவிதைகளாக இருந்தன.
***************
மரபுக்கவிதையிலிருந்து விலகி உருவான புதுக்கவிதை ஓசையை விட்டுவிலகியபோது மெல்லமெல்ல செவிநுகர் கனிகளாக இல்லாமல், கண்ணுகர் கோலங்களாக மாறத்தொடங்கின. ஓசையொழுங்குக்குப் பதிலாக காட்சிப்படுத்தலை முதன்மையாக நினைத்தன. என்றாலும் முழுமையும் ஆரம்பகாலப்புதுக்கவிதைகள் நடந்துவிடவில்லை. புதுக்கவிதைகள் நவீனத்துவக் கவிதைகளாக மாறியபோது முழுமையும் காட்சிக் கவிதைகளாகவும் மாறின என்பதைச் சமகாலக் கவிதைகளைத் தொடர்ச்சியாக வாசிப்பவர்கள் உணர்ந்திருக்கக்கூடும்.
மரபுக்கவிதையில் இடம்பெற்ற உருவகம், உவமை வழியாக உருவாக்கப்பட்ட வெளிகளைப் போலவே, புதுக்கவிதைகளில் இடம்பெற்ற குறியீடு, படிமம் போன்றன காட்சிப்படுத்தலைச் செய்தன. இந்தப் பொதுக்கூறுகளையும் தாண்டிய ஒன்று நிகழ்த்துக்கவிதைகள். நிகழ்த்துதலைக் கோரும்
************************
அண்மையில் நடந்த கவிதைப்பட்டறை ஒன்றில நவீனக்கவிதைகளையே நிகழ்த்திப்பார்த்தோம். அதே நேரம் , கடந்த காலக் கவிதை ஒன்றை நிகழ்த்தும்போது, அதனை நிகழ்காலத்துக்கொண்டு வந்து பொருத்திக் காட்ட வேண்டும், அப்போது அதன் தொனியும் காட்சிப்படிமங்களும் நிகழ்காலத்து வாழ்க்கையின் அறியப்பட்ட ஒன்றோடு சேர்த்து உணர்த்தப்படும் வாய்ப்புகளுண்டு.தொடித்தலை விழுத்தண்டினார் எழுதிய அந்தக் அப்படியான கவிதை.
“இன்று எனது வாழ்க்கையில் முக்கியமான நாள்” என ஏதாவது ஒரு நாளைப் பலரும் கூறக் கேட்டிருக்கலாம். அப்படிக் கூறுபவர்களிடம் கொஞ்சம் கூடுதலாக விசாரித்துப் பாருங்கள். அந்த நாள் அவரது வாழ்க்கையில் நல்லது அல்லது கெட்டது என இரண்டில் ஒன்று நடந்த ஒரு நாளாக இருக்கும்.
வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்தும்படி நிகழ்ந்த அந்த நாளை நினைத்துக்கொள்வதற்காகவே அந்த மனிதர்கள் தனது வாழ்க்கையின் முக்கியமான நாள் என அதனைக் கருதுகிறார்கள்
வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்தும்படி நிகழ்ந்த அந்த நாளை நினைத்துக்கொள்வதற்காகவே அந்த மனிதர்கள் தனது வாழ்க்கையின் முக்கியமான நாள் என அதனைக் கருதுகிறார்கள்
தனிமனிதர்களின் வாழ்க்கையில் ஏற்படும் திருப்பங்கள் பெரும் நிகழ்வுகளோடு தொடர்புபடுத்தப்பட வேண்டும் என்பதற்காக அரசுகளும் சில நடைமுறைகளைப் பின்பற்றுகின்றன. அரசு தரும் சலுகைகள், உதவிகள் போன்றனவற்றைத் தேசத்தலைவர்களின் பிறந்தநாளன்றும், தேசத்தின் முக்கிய நாட்களான விடுதலை நாள், குடியரசு நாள் போன்றவற்றிலும் செய்கின்றன. முக்கிய நாட்களின் போது சலுகைகளையும் உதவிகளையும் வழங்குவதுபோல வேறு சில காரியங்களும் செய்யப்படுகின்றன. சிறைக்கைதிகளை விடுதலை செய்வதும் அத்தகைய செயல்களுள் ஒன்று.
மனிதாபிமான அடிப்படையில் நீண்ட நாள் சிறைக் கைதிகள் விடுவிக்கப்படுகின்றார்கள் என்று சொல்லப்பட்டாலும், அக்கைதிகள் சிறை இருப்புக் காலத்தில் தாங்கள் செய்த குற்றத்தை உணர்ந்தவர்களாக மாறி விட்டார்கள் என்பதைப் படிப்படியாக உணர்ந்த பின்னரே அவர்கள் விடுதலை செய்யப்படும் நிகழ்வு நடக்கிறது. தமிழகப் பெருஞ்சிறைகள் பலவற்றிலிருந்தும் இந்த மாதம் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் நீண்ட நாள் கைதிகள் பலர் விடுதலை செய்யப்பட்டனர். பெரும்பாலும் ஆயுள் தண்டனை என்னும் பெருந்தண்டனையைப் பெற்ற கைதிகளே விடுவிக்கப்பட்டனர் என்பதை நாமறிவோம். அவர்களின் விடுதலையோடு தமிழகத்தின் பெருந் தலைவர்களுள் சிறப்பிடம் பெற்றவரான சி.என். அண்ணாதுரையின் பிறந்த நாள் இணைக்கப் பட்டது .
மனித வாழ்க்கையில் முக்கிய நிகழ்வுகள் என்பன ஒவ்வொருவரும் தம்மைப் பற்றியும் தங்களைச் சுற்றியிருப்பவர்களைப் பற்றியும் நினைத்துக் கொள்வதற்கான நாள் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. அண்ணாதுரையின் பிறந்த நாளன்று விடுதலை செய்யப்பட்ட இவர்களுக்கு அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15 மறக்க முடியாத நாளாக இருக்கப்போகிறது என்பதை நாம் மறுத்துவிடவும் முடியாது. இப்படி நினைத்துக் கொண்டு தினசரித்தாளைப் புரட்டிக் கொண்டிருக்கும் போது இந்தச் செய்தியை நான் வாசித்தேன். நீங்களும் வாசித்திருக்கக் கூடும். என்னை அந்தப் புகைப்படமும் பக்கத்திலிருந்த செய்தியும் அதன் அடியாழத்திற்கு அழைத்துப் போனது என்பதை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
தமிழகத்தின் பெருஞ்சிறைகளில் ஒன்றான பாளையங்கோட்டைச் சிறையிலிருந்து அண்ணாவின் பிறந்த நாளினை முன்னிட்டு விடுதலை செய்யப்பட்ட நான்கு ஆயுள் கைதிகளும் வரிசையாக நிறுத்தப்பட்டு எடுக்கப் பட்ட புகைப்படமும் அச்சிடப்பட்டிருந்தது. வெள்ளை ஆடைகள் அணிந்து நின்ற அந்த நான்கு பேரைப் பற்றிய முன்தகவல்களும் செய்தியாக வெளியிடப்பெற்றிருந்தது. அந்த நான்கு பேரில் மூன்று பேர் தங்கள் உறவினர்களுடன் சென்றார்கள் என்றும் , ஒருவரை அழைத்துச் செல்ல அவரது உறவினர் ஒருவரும் வரவில்லை; அதனால் முதியோர் இல்லத்தில் அவர் சேர்க்கப்பட்டார் என்றும் அந்தச் செய்தி சொல்லியது. விடுவிக்கப்பட்ட நான்கு பேரும் கொலைகள் தொடர்பாக விசாரிக்கப்பட்டு ஆயுள் தண்டனை பெற்ற கைதிகள் என்பதையும் அந்தச் செய்தி சொல்லியது.
எட்டாண்டுகளுக்கும் குறையாமல் சிறையில் தங்கள் வாழ்நாளைக் கழித்து விட்டு வெளியேறியுள்ள இந்த நான்கு பேருக்கும் திருப்பு முனையாக எந்த நாளைச் சொல்லுவது? அவர்கள் விடுதலையாகும் அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15 என்ற இந்த நாளையா? அல்லது அவர்களைச் சிறைக்கு அனுப்புவதற்குக் காரணமான பெருநிகழ்வுகளை- கொலைக்குற்றங்களைச் செய்தார்களே அந்த நாளையா?
யோசித்துப் பார்த்தால் திருப்பங்கள் நிகழ்ந்த நாள் என்பது நம்மை மீறிய சக்தி ஒன்று நம்மை இயக்கிய நாளாக இருப்பதை உணரலாம். நமது தன்னுணர்வுக்கு அப்பாற்பட்டதான அந்த சக்தியின் காரணமாக அந்த நிகழ்வு நடந்தது என்றே நினைக்கிறோம். உயிர்க்கொலை செய்த ஒருவனை நிதானப் படுத்திக் கேட்டால் என்னை அறியாமல் நான் அதைச் செய்து விட்டேன் என்றே சொல்லக்கூடும். கொலை மட்டும் அல்ல; தற்கொலைக்கு முயன்று தோற்றவர்கள் கூடத் தன்னுணர்வு நீங்கிய கணத்திலேயே அந்த உணர்வுக்குள் தள்ளப்பட்டதாகச் சொல்கிறார்கள். தன்னுணர்வு நீங்குதல் என்பதற்கு இன்னொரு பெயரே அமானுஷ்ய சக்திக்கு ஆட்படுதல் என விளங்கிக் கொண்டால் இது புரிய வரலாம்.
அமானுஷ்ய சக்தி நமக்கு நன்மைகளைத் தருகிறபோது அதனை அதிர்ஷ்டம் விளைந்த நாள் எனக் கொண்டாடுகிறோம். அதே நாள் நமக்குத் துன்பங்களைக் கொண்டு வந்து சேர்த்திருந்தால் துக்கநாள் எனக் கருதிக் குற்றவுணர்வுக்குள் தள்ளப்படுகிறோம். செப்டம்பர் 15 அன்று விடுதலையாகி வெளியில் வந்து செய்தியாகவும், செய்திக்கான புகைப்படமாகவும் ஆன அவர்கள் - கொலைகள் காரணமாக சிறைக்குள் அடைக்கப்பட்ட அந்தக் கைதிகள்- தண்டனை கிடைப்பது வரை தாங்கள் செய்தது பெரும் சாகசம் என்றே நினைத்திருக்கக் கூடும். தாங்கள் நிறைவேற்ற வேண்டிய கடமை ஒன்றை முடித்துவிட்டதாகக் கர்வம் கூட அடைந்திருக்கலாம்.
நீதிமன்றத்தில் சாட்சியங்களும் சமூக ஒழுங்கும் பொது விதிகளும் சேர்ந்து நீங்கள் செய்தது “கடமை நிறைவேற்றம் அல்ல; தண்டிக்கப்பட வேண்டிய பெருந்தவறு” எனக்கூறித் தண்டித்த போது கூட உண்மையை உணர்ந்திருப்பார்கள் எனக் கூற முடியாது. ஆனால் எட்டாண்டுகளுக்குக் குறையாத சிறைவாசம் நிச்சயம் அவர்களைக் குற்றவுணர்வுக்குள் ஆழ்த்தியிருக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ளத்தான் வேண்டும். அந்தப் புரிதலின் அடிப்படையிலேயே அவர்களின் விடுதலை சாத்தியமாகி இருக்கிறது. நின்ற அந்த நால்வரும் ஏறத்தாழ வாழ்க்கையின் அந்திமக் காலத்தில் இருக்கும் முதியவர்கள். இனி வரும் ஒவ்வொரு நாளையும் தங்களைப் பற்றியும் தங்கள் குடும்பத்தாரைப் பற்றியும், சுற்றி இருப்பவர்கள் பற்றியும் நினைத்துப்படத்தில் வரிசையாக பார்த்துச் செயல்படும் பக்குவத்தை அடைந்தவர்களாக அவர்களை ஆக்கித் தான் சிறைவாழ்க்கை அனுப்பி இருக்க வேண்டும். அதற்கு மாறாக பழிக்குப் பழி வாங்குதல் என்பதாக அவர்கள் வெளியேறி இருந்தால் நடைமுறையில் செயல்படும் மனிதாபிமான விடுதலை என்னும் கருத்தாக்கமே கேள்விக்குறியாக மாறிவிடும்.
திருப்புமுனை நாட்களை நாம் திரும்பவும் நினைத்துக் கொள்ளலாம். ஆனால் எப்படி நினைத்துக் கொள்வது என்பதில் வேறுபாடுகள். நமது ஒரு பெரியவர் தனது இளமைக்காலத்தைத் திரும்பவும் கிடைக்காது என வருத்தத்தோடு நினைத்துக் கொள்ளும் பிரபலமான பழந்தமிழ்க் கவிதை ஒன்றைப் பலரும் படித்திருக்கக் கூடும்.
இனிநினைந்து இரக்கம் ஆகின்று ; திணிமணல்
செய்வுறு பாவைக்கு கொய்பூத் தைஇத்,
தண்கயம் ஆடும் மகளிரொடு கைபிணைந்து,
தழுவுவழித் தழீஇத், தூங்குவழித் தூங்கி,
மறைஎனல் அறியா மாயமில் ஆயமொடு
“தொடித்தலை விழுத்தண்டு ஊன்றி, நடுக்குற்று,
இருமிடை மிடைந்த சிலசொல்
பெருமூ தாளரோம்” ஆகிய எமக்கே?
என வரும் இக்கவிதை புறநானூற்றில் உள்ளது. எழுதியவர் பெயர் தெரியாத இந்தக் கவிதையைத் தமிழ்ச் சமூகம் அவர் எழுதிய கவிதை வரியான ‘ தொடித்தலை விழுத்தண்டு' என்பதைக் கொண்டு தொடித்தலை விழுத்தண்டினார் என்றே அழைக்கிறது.
இளமையின் துடுக்கும், பெண்கள் முன்னால் ஓர் ஆண் செய்து காட்டும் சாகசமும் படம் பிடிக்கப்படும் இக்கவிதை நினைத்துப் பார்க்கும் கடந்த காலத்தை நம்முன்னால் கொண்டு வந்து நிறுத்தும் கவிதை. இந்தக் கைதிகளின் படத்தையும் செய்தியையும் வாசித்தவுடன் என் மனக்கண் முன்னால், அந்தக் கவிதையின் வரிகளும் அது உண்டாக்கும் சித்திரமும் தோன்றின என்றாலும், எதிர்மறை நிலையிலேயெ தோன்றின என்பதையும் சொல்ல வேண்டும்.
இனி எனது அந்தக் கடந்த காலம் – சாகசங்கள் நிறைந்த கடந்த காலம் எனக்குத் திரும்ப வராது எனச் சொல்லும் தொடித்தண்டிலை விழுத்தண்டினார் போல இந்த நால்வரும் கடந்த காலத்திற்காக ஏங்க வேண்டியதில்லை. குற்றவுணர்வு மிக்க அந்தக் கடந்த காலத்தை மறந்து விட்டுப் புதிய மனிதர்களாக ஆகும் நிலையை நோக்கி நிற்கும் அவர்களில் மூவருக்குத் தான் அந்த வாய்ப்பும் கூட இருக்கிறது. அந்த நான்கு பேரில் ஒருவரைத் தேடி அவரது உறவினர்களில் ஒருவர் கூட வரவில்லை என்பதை நினைக்கிறபோது குற்றவாளிகளும், குற்ற நிலையும் இந்த உலகத்தில் என்னவாகக் கருதப்படுகிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்
நமது உலகம் – நமது உறவினர்கள்- நமது செயல்பாடுகளினால் கிடைத்த அனைத்தையும் விழுப்புண்களுக்காகக் கருதிக் கொள்வதில்லை என்பதை அந்த ஒருவரின் நிலை நமக்கு உணர்த்தியது. விழுப்புண்கள் என அவர் நினைத்த குற்றச் செயல்கள் இன்று, விழுத்தண்டு ஊண்டும் முதிய காலத்தில் குற்றவுணர்வைக் கொண்டு வந்து சேர்க்கும் ஒன்றாக மாறிவிட்டதை அவர் உணர்வதை விட, அவரைப் பற்றிய செய்தியைப் படிக்கும் மற்றவர்கள் உணர வேண்டும் என்பதே மிக முக்கியம்
செவ்வியல் பரப்பில் அகத்திலும் புறத்திலும் இப்படியான கவிதைகளை மட்டும் தனியாகத் தொகுத்து ஆற்றுகைப்பிரதி ஒன்றை உருவாக்க வேண்டும். நிகழ்த்திப்பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் இண்டு. இலங்கையில் செயல்படும் நாடகப்பள்ளிகள் போல - எண்ணிக்கையில் கூடுதலாகக் கற்கும் நாடகப்பள்ளிகள் இங்கு இல்லை.
நிகழ்த்துக்கவிதைக்கான அடையாளமாகச் சிலவற்றைச் சொல்லலாம்.

1. அந்தக் கவிதைக்குள் ஒற்றைக்குரல் ஒலிப்பதற்குப் பதில் ஒன்றுக்கு மேற்பட்ட குரல்கள் ஒலிப்பதாக இருப்பது2. ஒற்றை உணர்விலிருந்து வெவ்வேறு உணர்வுகளுக்கு நகர்வது3. ஒன்றுக்கு மேற்பட்ட பாத்திரங்கள் இடம் பெறும் நிகழ்வுகளைக் கவிதைக்குள் உருவாக்கிக் காட்டுவது4. வெளியுலகத்தில் இருக்கும் ஒன்றின் முரணான சிந்தனை ஒன்றைக் கவிதைக்குள்ளே முரண்நிலையாக முன்வைத்துவிட்டு ஒதுங்குவது5. அடுக்குவது, வரிசைப்படுத்துவது, எதிர்வுகளைச் சுட்டுவது போன்ற நுட்பங்களால் கவிதையை ஆக்குவது போன்றன நிகழ்த்தும் கவிதைகளின் அடையாளங்களாக இருக்கின்றன. இதனைத்தான் அந்தப் பயிலரங்கில் செய்து பார்த்தோம்.
கலையின் ஆக்கம் என்பது போலச்செய்ததிலிருந்து தொடங்குகிறது என்பது மரபான உத்தி. இயற்கையைப் போலச்செய்து வரைவதில் ஓவியக்கலையும் இயற்கைப் பொருட்ளின் முப்பரிமாணத்தன்மையைக் கொண்டு வருவதில் சிற்பக்கலையும் பயிற்சியின் பாலபாடங்களைக் கைக்கொள்கின்றன. எழுத்துக்கலையும் கூட அதே உத்தியைப் பின்பற்றவே செய்துள்ளது. அதிலும் குறிப்பாக மரபுக்கவிதையில் ஒரு கவியின் பாரம்பரியம் ஒன்று உருவாகின்றது என்றால் அங்கே அதிகமும் போலச்செய்தல்கள் நடக்கின்றன என்றே பொருள் கொள்ளவேண்டும். அண்மைக்காலப் போலச்செய்தலில் விளைவுகளே பாரதிதாசனின் பரம்பரை. வானம்பாடிகளின் இயக்கம். எழுத்துப்பாரம்பரியத்தின் உள்ளடக்கத்தேர்வு.

போலச் செய்தலிலிருந்து விடுபடும்போதுதான் தனித்தனிக் கவிகளின் அடையாளம் உருவாகின்றது. நவீனத்துவக்கவிகள் ஒவ்வொருவரும் தனித்தனியான அடையாளத்தோடு எழுதினார்கள் என்பதையும் இப்போது வரும் புதியவர்கள் அப்படி எழுதுகின்றார்கள் என்பதும் போலச் செய்வதிலிருந்து விடுபட்டுவிடும் எத்தணிப்பில் தொடர்ச்சியாக இருக்கிறார்கள் என்பதின் அடையாளங்கள். போலச்செய்தலைக் கற்பிக்கும் பொருட்டு நிகழ்த்துதலுக்கு வாய்ப்பளிக்கும் பத்துக்கவிதைகளைக் கைவசம் எடுத்துக்கொண்டு சென்றேன். தேவதேவன், வ.ஐ.ச.ஜெயபாலன், பழமலை, வெயில், தேன்மொழிதாஸ், ஆதவன் தீட்சண்யா, சூரியதீபன்,ரவிக்குமார், கருணாகரன், பாரதியார், இவர்களின் கவிதைகளுக்குள் ஒற்றை உணர்வை மட்டும் உருவாக்கும் நோக்கம் இல்லாத - ஒற்றை நிகழ்வை மட்டும் காட்சிப்படுத்தும் தன்மை இல்லாத - ஒற்றைச் சொல்முறை மட்டுமாக இல்லாத கவிதைகளாகத் தேர்வு செய்திருந்தேன். இந்தப் பல்தன்மையையே நிகழ்த்துதலைக் கோரும் கவிதைகளின் இயல்புகள் என்பது எனது கணிப்பு.
இந்தக் கூறுகளைக் கண்டுபிடிப்பதற்காக எல்லாக் கவிதைகளையும் வாசித்தார்கள்; ஒரு தடவைக்குப் பதிலாக மௌனவாசிப்பாகவும் ஒலிக்கும் வாசிப்பாகவும் வாசித்தார்கள். வாசிப்பதோடு முதல் அமர்வு நிறைவடைந்தது.
இரண்டாவது அமர்வில் ஒவ்வொரு கவிதைக்கும் என ஏழுபேர் கொண்ட குழு கிடைத்தது. அந்தக்குழுக்கள் தனித்தனியாக ஒரு கவிதையோடு சென்று வாசித்தார்கள். வாசித்து முடித்த நிலையில் அக்கவிதைக்குள் எங்கே இடமும் காலமும் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன; எங்கே உணர்வு வெளிப்படும் காட்சிகள் இருக்கின்றன; என்னவகையான உணர்வு அங்கே உருவாகின்றது போன்றன அடையாளப்படுத்தப்பட்டு அவற்றைக் குழுவின் வெளிப்பாடாக நிகழ்த்தினார்கள்.

***************
மரபுக்கவிதையின் முதன்மை அடையாளம் அதற்குள் இருக்கும் ஓசையொழுங்கு. வண்ணங்கள் எனவும் தொடைகள் எனவும் இலக்கணங்கள் சொல்லும் முறைமைகளைப் பின்பற்றி எழுதப்படும் மரபுக்கவிதைகளை வாசிப்புக்கான கவிதைகள் என்றே சொல்லவேண்டும். அந்த வாசிப்பு ஐம்புலன்களில் செவிக்குரிய அழகியலை உருவாக்கவல்லனவாக இருந்தன; இருக்கின்றன. அதனாலே ஆகச்சிறந்த மரபுக்கவிதைகள் செவிநுகர் கனிகள் எனச் சொல்லப்பட்டன, வாசிப்புக்கான அந்தக் கவிதைக்குள் இடம்பெறும் உருவகம், உவமை, பாத்திரத்தின் இயக்கம் சார்ந்து காட்சிப்படுத்தும் கூறுகள் இருக்கும். ஆனால் அது இரண்டாம் நோக்கம் தான்.
மரபுக்கவிதையிலிருந்து விலகி உருவான புதுக்கவிதை ஓசையை விட்டுவிலகியபோது மெல்லமெல்ல செவிநுகர் கனிகளாக இல்லாமல், கண்ணுகர் கோலங்களாக மாறத்தொடங்கின. ஓசையொழுங்குக்குப் பதிலாக காட்சிப்படுத்தலை முதன்மையாக நினைத்தன. என்றாலும் முழுமையும் ஆரம்பகாலப்புதுக்கவிதைகள் நடந்துவிடவில்லை. புதுக்கவிதைகள் நவீனத்துவக் கவிதைகளாக மாறியபோது முழுமையும் காட்சிக் கவிதைகளாகவும் மாறின என்பதைச் சமகாலக் கவிதைகளைத் தொடர்ச்சியாக வாசிப்பவர்கள் உணர்ந்திருக்கக்கூடும்.
மரபுக்கவிதையில் இடம்பெற்ற உருவகம், உவமை வழியாக உருவாக்கப்பட்ட வெளிகளைப் போலவே, புதுக்கவிதைகளில் இடம்பெற்ற குறியீடு, படிமம் போன்றன காட்சிப்படுத்தலைச் செய்தன. இந்தப் பொதுக்கூறுகளையும் தாண்டிய ஒன்று நிகழ்த்துக்கவிதைகள். நிகழ்த்துதலைக் கோரும்
************************
எழுதப்பட்ட கவிதைகளை வாசிப்பதும் விவாதிப்பதும் நான்காவது அமர்வு. ஒவ்வொரு கவிதையும் வாசித்தபின் அதன் மீது ரசனைக்குறிப்புகளை அவர்களே செய்தார்கள். எங்கே கவிதைத் தன்மை குறைந்து உரைநடைத்தன்மை வெளிப்படுகிறது என்பது என்பது சுட்டிக் காட்டப்பட்டது; எப்படிச் சரிசெய்யப் படலாம் என்பதும் உணர்த்தப்பட்டது. இந்த நான்கு அமர்வுகளோடு பயிலரங்கில் என் பங்கு முடிந்தது. ஆனால் சரியான பாடத்திட்டத்தோடு பயிலரங்குகள் அமைக்கப்பட்டால் அங்கிருந்து கவிகள் உருவாகிவருவதும் நடக்கும் என்ற நம்பிக்கை எனக்குண்டு. ஏனென்றால் இதற்கு முன்பு நடந்த - நடத்தப்பட்ட பயிலரங்குகளிலிருந்து கவிகள் உருவாகியிருக்கிறார்கள்.
கருத்துகள்