இடுகைகள்

ஒரு புகையிரதப் பயணமும் மகிழுந்துப் பயணமும்

படம்
சிங்களர்களோடு சேர்ந்து பயணித்த ரயில் பயணம் போலவே சொல்லப்பட வேண்டிய இன்னொரு பயணம் மலையகத்திலிருந்து அதன் இன்னொரு சமதளப்பகுதியில் இருக்கும் சப்ரகமுவ பல்கலைக்கழகத்திற்குச் சென்ற மலைப்பாதைப்பயணம். வளைந்து வளைந்து செல்லும் மலைப்பாதைப் பயணங்கள் இரவில் அமைவதைவிடப் பகலில் அமைவதே நல்லது. பார்ப்பதற்கான காட்சிகள் நிரம்பி நிற்கும். அசையும் மரங்கள் மேகத்தைத் தொட முயற்சிப்பதும், மேகத்திரள்கள் மரங்களைத் தழுவிச் செல்வதுமான காட்சிகளைப் பல பயணங்களில் பார்த்திருக்கிறேன். மேகமாக நகரும் பஞ்சுப்பொதிகள் சில நிமிடங்களில் கறுத்து இருண்டு மழைமேகமாகிப் பெய்யத்தொடங்கிவிடும். ஆனால் இந்த மலைப்பாதைப் பயணம் இரவுப்பயணம். எண்பது கிலோமீட்டர் தூரம் தான். இரண்டரை மணிநேரத்தில் போய்விடலாம் என்று சொன்னார்கள். ஆனால் தமிழே தெரியாத அந்த ஓட்டுநரோடு சென்ற அந்தப் பயணம் மூன்றரை மணிநேரமாக மாறிவிட்டது.

வல்லுநராக ஏற்றுக்கொண்ட துறை

படம்
இணைப் பேராசிரியர் ஆ கி நெல்லைக்கு வந்தபோது திருவனந்தபுரம் பல்கலைக்கழக த் தமிழ்த்துறை தான் என்னை ஏற்றுக் கொண்ட தமிழ்த்துறை. அதற்குச் சில காரணங்கள் இருந்தது. திருவனந்தபுரத்திற்கும் திருநெல்வேலிக்குமிடையே உள்ள தூரம். திருவனந்தபுரம் தமிழ்த் துறைக்கு ஒரு வல்லுநரை அழைக்க வேண்டுமென்றால் மதுரை அல்லது கோவையிலிருந்துதான் அழைக்க வேண்டும். ஆனால் காலையில் கிளம்பிப் பல்கலைக்கழக வேலை நேரத்திற்குள் வரக்கூடிய தூரத்தில் இருந்தது நெல்லை.

உமாமகேஸ்வரியின் ஸீஸா:மனவோட்டத்தின் உருவகம்

படம்
பத்திரிகைகளின் தேவைக்கு எழுத மறுக்கும் மனநிலை கொண்ட எழுத்துக்காரர்கள் தங்கள் எழுத்தையே தொடர்ந்து தாண்ட நினைக்கும் விருப்பம் கொண்டவர்கள். தொடர்ச்சியாக ஒரு தீவிர எழுத்தாளரின் பனுவல்களை – கவிதை, புனைகதை, நாடகம் என எதுவாயினும் - வாசிக்கும்போது, ஒன்றுக்கொன்று பொதுத்தன்மைகள் இருப்பதுபோலத் தோன்றும். ஆனால் குறிப்பான வேறுபாடொன்றை வாசகர்களுக்குத் தராமல் போகாது. அப்படித்தருவதில் தான் தீவிர இலக்கியம் தன்னைப் பொதுவாசிப்பிலிருந்து வேறுபடுத்திக் காட்டிக்கொள்கிறது.  

ஆய்வுகள்:செய்ய வேண்டியனவும் வேண்டாதனவும்

படம்
இது ஒருவிதத்தில் கடலில் மூழ்கி முத்துக்களைத் தேடி எடுத்து மாலையாகத் தொடுப்பது போன்ற ஒன்று. ஆனால் இங்கே தேடப்படுவதும் திரட்டப்படுவதும் அறிவு என்னும் முத்துக்களும் மணிகளும் என்பதுதான் வித்தியாசம்.

பயணங்களும் பயணிகளும்

படம்
இரண்டு மணிநேரப் பயணம் தான். இடைநில்லாப் பேருந்தில் ஏறினால் பயண நேரத்தில் முக்கால் மணி நேரம் குறையலாம். சில நிறுத்தப் பேருந்துகள் என்றால் இரண்டிற்கும் இடையில் ஒன்றரை மணி நேரம் பயணம் செய்ய வேண்டியதிருக்கும். நாகர் கோவிலுக்கும் திருநெல்வேலிக்கும் இடையில் உள்ள தூரத்தைக் கடக்க எந்த வகைப் பேருந்தைத் தேர்வு செய்வது என்ற குழப்பம் எல்லாம் இப்போது இல்லை. விரைந்து செல்லும் வாகனத்தில் ஏறி அமர்ந்து விட்டேன்.

ஊர் சுற்ற ஒரு பதவி: நாட்டுநலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர்

படம்
நமது கல்விமுறையில் வகுப்பறைக்கல்விக்கு வெளியே மாணாக்கர்கள் கூடுதலாகச் சிலவற்றைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது கொள்கை வகுப்பாளர்களின் நோக்கம். அதற்காகச் சிலவற்றை விருப்பநிலைகளாகப் பரிந்துரை செய்துள்ளனர். சமூகப்பொறுப்பு, நாட்டுப்பற்று, கிராமியநலன், பெண்கள் நலன், பொதுச் சேவையில் நாட்டம், உடல் நலம் பேணுதல், தனித்திறன்களை உருவாக்குதல் போன்றன இவ்விருப்பநிலைக் கல்வித் திட்டங்களில் கவனப்படுத்தப்படுகின்றன.