Antonin Artaud: The Insurgent, A Play By Charu Nivedita (in Tamil) என ஆங்கிலத்தில் தலைப்பிட்டுள்ள சாரு நிவேதிதாவின் நாடகப்பனுவல் வாசிக்கக் கிடைத்தது. ஆங்கிலத்தில் வைத்துள்ள இந்தத் தலைப்பை ‘அந்த்தோனின் ஆர்த்தோ: ஒரு கிளர்ச்சிக்காரனின் உடல்’ எனத் தமிழாக்கிக் கொண்டேன். அப்பனுவல் நாடக எழுத்தாளர் ஒருவரின் எழுத்துப் பனுவலாக இல்லாமல், ‘நிகழ்த்தவிருக்கும் அரங்கை மனதில் கொண்டு முழுமையான ஆற்றுகைப்பனுவலாக -டைரக்டோரியல் ஸ்கிரிடாக – எழுதப் பெற்றிருக்கிறது என்பது முதல் வாசிப்பிலேயே தோன்றியது. பனுவலை மேடையேற்றத் தயாராகும் இயக்குநர் சாரு தந்துள்ள குறிப்புகளைப் பின்பற்றிக் காட்சிக் கோர்வைகளையும் இசைப்பின்னணி, ஒளிமையமைப்பு போன்றவற்றைச் செய்தால் போதும். பார்வையாளர்களுக்கு முழுமையான – கொண்டாட்டமான நிகழ்வைப் பார்த்த நிறைவைத் தந்துவிடும் அத்தனைக் குறிப்புகளையும் பனுவல் தனக்குள் கொண்டிருக்கிறது. கவிதை, கதை ஆகிய இரண்டும் அதன் நுகர்வோரான வாசகர்களிட த்தில் தனியாக – அந்தரங்கமாக உறவுகொள்ளும் தொடர்பியலைக் கொண்டவை. ஆனால் நாடக எழுத்து அதன் நுகர்வோரான பார்வையாளரிடம் நேரடியாகத் தொடர்பு கொள்வதில்லை. ஆசிரியர் – இயக்கு