இடுகைகள்

ஸ்ரீஎன்ஸ்ரீவத்ஸா என்னும் மொழிபெயர்ப்பாளரும் கருணாகரனின் மத்தியூ கவிதைகளும்

அவரது மொழிபெயர்ப்பில் தினசரி ஒன்றிரண்டு கவிதைகள் ஆங்கிலத்தில் வாசிக்கக் கிடைக்கின்றன. எழுதிய கவிகளின் அனுமதியுடனும் மொழிபெயர்ப்புக்கான ஒப்புதலுடனும் தனது முகநூல் பக்கத்தில் பதிவேற்றம் செய்கிறார். அவரது மொழிபெயர்ப்பு வழியாகவே பல கவிகளை முதன்முதலாக வாசித்துள்ளேன். நானும் எப்போதாவது கவிதை வடிவத்தில் எனது நினைவுகளையும் நிலைப்பாடுகளையும் எழுதுவதுண்டு. அவற்றில் இரண்டு கவிதைகளை மொழிபெயர்த்துக் கவி அடையாளம் தந்து கூச்சப்பட வைத்துள்ளார்.

தரம் உயர்த்துதலும் திறன்மிகு கல்விநிறுவனமாதலும்

படம்
தரம் உயர்த்துதல் நான் பணியாற்றிய திருநெல்வேலி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம் 2018-2019 ஆம் கல்வி ஆண்டில் தேசிய தர உறுதி மற்றும் மதிப்பீட்டுக் குழுவின் (NAAC) மதிப்பீட்டின்படி நான்கிற்கு 3.13 புள்ளிகள் பெற்று A - தரநிலையை அடைந்துது. இதற்கு முன்பு அதன் தரம் 'B'. இந்தத் தர உயர்வு ஒற்றைப்புள்ளி உயர்வு அல்ல. ஒரு தாவல். B என்ற தரநிலைக்கு அடுத்து B+, B++ என்று இரண்டு நிலைகள் உண்டு. இந்த இரண்டையும் தாண்டி A -என்ற தரநிலைக்குத் தாவியுள்ளது.

பெண்ணெழுத்தின் புதிய வெளிகள்

படம்
  இணைய இதழ்களின் வருகைக்குப் பின்பு பெண்களின் உலகத்தைப் பெண்களே எழுதும் போக்கு அதிகமாகியுள்ளது. பலநேரங்களில் ஆண்களின் எழுத்துகளைவிடப் பெண்களின் பனுவல்களை அதிகம் தாங்கியதாக இணைய இதழ்கள் வந்து கொண்டிருக்கின்றன. இன்று காலை பதாகை இணைய இதழில் வந்த சுஜா செல்லப்பனின் காத்திருப்பு வாசிக்க முடிந்தது.

உள்ளூர் விருதும் உலகவிருதும்

படம்
நோபல் விருதுக்குப் பரிந்துரைகளும் எதிர்பார்ப்புகளும் முடிவுக்கு வந்துவிட்டன. அமெரிக்கப்பெண்கவியும் பேராசிரியருமான லூயி க்ளுக்கிற்கு வழங்கப்பட்டதை ஏற்க மனமின்றி நேற்றிரவு பலர் தூக்கம் தொலைத்திருக்கிறார்கள் என்பதை முகநூல் காட்டுகிறது. ஏற்பவர்களுக்கும் நிராகரிப்பவர்களுக்கும் அவரவர்க்கான காரணங்கள் இருக்கலாம். ஆனால் நோபல் விருதுக்குழுவினர் விருதுக்குரியவரைத் தேர்வு செய்ததற்கான காரணத்தைச் சொல்லி விடுகின்றார்கள். அந்தக் காரணம் இலக்கிய ஆக்கத்தின் - ஒரு போக்கின் அடையாளமாக இருக்கிறது என்ற வகையில் தெரிவுசெய்யப்பட்டவர் பொருத்தப்பாடு கொண்டவராக மாறுகிறார். கலை, இலக்கியத்தில் பல்வேறு போக்குகள் இருக்கின்றன; அதில் ஒரு போக்கு இந்த ஆண்டு கவனம் பெற்றிருக்கிறது என்ற அளவில் ஏற்பு நிகழ்கிறது. அந்தக் காரணத்தோடு ஒத்துப் போகின்றவர்கள் விருதாளரைக் கொண்டாடுவார்கள். மறுப்பவர்கள் தங்களின் இலக்கியப்பார்வையை முன்வைத்துக் கட்டுரைகள் எழுதலாம்.

பஸ்வான்: பங்கேற்பு அரசியலின் வகைமாதிரி

படம்
  பங்கேற்பு அரசியலின் அதிகப்படியான வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் தொடர்ச்சியாக இந்தியாவின் ஒன்றிய அரசில் பங்கேற்றுக் கொண்டிருந்தவர் திரு. ராம்விலாஸ் பஸ்வான். ஜனதா அரசு, வி.பி.சிங்கின் கூட்டணி அரசு, வாஜ்பாயியின் அரசு, தேவ கௌடாவின் அரசு, மன்மோகன் சிங்கின் அரசு, நரேந்திரமோடியின் அரசு என எல்லா அரசுகளிலும் அதிகாரத்துவம் கொண்ட அமைச்சராகவே இருந்தார்.

சல்காவின் கதையைச் சொல்லும் ரைனா

படம்
  பெயரையே தலைப்பாக வைத்து எழுதப்படும் இலக்கியப்பனுவல்கள், அந்தப் பெயருக்குரியவரின் பெருமைகளை அல்லது துயரங்களை விவரித்து நிலைப்படுத்தும் நோக்கம் கொண்டனவாக விரியும். தமிழின் இராமவதாரம் என்னும் இராமாயணம் நல்ல உதாரணம். உலகப்புகழ்பெற்ற நாடகாசிரியர் சேக்ஸ்பியரின் லியர் அரசன், மேக்பத்,ஹாம்லட் போன்றனவும் பெயர்களைத் தலைப்பாக்கிய நாடகங்களே . அவையும் அந்தப் பெயர்களுக்குரியவரைக் குறித்த சொல்லாடல்களையே முதன்மைப்படுத்துவன . இதற்கு மாறானவைப் பெயரைத் தலைப்பாக்காது பெயருக்குரியவர்களின் குணத்தையோ இருப்பையோ தலைப்பாக்குபவை. இப்சனின் பொம்மைவீடு, மக்கள் பகைவன் போன்ற நாடகத்தலைப்புகள் இதற்கு உதாரணங்கள். தமிழின் ஆகக்கூடிய சிறப்புகளைக் கொண்ட சிலப்பதிகாரமும் அதற்கான உதாரணம்தான். இவை தனிமனிதர்களின் பாடுகளைப் பொதுநிலையில் விவாதிக்க விரும்புவன.

திரும்பத்திரும்ப சந்திரமுகி

படம்
    ரஜினிகாந்த் நடித்த சந்திரமுகி – ஒரு சித்திரை முதல் நாளில் அரங்கிற்கு வந்தது.அதற்கிணையான விளம்பரங் களோடும் நடிக முக்கியத்துவத்தோடும்   கமல்ஹாசன் நடித்த மும்பை எக்ஸ்பிரஸும் விஜய் நடித்த சச்சினும் அதே நாளில் திரையரங்குகளுக்கு வந்தன. நடிகர்களை மையமிட்டுத் தெரிவுசெய்யும் எனது மனம் கமல், ரஜினி, விஜய் என்றே வரிசைப்படுத்தி முதலில் மும்பை எக்ஸ்பிரஸையும் இரண்டாவதாகச் சந்திரமுகியையும் கடைசியாகச் சச்சினையும் பார்த்தேன்.   மொழி , இனம் , சமயம் என ஏதாவது ஒன்றால் தம்மையொரு தனித்த குழுவாகக் கருதும் கூட்டம் , பண்பாட்டு அடையாளங்களை விழா நாட்களிலும் அந்நாட்களின் சிறப்பு  நிகழ்வுகளிலும்தான் தேடுகிறது. தமிழா்களின் முக்கிய விழா நிகழ்வுகளாகப் பொங்கல் , தீபாவளி , புத்தாண்டு போன்றன விளங்குகின்றன என்றாலும்   பொங்கல் திருநாளை மட்டுமே தமிழா்களின் விழா நாளாகக் கருதுகின்றனர். தமிழ் சினிமாக்காரா்களுக்கு இந்த வேறுபாடுகளெல்லாம் முக்கியமல்ல. அவா்களுக்குப் புதுப்படங்கள் வெளியிட விழா நாட்கள் வேண்டும் அவ்வளவுதான். அ ந்த ஆண்டு சித்திரை முதல் நாள் இந்த மூன்று படங்கள் வெளிவந்தன.   மூன்று படங்களில் திரும்பத்திரும்பப் பார்க