மணிரத்னத்தின் அரசியல்: விமரிசனமும் மாற்று அரசியலும்

(இருவா், ஆய்த எழுத்து படங்களை முன்வைத்து) தமிழ் சினிமா முற்றமுழுதுமாக வியாபார சினிமாவாக மாறிவிட்டது மட்டுமல்ல, சினிமா பார்ப்பவா்களையும் வியாபார சினிமாவின் இன்பதுன்பங்களில் – லாப நஷ்டங்களில்ள பங்கேற்க வேண்டியவா்களாகவும் மாற்ற முயல்கின்றன. சினிமா செய்திகளைத் தரும் பத்திரிகைகளின் பங்கும் அவற்றில் உண்டு. பெரும் முதலீட்டில் எடுக்கப்படும் சினிமா வியாபார ரீதியாக வெற்றியடைந்தே தீர வேண்டும் என்ற மனோபாவம் உண்டாக்கப்படுகிறது. மணிரத்தினத்தின் “இருவர்“ வியாபார ரீதியாகத் தோல்வியடைந்தபோது வெளிப்படுத்தப்பட்ட வருத்தக்குரல்களின் உளவியல், சமூகவியல், பொருளியல் காரணிகள் ஆராயப்பட வேண்டியவை.