தன்மைக்கூற்றின் பலவீனம்: நோயல் நடேசனின் கதையொன்றை முன்வைத்து ஒரு விசாரணை
” இராமேஸ்வரத்திலிருந்து உங்களுரில் அநேக ஆவிகள் சுற்றித் திரிவதை என்னால் பார்க்க முடிகிறது . அவற்றில் நல்ல ஆவிகள் மற்றும் தீய ஆவிகள் என இரண்டு பிரிவுகள் உண்டு. அவை அனைத்துமே மரணம் அடைந்தவர்களின் ஆவிகள். ஒருவர் மரணம் அடைந்துவிட்ட பின்பு , அவர்கள் உடலில் இருந்து வெளியேறும் ஜீவன் , உடனேயே இன்னொரு பிறவி எடுக்க முடியாது. மறுபிறப்படைய வழக்கமாக ஒரு வருடகாலமாகும் . இந்த மறுபிறப்பிற்காகவே திதி செய்கிறோம் . ஆனால் , நீங்கள் பலருக்குச் செய்யவில்லை. அதனால் அவை ஆத்மாக்களாகவே சுற்றித்திரியும் . எண்ணிக்கைகள் கட்டுப்படுத்த முடியாத அளவு உங்கள் ஊரில் உள்ளன. இதில் கெட்ட ஆத்மாக்கள் நாட்டுக்கும் சமூகத்திற்கும் மறைமுகமாகக் கெடுதலை செய்யும். தற்போது உங்களூரில் போரில்லை என்பது உண்மை , ஆனால் , அமைதியில்லை. கெட்ட ஆத்மாக்களின் தீவினை இன்னமும் பலமாக உள்ளது. அவைகளே ஆபத்தானவை”