இடுகைகள்

ஆகஸ்ட், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தேர்தல் அரசியல்: இருவகை ஆதிக்கம்.

படம்
தேர்தல் அரசியலில் வெற்றியைத் தருவதில் முதல் இடம் பணத்திற்கா? சாதிக்கா? என்ற கேள்வி எப்போதும் இருக்கிறது. பொதுத்தேர்தல்களில் சாதியும் இடைத்தேர்தல்களில் பணமும் முதலிடம் பெற்று வெற்றியைப் பெற்றுத் தந்திருக்கின்றன என்பது தமிழகத் தேர்தல் வரலாற்றை அறிந்தவர்களுக்குத் தெரியும்.  கொள்கையையும் கோட்பாட்டையும் முன்வைத்து அரசியல் கட்சிகள் தொடங்கப் படுகின்றன.ஆனால் அவற்றைச் சொல்லி மட்டுமே தேர்தல் வெற்றியைப் பெற்றுவிட முடியும் என நம்பும் கட்சிகள் இந்தியாவில் மிகக்குறைவு. 75 ஆண்டு காலத் தேர்தல் அரசியலில் இடதுசாரிகள் மட்டுமே கொள்கைப்பற்றோடு, அதனை மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதிகமும் தோற்றுக் கொண்டிருக்கிறார்கள்.