இடுகைகள்

கோவையோடு ஞானியும்

படம்
கோவை புத்தகக் கண்காட்சிக்குப் போயிருந்தேன். சந்தித்தவர்களில் - மேடையில் அவரின் பெயரைக் குறைந்தது பத்துப்பேராவது உச்சரித்திருப்பார்கள். கண்காட்சியில் மட்டும் என்றுகூடச் சொல்லமுடியாது. கோவையில் இருக்கும் இந்த இரண்டு மாதத்தில் நான் சந்திக்கும் பலரும் அவரது பெயரைச் சொல்வதும் அவரது தாக்கம் அவர்களுக்குள் எப்படி இருந்தது என்பதும் சொல்லப்படுகிறது. ஞானி கோவையின் இலக்கியமுகமாக இருந்துள்ளார் என்பதைத் திரும்பத்திரும்ப உணரமுடிகிறது.

கலை அடிப்படைகள் -….. கற்பிக்கின்றவர்களுக்கும் கற்கின்றவர்களுக்குமான குறிப்புகள்

படம்
கலை இலக்கியப் படைப்புகளை வகுப்பறைக் கல்வி முறையில் கற்பிப்பதுவும், கற்றுக் கொள்வதும் சாத்தியம் தானா?அப்படிக் கற்றுக் கொண்ட ஒருவர் படைப்பில் ஈடுபடுதலும் திறமான படைப்புகளை உருவாக்குதலும் இயலுமா..? இவ்வளவு ஏன்../திறமான ஆசிரியர்களால் திறமான படைப்புகள் எதுவும் உருவாக்கப்படுவது சாத்தியமில்லையே…

அரசுத்துறைகள் கவனிக்க வேண்டிய ஒன்று

படம்
இப்போது நான் பணியிலிருக்கும் கோவை குமரகுரு கல்லூரியின் ஆசிரியர்கள் அனைவரும் மேற்குத் தொடர்ச்சி மலைக் காட்டுக்குள் இருக்கும் ஒரு விடுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள்.இந்த ஆண்டின் கல்லூரிக்கான இலக்குகள், மாணவர்களுக்கு வழங்க வேண்டிய பாடங்கள், பாடங்களைத் தாண்டிய வாய்ப்புகள், நடத்தவேண்டிய விழாக்கள், கொண்டாட்டங்கள் குறித்த திட்டமிடல்களைக் கல்லூரி முதல்வரோடு கலந்தாலோசித்து துறையின் தலைவர்கள் செய்தார்கள்.

பாராட்டும் பரிசும்

  தனது பிறந்த நாளைக் கவிஞர்கள் தினமாக அறிவித்துக் கவிஞர் ஒருவருக்கு விருது அளித்து வருகிறார் பாடலாசிரியர் வைரமுத்து என்பது இதுவரை கேள்விப்பட்ட செய்தியாக இருந்தது. இன்று நேரில் பார்க்கும் நிகழ்வாக மாறிவிட்டது. இந்த ஆண்டுக்கான கவிஞர்கள்தின விருதைப் பெறும் பெயராகக்கவி சக்திஜோதி பெயர் அறிவிக்கப்பட்டபோதே அவருக்கு வாழ்த்துத் தெரிவித்ததோடு நேரிலும் வந்து வாழ்த்துவேன் எனச் சொல்லியிருந்தேன். நிகழ்வு நான் இப்போதிருக்கும் கோவையில் நடைபெறுவதாக விளம்பரத்தில் சொல்லப்பட்டதும் ஒரு காரணம்.

தொடரும் இ.பா.வின் விமரிசனங்கள்

படம்
இந்திரா பார்த்தசாரதிக்கு இன்று வயது 92 முடிந்துவிட்டது. இப்போதும் எழுதிக்கொண்டே இருக்கிறார். இம்மாத உயிர்மையில் அவர் எழுதிய கதையின் தலைப்பு: பிரிவு. இரண்டு மாதங்களுக்கு முன்னால் மே மாதத்தில் இதே உயிர்மையில் எழுதிய கதையின் தலைப்பு : பொய்க்கடவுள்.

வெளிப்பட வேண்டும்; வெளிப்படுத்த வேண்டும்: போலந்து கல்வி முறை பற்றி ஓர் அறிமுகம்.

படம்
கல்விச் சாலைகளில் பிள்ளைகளைச் சேர்ப்பது தொடங்கி ஒவ்வொரு கட்டத்தையும் இந்தியப் பெற்றோர்கள் தவிப்போடு தான் கடக்கிறார்கள். தவிப்பிலேயே பெரிய தவிப்பு பள்ளிப்படிப்புக்கு முந்திய பாலர் வகுப்புகளை நடத்தும் நிறுவனங்களில் இடம்பிடிப்பதாக இருக்கிறது. பாலர் பள்ளியைத் தொடர்ந்து தங்கள் மனம் விரும்பும் ஒரு பள்ளியில் இடம் கிடைக்கும் என்றால் இந்திய நடுத்தரவர்க்கமும் மேல் நடுத்தர வர்க்கமும் அசையும் அசையாச் சொத்தையெல்லாம் விற்றுக் கட்டிவிடத் தயாராக இருக்கிறார்கள். முந்தின நாள் இரவிலேயே பள்ளிவாசலில் படுத்து வரிசையில் நின்று விண்ணப்பப் படிவம் பெற்றுப் பணத்தைக் கட்டிவிட்டால் பிள்ளைகளின் எதிர்காலத்தைக் கவனிக்கும் பொறுப்பைத் தக்காரிடம் ஒப்படைத்துவிட்டதாக நம்பும் மனோவியாதியைப் போக்கும் மருந்து இந்தியாவில் கிடைப்பது அரிது. அதைவிடக் கூடுதலான மனத்திருப்தியைத் திருப்தியான கல்லூரி ஒன்றில் தன் பிள்ளையைச் சேர்த்துவிட்ட பெற்றோர்களிடம் காண முடிகிறது.

முதல் மரியாதை :மகிழ்ச்சியின் தருணங்கள்

படம்
கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ்ச் சமூகத்தின் செவிகளுக்கு விருந்தளித்த இசை அமைப்பாளர் இளையராஜா இந்திய அரசின் ராஜ்யசபாவின் நியமன உறுப்பினராகப் பொறுப்பேற்க உள்ளார். வாழ்த்துகள். மகிழ்ச்சி.